Marundeeswarar Temple: தீரா நோய்களையும் தீர்க்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர்!
ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயிலின் முன் பகுதி கிழக்கு திசையில் கடற்கரை நோக்கி உள்ள நிலையில் பெரும்பாலானோர் பின்புற வாசலை பயன்படுத்தி உள்ளே வருகின்றனர். ஆனால் மருந்தீஸ்வரர் கோயில் மட்டுமல்ல எந்த கோயில் என்றாலும் எந்த திசையில் இருந்தாலும் அதன் முன்வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும், முன்வாசல் வழியாக தான் வெளியேற வேண்டும்.
மருந்தீஸ்வரர் கோயில்: சிவபெருமான் ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கிறார். அந்த வகையில் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயம் பற்றி நாம் காணலாம். இந்தக் கோயில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை தொடங்கும் பகுதியில் உள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் இக்கோயிலில் நாம் சாமி தரிசனம் செய்யலாம். இந்த கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, பௌர்ணமி மற்றும் கிருத்திகை ஆகியவை சிறப்பான நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இந்த மருந்தீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 25வது தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இங்கு சிவலிங்கம் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவனின் தேவார பாடல் பெற்ற 224 சிவ ஆலயங்களில் இந்த மருந்தீஸ்வரர் கோயில் 258 வது இடத்தை பிடித்துள்ளது.
ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயிலின் முன் பகுதி கிழக்கு திசையில் கடற்கரை நோக்கி உள்ள நிலையில் பெரும்பாலானோர் பின்புற வாசலை பயன்படுத்தி உள்ளே வருகின்றனர். ஆனால் மருந்தீஸ்வரர் கோயில் மட்டுமல்ல எந்த கோவில் என்றாலும் எந்த திசையில் இருந்தாலும் அதன் முன்வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும், முன்வாசல் வழியாக தான் வெளியேற வேண்டும்.
Also Read: Temple Special: மாங்கல்யம் காக்கும் மகா காளியம்மன்.. குவியும் பக்தர்கள்!
கோயில் வரலாறு
ஒருமுறை வசிஷ்ட முனிவர் சிவபூஜை ஒன்றை மேற்கொண்டு இருந்தார். இந்த பூஜைக்காக இந்திரன் தன்னிடம் இருந்த காமதேனுவை அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்ததால் வசிஷ்ட முனிவர் கோபம் கொண்டார். அது புனிதத் தன்மை இழந்து காட்டு பசுவாக மாற வேண்டும் என சாபம் கொடுத்தார். இதனால் கலங்கிப்போன காமதேனு தனக்கு சாபவிமோசனம் வேண்டும் என கேட்டுள்ளது.
இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் மீண்டும் புனித தன்மை பெறுவாய் என வசிஷ்ட முனிவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காமதேனு சிவன் மீது தினசரி பால் சுரந்து சாப விமோசனம் பெற்றது. இதனால் இங்குள்ள சிவலிங்கம் பால்வண்ணநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி திரும்பி இங்குள்ள சிவனை வணங்கி வந்துள்ளார். அப்படி ஒருநாள் அவர் தரிசனம் செய்ய வந்தபோது அவரைக் கண்டு காமதேனு பயந்து ஓடியுள்ளது. அப்போது பசுவின் கால் சிவலிங்கம் இருந்த இடத்தில் தெரியாமல் பட்டதால் சுவாமியின் திருமேனியில் தடம் பதிந்தது. இன்றும் கூட இக்கோயிலில் சுவாமியின் தலையிலும் மார்பிலும் பசு மிதித்த தடம் இருப்பதை காணலாம்.
அதேபோல் அகத்திய முனிவர் இங்கு வந்து சிவனை வணங்கி தவம் செய்தார். அப்போது அவருக்கு வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றிய நோய்களுக்கு உண்டான மருந்துகளை பற்றியும் மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்துள்ளார். இதன் காரணமாக சிவன் மருந்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
Also Read: TN Govt Hospital Jobs: மாதம் ரூ.25,000 சம்பளம்.. அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
மேலும் அபய தீட்சிதர் என்ற பக்தர் சுவாமியை வழிபட வந்தபோது கடும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவரால் நீரை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் முதுகுப்பகுதியை மட்டும் தான் தரிசிக்க முடிந்தது. இதனால் வருத்தம் கொண்ட அபய தீட்சிதர் ஈசனே உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள் புரிய மாட்டாயா என கேட்டுள்ளார். அவருக்காக மனம் இறங்கி கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கும் சிவன் திரும்பி மேற்கு திசையில் காட்சி தந்தார். அதனால் மருந்தீஸ்வரர் கோயிலில் சிவன் மட்டும் மேற்கு திசை நோக்கி காட்சி தருவார். அம்பாள் சுவாமிக்கு பின்புறமாக தெற்கு திசை நோக்கியும் முருகன் விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.
மருந்தீஸ்வரர் கோயிலில் பாலபிஷேகம் செய்து வணங்கி விபூதி பிரசாதம் உண்டு வந்தால் தீராத நோய்கள் மற்றும் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சிவன் காட்சி தந்ததாக கூறப்படும் வன்னி மரத்தை சுற்றி வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். திருடனாக இருந்த வால்மீகி மனம் திறந்து சிவனை வணங்கி வந்த நிலையில் அவர் இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் இருந்த இடம் திருவால்மிகியூர் என அழைக்கப்பட்டு பின்னாளில் திருவான்மியூர் என பெயர் மாற்றம் பெற்றது.