5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Temple Special: ரக்‌ஷாபந்தன் அன்று மட்டுமே திறக்கப்படும் கோயில்.. ஏன் தெரியுமா?

Bansi Narayan Temple: இந்தியா ஆன்மிக பூமி என அனைவராலும் அழைக்கப்படுகிறது. எங்கு திரும்பினாலும் பல்வேறு மதம் சார்ந்த வழிபாட்டு தலங்கள் இருப்பதை காணலாம். ஒவ்வொரு தலங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பும், வரலாறும் என்பது உள்ளது. அப்படியான நிலையில் ஆண்டுதோறும் ரக்‌ஷாபந்தன் தினத்தன்று ஒருநாள் மட்டும் திறக்கப்படும் கோயில் பற்றி காணலாம்.

Temple Special: ரக்‌ஷாபந்தன் அன்று மட்டுமே திறக்கப்படும் கோயில்.. ஏன் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 16 Oct 2024 12:57 PM

ரக்‌ஷாபந்தன்: நாடு முழுவதும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரக்‌ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. சகோதர, சகோதரிகளின் உறவை பெருமைப்படுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இப்படியான நிலையில் இந்தியா ஆன்மிக பூமி என அனைவராலும் அழைக்கப்படுகிறது. எங்கு திரும்பினாலும் பல்வேறு மதம் சார்ந்த வழிபாட்டு தலங்கள் இருப்பதை காணலாம். ஒவ்வொரு தலங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பும், வரலாறும் என்பது உள்ளது. அப்படியான நிலையில் ஆண்டுதோறும் ரக்‌ஷாபந்தன் தினத்தன்று ஒருநாள் மட்டும் திறக்கப்படும் கோயில் பற்றி காணலாம். இந்த கோயில் உத்தரகாண்டில் உள்ளது. அந்த கோயிலின் சிறப்புகளுக்காகவே உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. கோயில் திறக்கப்படும் நாளுக்காக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

அந்த கோயில் அனைவராலும் பன்சி நாராயண் கோயில் என அழைக்கப்படுகிறது. இது இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலாகும். உத்தரகாண்ட் மாநிலத்தில் மனிதர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த  கோயிலை, மலைகள் சூழ்ந்து பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்தக் கோயிலுக்கு நாம் செல்ல வேண்டும் என்றால் அடர்ந்த கருவேலமரக் காடுகள் வழியாக தான் செல்ல வேண்டும். இந்த கோவில் 6 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஊர்கம் பள்ளத்தாக்கில் உள்ள இந்த கோயில் கடவுள் ஸ்ரீமன் நாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  ஆனால் கோயிலின் உள்ளே சிவன் மற்றும் நாராயணன் (ஸ்ரீ கிருஷ்ணர்) ஆகிய இரு கடவுள்களின் சிலைகளும் உள்ளன.  இந்த கோவில்  10 அடி உயரம் மட்டுமே உள்ளது. இங்குள்ள அர்ச்சகர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரக்‌ஷாபந்தனன்று சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். ரக்‌ஷாபந்தன் தினத்தன்று இந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்து வெண்ணெய் கொண்டு வரப்பட்டு  அதை பிரசாதத்தில் சேர்த்து கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இந்நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பானதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த நாளில் விஷ்ணுவின் சிறப்பு அருளைப் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரக்‌ஷாபந்தன் தினத்தன்று அதிகாலை 03:04 மணிக்கு திறக்கப்படும் இக்கோயில் இரவு  11:55 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர்.

பன்சி நாராயண் கோயில் தொடர்பான புராணக் கதை ஒன்று உள்ளது. இந்த கதையில், விஷ்ணு தனது வாமன அவதாரத்திலிருந்து விடுபட்ட பிறகு இங்கு நாராயணனாக தோன்றினார். நாரத முனிவர் இத்தலத்தில் நாராயணனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. நாரதர் வருடத்தில் 364 நாட்களும் இங்கு விஷ்ணுவை வழிபட்டார் என நம்பப்படுகிறது. எனவே பக்தர்கள் இங்கு வந்து மூடப்பட்டிருக்கும் கோயிலில் உள்ள நாராயணரை வழிபடலாம். ஆனால் கதவுகள் வருடத்திற்கு ஒருமுறை ரக்‌ஷாபந்தனத்தன்று மட்டுமே திறக்கப்படும்.

மேலும் இந்த கோயிலில் உள்ள ஒரு சுவாரஸ்யமான நம்பிக்கை என்னவென்றால், ரக்‌ஷா பந்தனத்தன்று பன்சி நாராயண் கோயிலில் வைத்து தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டும் சகோதரிகள் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியுடன் வாழ்க்கையில் வலம் வருவார்கள் என நம்பப்படுகிறது, மேலும் அப்பெண்களின் சகோதரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் கவலைகள்  எல்லாவற்றிலிருந்தும் விடுபடுவார்கள். இதன் காரணமாகவே ரக்‌ஷா பந்தன் நாளில் ஏராளமானோர் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News