Vinayaga Chaturthi: விநாயகர் சதுர்த்தி.. எந்த பிள்ளையார் வைத்து வழிபட்டால் சிறப்பு? - Tamil News | Spiritual Which vinayagar is special if worshiped on Ganesh Chaturthi? | TV9 Tamil

Vinayaga Chaturthi: விநாயகர் சதுர்த்தி.. எந்த பிள்ளையார் வைத்து வழிபட்டால் சிறப்பு?

Published: 

30 Aug 2024 18:00 PM

நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் 10 நாட்கள் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். வீதிகள் முழுக்க விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்படும். நம்முடைய வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். இந்நாளில் விரதமிருந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் யாவும் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

Vinayaga Chaturthi: விநாயகர் சதுர்த்தி.. எந்த பிள்ளையார் வைத்து வழிபட்டால் சிறப்பு?

கோப்பு புகைப்படம்

Follow Us On

விநாயகர் சதுர்த்தி: முழு முதற்கடவுளாக நாம் கொண்டாடும் விநாயகப்பெருமான் அவதரித்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் இந்த பண்டிகை கொண்டாடப்படும். நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் 10 நாட்கள் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். வீதிகள் முழுக்க விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்படும். நம்முடைய வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். இந்நாளில் விரதமிருந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் யாவும் நடைபெறும் என்பது ஐதீகமாகும். பொதுவாக நம்முடைய வீடுகளில் சாணம், மஞ்சள், குங்குமம் என பல பொருட்களிலும் விநாயகர் உருவம் படைத்து வழிபடும் முறை உள்ளது. அப்படியிருக்கும் நிலையில் எந்தெந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என காணலாம்.

Also Read: Astrology: கிரகங்களின் பெயர்ச்சி.. இந்த 6 ராசிக்கு நாள்பட்ட நோய்கள் குணமாகும்!

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புகள் வந்து சேரும். நினைத்தது நடக்கும். மண் பிள்ளையார் பிடித்து வழிபடும்போது சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கும். அதேபோல் வருமானமும் உயரும். மேலும் உயர் பதவிகளும் கிடைக்கும்.

திருநீறில் பிள்ளையார் செய்து வழிபடும்போது உடலில் இருக்கும் நாள்பட்ட நோய்கள் தீரும். உத்தியோக பணிகளில் பதவி உயர்வு இருக்கும். புற்று மண்ணில் பிள்ளையார் செய்து வழிபட்டால் தொழிலில் லாபம் பெருகும். சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். விவசாயிகளுக்கு விளைச்சலும் வருமானமும் அதிகரிக்கும்.

சந்தனத்தில் விநாயகர் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும். இதே போல் வெள்ளத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். உப்பில் விநாயகர் செய்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும். வேப்ப மரத்தில் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டாலும் இதே பலன் கிடைக்கும். குங்குமத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்குவதோடு குழந்தைகள் கல்வியும் மிக சிறந்து விளங்குவார்கள்.

Also Read: EPFO : 7 சிறப்பு ஓய்வூதிய திட்டங்களை வழங்கும் EPFO.. இவ்வளவு பலன்களா.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் நீண்ட நாட்கள் ஆக தீராமல் இருக்கும் நோய்கள், வராமல் இருக்கும் கடன் ஆகியவை தீரும். பசும் சாணத்தில் விநாயகர் செய்து வழிபட்டால் வேண்டியது நிறைவேறும். மேலும் நோய்கள் நீக்கி நான் வரைக்கும் மேம்படும். பச்சரிசி மாவில் பிள்ளையார் செய்து வழிபட்டால் விவசாயிகளின் வளர்ச்சி அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகளோடு பண வரவும் தாராளமாக இருக்கும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version