Sun Transit: விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்.. 4 ராசிக்கு கவனம் தேவை!

Sun Transit in Scorpion: கிரகத்தின் அதிபதியான சூரியன் நாளை அதாவது சனிக்கிழமை விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறார். இது சில ராசிகளுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். வியாபாரத்தில் லாபம் மற்றும் மற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ரிஷபம், மேஷம், கும்பம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கு நேரடியாக சில தாக்கத்தை ஏற்படுத்தும்.

Sun Transit: விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்.. 4 ராசிக்கு கவனம் தேவை!

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Updated On: 

15 Nov 2024 21:24 PM

கிரகத்தின் அதிபதியான சூரியன் நவம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை விருச்சிக ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சூரியனின் இந்த சஞ்சாரத்தால் சில ராசிகளுக்கு கெட்ட நேரம் தொடங்கும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும். சூரியனின் இந்த மாற்றத்துடன், சனி சூரியனை நேரடியாக சந்திக்கும். இத்தகைய சூழ்நிலையில் சூரியனின் இந்த மாற்றம் பல ராசிகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தில், தந்தைக்கும் மகனுக்கும் சூரியனுக்கும் சனிக்கும் இடையிலான உறவு சுபமாக கருதப்படுவதில்லை. அதனால் தான் இந்த நேரம் சில ராசிக்காரர்களுக்கு நேரிடையாக தாக்கத்தை ஏற்படுத்தி சில சங்கடமான சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது.

நாளை சூரியனின் பெயர்ச்சி காரணமாக பல ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். பஞ்சாங்கத்தின்படி, சூரியன் நவம்பர் 16, 2024 அன்று காலை 7:32 மணிக்கு விருச்சிக ராசியில் நுழைகிறார். இந்நிலையில் நாளை முதல் ஒரு மாதம் வரை சில ராசிக்காரர்கள் பல சிரமங்களையும் நஷ்டங்களையும் சந்திக்க நேரிடலாம். எனவே அந்த ராசிக்காரர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தவித சிரமங்களை சந்திக்கப் போகிறார்கள் என்பது தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சில மன அழுத்தம் இருக்கும். சகோதர சகோதரிகளிடையே வாக்குவாதம் வரலாம். வீட்டில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். மேலும், இந்த ராசியை சேர்ந்தவர்கள் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும். விபத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் எங்காவது முதலீடு செய்ய நினைத்தால் சற்று பொறுமை காப்பது அவசியம். ஏனெனில் இது முதலீட்டிற்கு ஏற்ற காலம் அல்ல. வாழ்க்கைத் துணையுடனான உறவிலும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

ரிஷபம்:

விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், ரிஷப ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களுக்கு இந்த நேரம் மன அழுத்தமாக இருக்கும். பணியாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த ராசியை சேர்ந்தவர்கள் நீண்ட பயணத்தை திட்டமிட்டு இருந்தால் அதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அதனால் பயணத்தை தள்ளி வைக்க முயற்சி செய்யுங்கள். உறவை கெடுக்காமல் இருக்க உங்கள் துணையுடன் கவனமாக இருங்கள்.

Also Read: சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு.. பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

சிம்மம்:

சனிக்கிழமை முதல் சூரியனின் சஞ்சாரத்தின் தாக்கம் சிம்ம ராசிக்காரர்களிடமும் காணப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சச்சரவுகள் அதிகரிக்கலாம். உடல்நலம் சம்பந்தமாக சில பிரச்சனைகள் வரலாம். பணியாளர்களுக்கு வேலை அழுத்தம் அதிகரிக்கும். அவர்கள் மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இந்த நேரத்தில் உங்கள் முதலாளி அல்லது மூத்தவர்களிடம் கவனமாக இருக்கவும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் இல்லையெனில் அது தீங்கு விளைவிக்கும்.

Also Read: Sai baba: நினைத்தது நிறைவேறும்! – சாய்பாபாவின் 9 வியாழக்கிழமை விரதம் பற்றி தெரியுமா?

கும்பம்:

சூரிய பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பதால் கும்ப ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் சொத்து சம்பந்தமான  விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நிலம் அல்லது சொத்து தொடர்பான சர்ச்சையில் ஈடுபடலாம். அரசாங்கப் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம் அதனால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். நிதி நிலை பலவீனமடையலாம். தொழிலதிபர்கள் இந்த நேரத்தில் நீண்ட பயணங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த பயணங்களால் அதிக பலன் இருக்காது. இந்த நேரம் உங்களை அதிகமாக சோருடைய செய்யும். எனது சோர்ந்து விடாமல் இந்த நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். இந்த நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையாக புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?