Yama Deepam 2024: இன்று திரயோதசி.. எம தீபம் ஏற்றி வணங்கினால் இவ்வளவு நன்மைகளா?
Diwali Festival: இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் நிறைந்திருந்தாலும் ஒரு சில பண்டிகைகள் மட்டும் தான் மாநிலங்கள் கடந்து அனைவராலும் ஒரே நாளில் வித்தியாசமாக கொண்டாடப்படும். அதில் ஒரு பண்டிகை தீபாவளி தினம். இப்பண்டிகை ஒரு சில மாநிலங்களில் ஒருநாளும், சில மாநிலங்களில் 2 அல்லது 3 நாட்களும், பெரும்பாலான வடமாநிலங்களில் 5 நாட்களும் கொண்டாடப்படுகிறது.
எம தீபம்: தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் நிறைந்திருந்தாலும் ஒரு சில பண்டிகைகள் மட்டும் தான் மாநிலங்கள் கடந்து அனைவராலும் ஒரே நாளில் வித்தியாசமாக கொண்டாடப்படும். அதில் ஒரு பண்டிகை தீபாவளி தினம். இப்பண்டிகை ஒரு சில மாநிலங்களில் ஒருநாளும், சில மாநிலங்களில் 2 அல்லது 3 நாட்களும், பெரும்பாலான வடமாநிலங்களில் 5 நாட்களும் கொண்டாடப்படுகிறது. இன்று பகல் 12:20 வரை துவாதசி திதி இருக்கும் நிலையில் பின்பு திரயோதசி திதி தொடங்குகிறது.
ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை திதி தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படும் நிலையில், இந்தாண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிற்பகல் 3.52 மணி முதல் நவம்பர் 1 மாலை 6.16 வரை அமாவாசை திதி இருப்பதாக பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்க்கையில் வடமாநிலங்களில் அக்டோபர் 29 ஆம் தேதியில் இருந்தே தீபாவளி பண்டிகை தொடங்கி விடும். 30,31 மற்றும் நவம்பர் 2,3 ஆகிய 5 நாட்கள் இந்த பண்டிகை வெவ்வேறு கருப்பொருட்களுடன் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகை கொண்டாட்டத்தைக் காண வெளியூர், வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் வருகை தருகிறார்கள்.
Also Read: Lord Murugan: வாழ்வை மாற்றும் முருகனின் 48 நாள் விரதம்.. எப்படி இருக்க வேண்டும்?
அதன்படி அக்டோபர் 29ஆம் தேதியான இன்று கொண்டாடப்படும் பண்டிகை தந்தேரோஸ் என அழைக்கப்படுகிறது.இன்று மாலை 5.14 மணி முதல் 6.29 மணி வரை வடமாநில மக்கள் தங்கள் வீடுகளில் எம தீபம் ஏற்றி வழிபடுவார்கள். அதேசமயம் இந்த நாள் உலோக திருவிழா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் லட்சுமி தேவியையும் குபேரரையும் வணங்குவார்கள்.மேலும் செல்வம், செழிப்பு தங்கள் வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பது இந்த வழிபாட்டின் நோக்கமாக கடைபிடிக்கப்படிகிறது. முடிந்தவரை இந்த நாளில் தங்கம், வெள்ளி, புதிய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வைப்பது சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படுகிறது.
எம தீபம்
சாஸ்திரங்களின் படி ஆண்டுக்கு ஒருமுறை நம்முடைய வீட்டு வாசலில் எம தீபம் ஏற்றி வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமென்றால் இந்நாளில் எமதர்மராஜாவின் மனதை குளிர்விக்கும் வகையில் இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அகால மரணம் ஏற்படாமல் தடுத்து மோட்சம் பெறும் வகையிலும் இந்த நாளில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
Also Read: நிதி பிரச்சனை நீங்கணுமா? தன திரயோதசி நாளில் இந்த பரிகாரம் பண்ணுங்க!
வீட்டின் பிரதான வாசலில் தான் இந்த எம தீபத்தை நாம் ஏற்ற வேண்டும். அதன்படி மாவினால் நான்முக விளக்கு செய்ய வேண்டும். அதில் பருத்தி துணியால் திரி செய்து போட வேண்டும். மேலும் விளக்கேற்ற நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணய் பயன்படுத்துவதற்கு பதில் கடுகு எண்ணெய் உபயோகிக்க வேண்டும். பித்ருக்கள் உலகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களை வழிபடும் பொருட்டும் எம தீபம் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
முன்பெல்லாம் வடநாட்டில் தான் எம தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்வது கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் வழிபாடு கலாச்சாரம் பரவி விட்ட நிலையில், தமிழ்நாடு தொடங்கி பெரும்பாலான மாநிலங்களில் எம தீபம் வழிபாடு முறை பின்பற்றப்படுகிறது. இந்த தீபத்தை வீட்டு வாசலில் தான் ஏற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டினுள் ஏற்ற நினைக்கக்கூடாது. அதேசமயம் வெளிப்புற இடம் கொண்ட மாடியில் ஏற்றலாம்.
இன்று திரியோதிசி மற்றும் பிரதோஷ நாள் என்பதால் இந்த வழிபாடு மிகவும் பிரசித்திப் பெற்றதாக நம்பப்படுகிறது. மேலும் நான்முக விளக்கில் 4 பக்கமும் திரியைப் போட்டாலும் முதலில் தெற்கு திசை நோக்கி இருக்கும் திரியை தான் ஏற்ற வேண்டும். இன்று மாலை 5.14 மணி முதல் 6.29 மணி வரை எம தீபம் ஏற்றி வழிபட முடியாதவர்கள் இரவு 8.13 வரை தீபமேற்றி வழிபடலாம். இந்த நேரத்தில் லட்சுமி, குபேரர் வழிபாட்டையும் மேற்கொள்கொள்ளலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)