5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Spiritual Tips: வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டுமா? – இதை ஃபாலோ பண்ணுங்க!

மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய சின்ன சின்ன விஷயங்கள் செய்ய வேண்டும். அதாவது, வீடு என்பது மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலம், அதனைத் தொடர்ந்து வாசமுள்ள செடி, வாசலில் நிலை கண்ணாடி அல்லது கற்பக விநாயகர் படம் ஆகியவை நுழையும் இடத்தில் வரக்கூடியவர்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். அப்படி வைத்த துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காது.

Spiritual Tips: வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டுமா? – இதை ஃபாலோ பண்ணுங்க!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 09 Sep 2024 12:00 PM

மகாலட்சுமி அருள்: பொதுவாக ஒரு வீட்டில் மகாலட்சுமி அருள் தங்க வேண்டும் என்றால் என்னென்ன எல்லாம் செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய சின்ன சின்ன விஷயங்கள் செய்ய வேண்டும். அதாவது, வீடு என்பது மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலம், அதனைத் தொடர்ந்து வாசமுள்ள செடி, வாசலில் நிலை கண்ணாடி அல்லது கற்பக விநாயகர் படம் ஆகியவை நுழையும் இடத்தில் வரக்கூடியவர்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். அப்படி வைத்த துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காது. வீட்டு வாசல் எந்த திசையில் இருந்தாலும் இதை வைக்கலாம்.

Also Read: தமிழ் திரையுலகிலும் ‘ஹேமா கமிட்டி’.. அதிரடியில் இறங்கிய நடிகை ரோகிணி.. பெரிய தலைகள் சிக்குமா?

வீட்டுக்கு உட்புறம் பார்த்த மாதிரி மகாலட்சுமி படம் வைக்க வேண்டும். வெளியே தெரிவது மாதிரி நிறைய பேர் வைக்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது. இதனால் வாஸ்து பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். வீட்டில் சுத்தம் நிறைந்திருக்க வேண்டும். மனிதர்களாகிய நாம் சுத்தம் இருந்தால் தான் ஒரு இடத்தில் அமர்கிறோம்.அப்படியிருக்கும்போது கடவுள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பூஜை அறை மற்றும் சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையில் எப்போதும் நறுமணம் மிகுந்த வாசனை வந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வரக்கூடிய பெண்களுக்கு அவர்கள் வெளியே செல்லும்போது குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். அதேபோல வீட்டுக்கு வருபவர்களை மனமகிழ்ச்சியுடன் வரவேற்று அன்புடன் உபசரிக்க வேண்டும். பெண்களுக்கு குங்குமம் கொடுத்து அனுப்புவதால் மகாலட்சுமி நம் இல்லத்தில் என்றைக்கும் நிறைந்து இருப்பாள் என்பது நம்பிக்கை ஆகும்.

Also Read: Maha Vishnu: “சித்தர் சொல்லிதான் பேசினேன்” அடித்துவிடும் மகா விஷ்ணு.. பரபர வாக்குமூலம்!

அதேபோல் வீட்டின் பூஜையறையில் வெள்ளிக்கிழமையில் ஒரு தட்டில் நாணயங்களை போட்டு பூஜை செய்து அதனை ஒரு குவியலாக்கி வழிபட வேண்டும். அவ்வாறு செய்வதால் என்றைக்கும் நம் வீட்டில் மகாலட்சுமி அருளோடு செல்வ வளமும் வந்து சேரும். அதே சமயம் சமையலறையில் மஞ்சளும் உப்பும் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். மற்ற பொருட்களைப் போல தீர்ந்து உடன் வாங்கி வைக்கும் பழக்கம் வைத்திருக்கக் கூடாது. மேலும் வெள்ளிக்கிழமை மட்டுமல்லது உங்களுக்கு எந்த நாள் ஏற்புடையதாக இருக்கிறதோ அந்த நாளில் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் சொல்வதால் மகாலட்சுமி அருளை பெறலாம். மகாலட்சுமியின் அருளைப் பெற பல விஷயங்களை பின்பற்ற வேண்டும் என சொல்லப்பட்டாலும் அதில் சில விஷயங்களை நாம் செய்தாலே பரிபூரண அருளைப் பெறலாம்.

Latest News