Astrology: தடைகளை உண்டாக்கும் சூலம் திசை.. என்னென்ன பரிகாரங்கள் தெரியுமா?

ஒரு வீட்டில் கிரகப்பிரவேசம் அல்லது பால் காய்ச்சும் வைபவம் நடைபெறுவதாக இருந்தால் அந்த வீட்டினர் வார சூலை பார்ப்பது அவசியம். பஞ்சாங்கத்தில் திங்கள் மற்றும் சனிக்கிழமை கிழக்கே சூலம் எனவும், ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமை மேற்கே சூலம் எனவும், செவ்வாய் மற்றும் புதன்கிழமை வடக்கே சூலம் எனவும் , வியாழக்கிழமை தெற்கே சூலம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் சூலத்திற்கு ஏற்ற பரிகாரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Astrology: தடைகளை உண்டாக்கும் சூலம் திசை.. என்னென்ன பரிகாரங்கள் தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

05 Oct 2024 22:23 PM

சூலம் பலன்கள்: ஜோதிட சாஸ்திரத்தின் நம்பிக்கைகள் நம் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை உண்டாக்குகிறது. ஒவ்வொரு நாளும் தொடங்கி முடியும் வரை அந்த நாள் கிரகப்பலன்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்தது. அந்த வகையில் நாம் என்ன விஷயம் செய்தாலும் அதில் கண்டிப்பாக நல்ல நேரம் உள்ளிட்ட பஞ்சாங்க விஷயங்களை பார்க்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அந்த வகையில் நாம் எதாவது ஒரு காரியத்துக்காக பயணம் மேற்கொள்ளும்போது தான் நம்முடைய வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சூலம் பார்ப்பார்கள். இந்த சூலம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது. தினசரி காலண்டர் பார்க்கும் பழக்கமுடியவர்களாக இருந்தால் அதன் ஓரத்தில் சூலம் என குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால் அப்படி என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக பஞ்சாங்க கணிப்பின்படி வெப்பம், சூடு அதிகமாக இருக்கும் திசை சூலமாக அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?

சூரியன், செவ்வாய், சந்திரன், குரு, புதன், சனி, சுக்கிரன் ஆகிய கோள்கள் ஏழும் வார நாட்களாக கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கோளுக்கும் உரிய இசைக்கு எதிர் திசையை அந்த நாளுக்குரிய சூலம் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக சூரியன் சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு வெள்ளிக்கிழமைகளில் மேற்கே சூலம் என தெரிவிக்கப்பட்டிருக்கும். அதேபோல் சந்திரன் சனி ஆகியவற்றின் திசை மேற்கு என்றால் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் என தெரிவிக்கப்பட்டிருக்கும். அதேசமயம் தாய் சேய் நலம் பாதிக்க கூடாது என்ற எண்ணத்தில் குறிப்பிட்ட நாட்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் திசையில் பயணம் செய்யக்கூடாது என முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள். ஒருவேளை சூலம் என குறிப்பிட்ட திசையில் அன்றைய நாளில் கட்டாயம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பகல் 12 மணிக்கு மேல் பால் அல்லது தயிர் சாப்பிட்டுவிட்டு பயணிக்கலாம் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவல் பணியாகவோ தொழில் முறையிலோ அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களாக இருந்தால் சூலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் புதிதாக திருமணமானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நல்ல காரியத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும் அவர்கள் ஆகியோர் கண்டிப்பாக சூலம் பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகமாக இருப்பதால் நாம் பயணிக்கும் போது நம்முடைய உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதைக் கொண்டு இது கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒரு வீட்டில் கிரகப்பிரவேசம் அல்லது பால் காய்ச்சும் வைபவம் நடைபெறுவதாக இருந்தால் அந்த வீட்டினர் வார சூலை பார்ப்பது அவசியம். அதாவது வீட்டின் தலைவாசல் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி கிழக்கு பார்த்த வாசலாக இருந்தால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுமனை புகுவிழா நடத்தக்கூடாது.

இதையும் படிங்க:  Chennai Jobs: டிகிரி முடித்தவரா? ரூ.1.60 லட்சம் சம்பளம்.. சென்னை மெட்ரோவில் சூப்பரான வேலை.. உடனே பாருங்க!

என்ன கிழமையில் என்ன சூலம்?

பஞ்சாங்கத்தில் திங்கள் மற்றும் சனிக்கிழமை கிழக்கே சூலம் எனவும், ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமை மேற்கே சூலம் எனவும், செவ்வாய் மற்றும் புதன்கிழமை வடக்கே சூலம் எனவும் , வியாழக்கிழமை தெற்கே சூலம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் சூலத்திற்கு ஏற்ற பரிகாரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கு திசைக்கு தயிரும், வடக்கு திசைக்கு பசும்பாலும், தெற்கு திசைக்கு நல்லெண்ணையும், மேற்கு திசைக்கு வெல்லமும் சேர்த்த ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்டுவிட்டு நாம் செல்ல வேண்டிய பயணத்தை மேற்கொள்ளலாம்.

திங்கள் மற்றும் சனிக்கிழமை தெற்கு திசையில் பயணம் செய்தால் பணவரவு கிடைக்கும் என நம்பப்படுகிறது. செவ்வாய் அன்று கிழக்கே பயணம் செய்தால் வேண்டிய பொருளும், புதன் மற்றும் வியாழனில் மேற்கில் பயணம் செய்தால் நினைத்த காரியத்தில் வெற்றியும், ஞாயிறு மற்றும் வெள்ளி கிழமைகளில் வடக்கில் பயணம் செய்தால் தானிய லாபமும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!