5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Spiritual: வீட்டில் குபேரர் சிலை வைக்கலாமா? – வழிபாட்டுமுறை இதுதான்!

கிண்ணம் தூக்கிய  குபேரர் சிலை இருக்கும். அந்த சிலையை வைத்தால் நமது மனது நீண்ட நாட்களாக இருக்கும் எண்ணம், கனவுகள் அனைத்தும் நிவர்த்தியாகும். தவளை மேலிருக்கும் குபேரர் சிலையை வைத்து வணங்கினால் தொழில் செய்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். தொழிலும் நல்ல வளர்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக பதவி உயர்வு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு சிறப்பான செய்தி வந்து சேரும்.

Spiritual: வீட்டில் குபேரர் சிலை வைக்கலாமா? – வழிபாட்டுமுறை இதுதான்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 12 Sep 2024 12:56 PM

குபேரர் சிலை: வீட்டு பூஜையறையில் எல்லாவித கடவுளின் படங்களும் அலங்கரிக்கும் இடத்தில் சின்னதாக ஒரு குபேரர் சிலை பெரும்பாலானவர்களின் வீடுகளிலும் இருக்கும். சிவனின் தீவிர பக்தரான குபேரன் லட்சுமி தேவியின் அருளும் ஆசியும் பெற்றவராக திகழ்கிறார். சிவனை நோக்கி செய்த தேவர் தவத்தின் பலனால் குபேரர் செல்வத்தின் அதிபதியாக காட்சி தருகிறார். இந்தக் குபேரர் சிலையை வீட்டில் வைத்தால் வாஸ்து சாஸ்திரப்படி பலவிதமான பிரச்சனைகள் தீரும் என நம்பப்படுகிறது. குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் சந்தோஷம் நிலவ குபேரரை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். அதேபோல் படுக்கை அறையில் இருந்தால் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

ஆனால் குபேரருக்கு உகந்ததே வடக்கு திசை தான். பூஜை அறையில் இருக்கும் வடக்கு திசையில் கிழக்கு நோக்கியவாறு குபேரர் சிலையை வைக்க வேண்டும். இந்த சிலையை வீட்டில் வைத்து வழிபட சில முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது எச்சில் படாத, அதே சமயம் ஏற்கனவே பூஜை வைத்து வழிபட்டு இருந்தாலும் பரவாயில்லை. ஒரு பித்தளை தட்டை எடுத்துக் கொள்ளவும். அதில் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய பட்டு துணியை சதுரமாக வெட்டி விரித்துக்கொள்ள வேண்டும். அதன் மேல் நாணயங்களை வைத்து அதற்கு மேல் தான் குபேரர் சிலையை வைக்க வேண்டும்.

குபேரருக்கு உகந்தது வியாழக்கிழமை தான். ஆனால் குபேரர் பிறந்தது பூசம் நட்சத்திரம். எனவே இந்த இரண்டு நாட்களிலும் தாராளமாக குபேரர் சிலை வீட்டில் பிரதிஷ்டை செய்து வழிபடலாம். முடிந்தவரை பூசத்தில் முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் வியாழக்கிழமை அன்று  காலை 6 மணி முதல் 7 மணி வரைக்குள் குபேரர் சிலையை வாங்கி வைக்கலாம்.

Also ReadNirmala Sitharaman: ஜிஎஸ்டியால் கடை நடத்த முடியல.. நிர்மலா சீதாராமனிடம் புலம்பிய தொழிலதிபர்!

குபேரர் சிலையில் பலன்கள்

பொதுவாக குபேரர் சிலையை நாமாக நேராக போய் வாங்கக்கூடாது. யாராவது பரிசாக தர வேண்டும் என சொல்வார்கள். குறிப்பாக பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாராவது இந்த குபேரர் சிலையை பரிசாக தந்தால் அது கொடுத்தவர், வாங்குபவர் இருவருக்கும் சிறந்த பலன்களை கொடுக்கிறது. இதில் வாங்குபவர்கள் இரட்டிப்பு பலன்களை பெறுவார்கள். அவர்களின் செல்வ வளம் பெருகிக்கொண்டே போகும் என்பது நம்பிக்கையாகும்.

மேலும் விசிறி வைத்த குபேரர் சிலைகள் வீட்டில் வைத்தால் ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோரின் மருத்துவ பிரச்சனைகள் சரியாகும். சிரிக்கக் கூடிய குபேரர் சிலைகளை வீட்டில் வைத்தால் என்றைக்கும் அமைதியான சூழ்நிலை நிலவி மகிழ்ச்சியை தரும். எப்போதும் வீட்டில் மகிழ்ச்சியான செய்தி கேட்டுக் கொண்டிருக்கும்.

கிண்ணம் தூக்கிய  குபேரர் சிலை இருக்கும். அந்த சிலையை வைத்தால் நமது மனது நீண்ட நாட்களாக இருக்கும் எண்ணம், கனவுகள் அனைத்தும் நிவர்த்தியாகும். தவளை மேலிருக்கும் குபேரர் சிலையை வைத்து வணங்கினால் தொழில் செய்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். தொழிலும் நல்ல வளர்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக பதவி உயர்வு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு சிறப்பான செய்தி வந்து சேரும்.

Also Read: தலை அசைத்தாலே Call Attend ஆகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4!

நீங்கள் அசைவம் சாப்பிடுவாராக இருந்தால் குபேரர் சிலையை வீட்டில் வரவேற்பறை  மற்றும் பெட்ரூமில் வைக்கக் கூடாது. பூஜை அறையில் மட்டும் வைத்து வழிபட வேண்டும். சைவம் சாப்பிடுவார்கள் எங்க வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

நின்ற கோலத்தில் இருக்கும் குபேரர் சிலையை வைத்து வணங்கினால் வேலை மற்றும் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும். செல்வ வளம் பெருகும்.வீட்டில் வைத்து வணங்குவதால் பெண்களுக்கு தைரியம் கிடைக்கும். சயன கோலத்தில் இருக்கும் குபேரர் சிலையை வணங்கினால் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் வளரும். வீட்டில் வயதானவர்கள் தான் அவர்கள் தங்கள் வாழ்நாள் மீது கவலை இருக்கும். அது எல்லாம் நீங்கி தைரியம் கிடைக்கும். பொதுவாக இந்த வகையான சிலைகள் கடைகளில் கிடைப்பது அரிது. அப்படி கிடைத்தால் தயங்காமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News