Uraiyur Vekkaliyamman Temple: வேண்டிய வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன் கோயில்!

Tiruchirappalli: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சரியாக 6 கி.மீ., தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் வெக்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இருந்து மக்கள் ஆண்டுதோறும் வருகை தருகிறார்கள். இந்த உறையூருக்கு வாகபுரி, முக்கீஸ்வரம் மற்றும் கோழியூர் என 3 பெயர்கள் உண்டு.

Uraiyur Vekkaliyamman Temple: வேண்டிய வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன் கோயில்!

கோப்பு புகைப்படம்

Published: 

10 Nov 2024 14:38 PM

வெக்காளியம்மன் கோயில்: தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமான திருச்சிராப்பள்ளியின் மேற்பகுதியில் அமைந்துள்ளது உறையூர். இங்கு வெக்காளியம்மன் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலானது காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும். அடிக்கடி பேருந்து வசதியும் உண்டு.

Also Read: Sabarimala: பெரிய வழி vs சிறிய வழி .. ஐயப்பனை காண எது சிறந்தது?

கோயில் உருவான வரலாறு

சோழ மன்னன் பரந்தாகன் உறையூரை ஆண்டு வந்த நிலையில் அவரதிருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சரியாக 6 கி.மீ., தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் வெக்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இருந்து மக்கள் ஆண்டுதோறும் வருகை தருகிறார்கள். இந்த உறையூருக்கு வாகபுரி, முக்கீஸ்வரம் மற்றும் கோழியூர் என 3 பெயர்கள் உண்டு. து ராஜகுருவாக சாரமா முனிவர் இருந்தார். இவர் மிகப் பெரிய சிவ பக்தர் ஆவார். அதன் காரணமாக திருச்சி மலைக்கோட்டையில் ஒரு நந்தவனத்தை உருவாக்கியது மட்டும் அல்லாமல் அங்கு தாயுமான சுவாமிக்கு தினந்தோறும் பூஜை செய்து வந்தார். பூஜை வழிபாட்டிற்காக அந்த நந்தவனத்தில் ஏராளமான பூக்களை சாரமா முனிவர் வளர்த்தார். ஒருமுறை பரந்தாக சோழன் மன்னன் தனது மனைவி புவனமாதேவிக்கு பூக்களை சூட அந்த நந்தவனத்தில் இருந்து மலர்களை பறித்துச் சென்றான்.

இது தினமும் தொடர்கதையான நிலையில் பூக்களை பறிக்க வரும் பணியாளர்கள் சாரமா முனிவரிடம் அனுமதி பெறாமல் இச்சம்பவத்தை நடத்தினர். ஒரு கட்டத்தில் முனிவருக்கு விஷயம் தெரிந்த நேராக மன்னனிடம் சென்று, நாடு காக்கும் தாங்கள் இப்படி மலர்களைப் பறித்து செல்வது முறையா? என முறையிட்டார். ஆனால் பரந்தாக சோழன் முனிவரின் பேச்சை சற்றும் மதிக்கவே இல்லை.

மேலும் என்னுடைய மனைவிக்கு போக மீதி பூக்கள் தான் இறைவனுக்கு கிடைக்கும் என ஆணவம் கொண்டும் பேசினான். இதனால் மனம் வருந்திய சாரமா முனிவர் நேரடியாக இறைவனிடம் சென்று முறையிட்டார். இதனால் கடும் கோபம் கொண்ட தாயுமான  சுவாமி, கிழக்கு நோக்கி இருந்த நிலையில் மேற்கு முகமாக உறையூரை நோக்கி திரும்பினார். மேலும் தனது நெற்றிக் கண்ணை திறந்தார்.

உடனே உறையூர் மீது நெருப்பு மழை பொழிந்தது. மக்கள் ஊரைவிட்டு ஓடிய நிலையில் மன்னனின் கோட்டை பொசுங்கி போனது. அந்த ஊரே மண்ணில் புதைந்து விட்ட நிலையில் வீடுகளை இழந்த மக்கள் நெருப்பு மலையில் பாதிக்காமல் இருந்த உறையூர் வெக்காளியம்மன் கோயிலை கண்டனர். அங்கு சென்று தஞ்சமடைந்து தங்கள் வீடுகளை தங்களுக்கு திருப்பித் தரும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

Also Read: Astrology: விருச்சிக ராசியில் புதன்.. 6 ராசிக்கு வாழ்க்கையே அடியோடு மாற வாய்ப்பு!

முழு நிலவாக மாறிய வெக்காளியம்மன்

இதனால் மனம் இறங்கிய வெக்காளியம்மன் தாயுமான சுவாமியின் சினத்தை தணிக்க முழு நிலவாக மாறினாள். அவர் முன்பு தோன்றி குளிர்ந்த பார்வையை இறைவன் மீது வீச தாயுமான சுவாமி கோபம் குறைந்து நெருப்பு மழை நின்றது. இந்த நெருப்பு மழையில் அரசி புவனமாதேவியும் சிக்கிக் கொண்ட நிலையில் அவள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததாள். நெருப்பின் உக்கிரம் தாங்காமல் காவிரி ஆற்றில் சென்று குதித்த புவனமாதேவி காவிரி வெள்ளத்தில் சிக்கி உத்தமச்சேரி என்ற இடத்தில் ஓர் அந்தணரால் காப்பாற்றப்பட்டார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புவனமாதேவிக்கு கரிகால் பெருவளத்தான் என்ற மகன் பிறந்தார்.  அரசிக்கு வெக்காளியம்மன் மீது அளவுகடந்த பக்தி என்பதால் அவர் உயிர் பிழைத்தார். இதன் மூலம் அழிந்ததாக நினைத்த சோழர் குலம் மீண்டும் தழைத்தது. அன்று நெருப்பு மழையில் இருந்து உரையுரை காத்த அன்னையை நன்றியுணர்வோடு மக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர்.

பொதுவாக அம்மன் கோயில்களில் குடிகொண்டுள்ள அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் தலை மீது வைத்திருப்பார். ஆனால் வெக்காளியம்மன் கோயிலில் காலை மாற்றி அம்மன் அருள்பாலிக்கிறார். திரிசூலம், உடுக்கை, பாசரம், அட்சய பாத்திரம் என 4 திருக்கைகளுடன் அவள் காட்சி தருகிறாள். கழுத்தில் அட்டிகை, திருமாங்கல்யம், முத்தாரம், தலையில் பொன்முடி ஆகியவையும் அணிந்திருக்கிறார். சித்திரை, பங்குனி, வைகானி, ஆவணி, ஆடி ஆகிய மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும்.

வழிபாடு

மக்கள் தங்களுக்கு உள்ள குறைகளையும், தேவைகளையும் வேண்டுதல்களாக துண்டு சீட்டில் எழுதி வெக்காளியம்மன் சிலை முன்பு உள்ள சூலத்தில் கட்டி விடுகிறார்கள். அதனையெல்லாம் வெக்காளியம்மன் நிறைவேற்றுவாள் என்பது நம்பிக்கையாகும். அதேபோல் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் திருமண தடை, குழந்தை பேறு பிரச்னை ஆகியவை தீரும் என நம்புகிறார்கள். நீங்களும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என ஆன்மிக அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த சாம்சன்..!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!
நீண்ட நேரம் கழிவறையில் அமர்வதால் ஏற்படும் உடல்நல கேடுகள்..!
ஹல்தி போட்டோஸை வெளியிட்ட ரம்யா பாண்டியன்