Sabarimala: சபரிமலை போகிறவர்கள் மறக்காமல் இந்த கோயிலுக்கும் போங்க!

The Six Abodes of Aiyyapan: ஆறுபடை வீடு என்றால் நம் நினைவுக்கு வருவது முருகப்பெருமான். ஆறு என்ற எண்ணுக்கும் முருகப்பெருமானுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. எனவே இவருக்கு ஆறுமுகன், ஆறுமுகசாமி என சிறப்பு பெயர்கள் உண்டு. ஆனால் ஆறுபடை வீடு முருகனுக்கு மட்டுமல்லாமல் சபரிமலை நாயகனான ஐயப்பனுக்கும் உண்டு. ஐயப்பன் சுவாமியின் அறுபடை வீடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Sabarimala: சபரிமலை போகிறவர்கள் மறக்காமல் இந்த கோயிலுக்கும் போங்க!

சுவாமி ஐயப்பன் (Photo Credit: Pinterest)

Published: 

24 Nov 2024 11:00 AM

கார்த்திகை மாதம் வந்து விட்டாலே அந்த மாதம் வழிபாட்டிற்குரிய தெய்வங்களாக இருப்பது ஐயப்பனும் முருகனும் தான். பலரும் ஐயப்ப சுவாமிக்கும் முருகனுக்கும் மாலை அணிந்து, விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என்று முருகனுக்கு அறுபடை வீடு இருப்பது போல ஐயப்பன் சுவாமிக்கும் கேரளாவில் அறுபடை வீடுகள் இருக்கிறது. ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகிய ஆறும் தான் ஐயப்பனின் அறுபடை வீடுகள் ஆகும்.

ஆரியங்காவு:

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டியது ஆரியங்காவு. கேரள தமிழக எல்லைப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த ஊர் தமிழகத்தின் செங்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அரசராக ஐயப்பன் வீற்றிருக்கிறார். மற்ற கோவில்களில் பிரம்மச்சாரியாக காட்சியளிக்கும் ஐயப்பன் இங்கு சௌராஷ்ட்ராவின் குலதேவியான புஷ்கலா தேவியின் தம்பதியாக காட்சி தருகிறார். மேலும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு திருமண வைபவம் நடைபெறுகிறது. மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மீது அமர்ந்து கோலத்தில் காட்சி தருவதால் இங்கு அவருக்கு மதகஜ வாகன ரூபன் என்ற சிறப்பு பெயரும் உள்ளது.

அச்சன்கோயில்:

கேரள மாநிலத்தின் காட்டுப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் தமிழகத்தில் செங்கோட்டையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அனைத்து ஐயப்பன் சுவாமி கோயிலில் இருக்கும் விக்கிரகங்கள் மாற்றப்பட்ட நிலையில் இங்குள்ள விக்கிரகம் மற்றும் பழமை மாறாமல் மாற்றப்படாமல் உள்ளது. கையில் அமுதமும் காந்தமலை வாளும் ஏந்திய நிலையில் இந்த கோயிலில் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் ஐயப்பனின் இருபுறமும் பூரண, புஷ்கலை தேவியர் காட்சி தருகிறார்கள். இந்த கோயிலில் இவருக்கு கல்யாண சாஸ்தா என்ற சிறப்பு பெயரும் உள்ளது.

நல்ல மண வாழ்க்கை வேண்டி இந்த கோயிலில் பிரார்த்தனை செய்தால் உடனே நல்ல திருமண வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. ஐயப்பன் பயன்படுத்திய வாள் இன்னும் இந்த கோவிலில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.‌ விஷ பூச்சி கடிக்கு இங்கு உள்ள ஐயப்பன் சுவாமி மீது பூசப்பட்டிருக்கும் சந்தனமும் தீர்த்தமும் மருந்தாக வழங்கப்படுகிறது. இதை பூசுவதால் உடலில் இருந்து விஷம் இறங்கி உடல் பூரண குணமடையும் என்பது நம்பிக்கை.

Also Read: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்… வாட்ஸ் அப் மூலம் உதவிகள்!

குளத்துப்புழா:

ஐயப்பன் பாலகனாக வீற்றிருக்கும் தலம்தான் இந்த குளத்துப்புழா. இதனால் இவர் இங்கு பால சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஐயப்பன் பாலகனாக காட்சி தருவதால் இந்த ஆலயத்தின் கருவறை சிறுவர்கள் நுழையும் அளவிற்கே வடிவமைக்கப்பட்டுள்ள. விஜயதசமி அன்று பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. குழந்தை வரும் வேண்டும் தம்பதியர் இங்கு பிரார்த்தனை செய்தால் கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

எருமேலி:

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தவிர்க்கவே முடியாத இடம் இந்த எருமேலி. பக்தர்கள் வேடவர்கள் போல வேடம் அணிந்து பேட்டை துள்ளும் இடம் இது. எருமை தலை கொண்ட மகிஷியை ஐயப்பன் இந்த இடத்தில் தான் வதம் செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த கோயிலில் ஐயப்பன் சுவாமி வேட்டைக்கு செல்வது போல கையில் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தருகிறார்.

இந்த இடம் எருமைக்கொல்லி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் இது எருமேலி என்று மருவியது. ஐயப்பன் மகிஷியை கொன்ற பின்பு‌ அதன் உடலில் மீது ஏறியதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த இடத்திலிருந்து நடமாடிக் கொண்டு சபரிமலைக்கு செல்கிறார்கள். இந்த நடனம் பேட்டை துள்ளல் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு அருகில் தான் வாபரின் பள்ளிவாசலும் அமைந்திருக்கிறது.

பந்தளம்:

பந்தளம் சபரிமலையில் இருந்து சுமார் 88 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வனபகுதியில் பாலகனாக கண்டெடுக்கப்பட்ட ஐயப்பன், மன்னர் ராஜசேகரனால் இந்த பந்தள அரண்மனையில் தான் 12 வயது வரை வளர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே ஐயப்பன் வாழ்ந்த இடமாக இந்த இடம் கருதப்படுகிறது. மகரஜோதி நாளில் ஐயப்பாவுக்கு அணுவிக்கப்படும் ஆபரணங்கள் எல்லாம் இந்த அரண்மனையில் இருந்து தான் கொண்டு செல்லப்படும்.

Also Read: Sabarimala: பெரிய வழி vs சிறிய வழி .. ஐயப்பனை காண எது சிறந்தது?

சபரிமலை:

ஐயப்பன் துறவறம் மேற்கொள்ளும்போது வில்லெடுத்து அம்பு எய்ததாகவும், அந்த வில் சென்று விழுந்த இடம் தான் சபரிமலை என்றும் புராணங்கள் தெரிவிக்கிறது. அந்த இடத்தில் பிற்காலத்தில் 18 படிகளுடன் கோயில் உருவாக்கப்பட்டு கிழக்கு நோக்கி அமர்ந்தபடி ஐயப்பன் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இந்த சபரிமலையில் தான் ஆண்டுதோறும் மகரஜோதியின் போது ஜோதி ரூபமாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.இந்த சபரிமலையில் தான் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு ஐயப்பன் அருள் பாலிக்கிறார். 18 படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். ஐயப்பன் சுவாமியின் வாசலில் ‘தத்வமஸி’ என்று எழுதப்பட்டிருக்கும். நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாகவே உள்ளாய் என்பதுதான் இதன் பொருள்.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்