Spiritual Trip: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்யும் பசுமாடு.. என்ன காரணம்?

இந்திய வாழ்க்கை முறையிலும் சரி, குறிப்பாக இந்து மதத்திலும் சரி பசு மாடு ஒரு புனிதமான செல்லப் பிராணியாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் பசுவின் பால் மட்டுமல்ல, சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவை கூட விவசாய நோக்கங்களுக்காகவும் சில சமயங்களில் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்து கடவுள்களின் உருவமாக பசுமாடு  வழிபடப்படுகிறது.

Spiritual Trip: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்யும் பசுமாடு.. என்ன காரணம்?

கோப்பு புகைப்படம்

Updated On: 

22 Nov 2024 11:07 AM

பசுமாடு பயணம்: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பசுமாடு ஒன்று யாத்திரை மேற்கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பொதுவாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கராச்சாரியார் யாத்திரை மேற்கொண்டார் என வரலாறு சொல்கிறது. அதற்குப் பிறகும் பல முக்கிய பிரபலங்கள் இந்தியாவில் அதிக அளவில் சுற்றுப்பயணம் செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் விமானங்கள், ரயில்கள், விரிவடைந்த சாலை போக்குவரத்து ஆகியவையும் பல்வேறு இடங்களுக்கும் வேகமாக பயணிக்கக் உதவுகிறது. ஆனால், முறையான சாலைகள் இல்லாத அந்தக் காலத்தில் அடர்ந்த காடுகளையும், ஆறுகளையும், மலைகளையும், மேடுகளையும் கடந்து நடந்தே செல்லும் பயணங்கள் மிகவும் சாகசமான ஒன்றாக பார்க்கப்பட்டது.

இந்த நாட்களிலும் பாதயாத்திரைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆன்மிக ரீதியான பயணங்கள் சபரிமலை, திருச்செந்தூர், பழனி என பல்வேறு கோயில்களிலும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. இப்படியாக செயல்களை மேற்கொள்ளும்  சிலர் அரசியல் நோக்கத்திற்காகவும் பாதயாத்திரை செல்கிறார்கள். சுற்றுச்சூழல் உள்ள பல கருத்துகளை வலியுறுத்தி பாதயாத்திரை செய்பவர்களும் தொடர்ச்சியாக பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.

Also Read: Major Mukund : ‘அமரன்’ படம் உருவாக காரணமான மேஜர் முகுந்த்.. யார் இந்த வீரர்? என்ன நடந்தது?

பசுமாடுவின் பாதயாத்திரை

இப்படியான நிலையில் பசு மாடு ஒன்று மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பாதயாத்தியை மேற்கொண்டுள்ளது. பொதுவாக இந்தியாவை பொறுத்தவரை தெற்கு எல்லையாக அமைந்துள்ள கன்னியாகுமரி தொடங்கிய வடக்கு எல்லையான காஷ்மீர் வரை பாதயாத்திரை பயணம் அமைவது வழக்கம். ஆனால் பசு மாடு மேற்கொண்டுள்ள யாத்திரை காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ளது.  தலைநகர் புது டெல்லியை வந்தடைந்த பசு மாட்டின் இந்த மகா பாதயாத்திரை மார்ச் மாத இறுதியில் கன்னியாகுமரியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்து சமய வாழ்வியல் முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்,  புனிதமானதாகவும் கருதப்படும் ‘பசுவை’ காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையை இந்துத்தாவை ஆதரிக்கும் பல அரசியல் கட்சி தலைவர்கள்பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: Diwali 2024: தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?

இந்திய வாழ்க்கை முறையிலும் சரி, குறிப்பாக இந்து மதத்திலும் சரி பசு மாடு ஒரு புனிதமான செல்லப் பிராணியாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் பசுவின் பால் மட்டுமல்ல, சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவை கூட விவசாய நோக்கங்களுக்காகவும் சில சமயங்களில் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்து கடவுள்களின் உருவமாக பசுமாடு  வழிபடப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் இரசாயன உரங்கள் வந்த பிறகு, மாடுகள் பாலூட்டும் விலங்குகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் மாடுகள் அடிமாட்டுக்கு விற்பனையும் செய்யப்படுகிறது. இந்நிலையை தவிர்க்க பல இந்து அறநிலைய அமைப்புகள் போராடி வருகின்றது. இந்த நடவடிக்கையின் அடிப்படையில் சில மாநிலங்களில் பசு வதை தடைச்சட்டம் அமல் செய்யப்பட்டுள்ள நிலையில், இறைச்சி கூடங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read: Viral Video : திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்ல மறுத்த மணப்பெண்.. குண்டுகட்டாக தூக்கிச் சென்ற குடும்பத்தினர்!

உற்சாக வரவேற்பு

ஆனால், இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் விவாதத்தை எழுப்பி, பசுப் பாதுகாப்பால் மட்டுமே நிலப் பாதுகாப்பு சாத்தியம் எனக் கூறி, பசுவுடன் இணைந்து ஒரு அமைப்பினர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். அகில பாரத் கோசேவா அறக்கட்டளையால் மேற்கொள்ளப்படும் இந்தப் பாதயாத்திரை 14 மாநிலங்களில் 4,900 கி.மீ தூரம் பயணித்து இறுதியாக கன்னியாகுமரியில் நிறைவடையும்.

செப்டம்பர் 27-ம் தேதி காஷ்மீரில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது தலைநகர் டெல்லியை வந்தடைந்துள்ளது. இந்த யாத்திரை பற்றி அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பசுவுடன் பாதயாத்திரை செல்லும் குழுவினரை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!