வீட்டில் மகிழ்ச்சி நிலவ குடும்ப உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

ஆடை சுதந்திரம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றாலும் நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப ஆடைகள் அணிய வேண்டும் என பெரியவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பொதுவாக ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உடை என சந்தையில் விற்கப்படுகிறது. சிலர் இரவு நேரத்தில் உடுத்தும் உடையை சௌகரியமாக இருக்கிறது என்பதற்காக பகலிலும் அணிந்து கொள்வார்கள். அப்படி செய்யக்கூடாது

வீட்டில் மகிழ்ச்சி நிலவ குடும்ப உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

05 Oct 2024 21:54 PM

ஜோதிடப்பலன்: குடும்பம் என்பது ஒவ்வொருவருக்கும் எந்தளவுக்கு முக்கியமானது என்பது தேவை என்ற ஒன்று வரும்போது தான் தெரியும். அந்த அளவுக்கு ஒரு குடும்பத்தை ஆணிவேராக இருந்து தாங்கக்கூடிய பொறுப்பு இயற்கையாகவே பெண்ணுக்கு இருந்தாலும் அனைவருக்கும் குடும்பத்தில் பொறுப்பு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. அந்த வகையில் வீட்டில் இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இதனை சரியாக பின்பற்றினால்  குடும்பத்தினர்  மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என சாஸ்திரம் சொல்கிறது.

சுறுசுறுப்பாக இருப்பது

குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். புனித நீராடி விட்டு வாசல் தெளித்து கோலமிட்ட பின்பு தான் அனைவரும் பூஜையறையில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் காலையில் மங்களகரமான சொற்களுடன் தான் அந்த நாளை தொடங்க வேண்டும். அதிகாலையில் எழுவதால் சுறுசுறுப்பாக அன்றைய நாள் முழுவதும் செயல்பட முடியும். ஒருநாளை சிறப்பாக தொடங்குவதற்கு முதல் தேவை என்பது சுறுசுறுப்பாகும். திருவள்ளுவர் கூட திருக்குறள்களில் குடும்ப உறவுகளைப் பற்றி தெரிவித்துள்ளார். முதலில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் தன்னைச் சார்ந்த பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் உள்ளிட்டவர்களை காக்க வேண்டும். அதன்பின்னர் உலகை காக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் சுறுசுறுப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  சுறுசுறுப்பாக இருந்தால் தான் அந்த குடும்பத்தின் செயுல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

Also Read: Vallalar Temple: உலக மக்களின் பசியைப் போக்கும் வடலூர் வள்ளலார் கோயில்!

நல்ல ஆடைகள்

நவீன நாகரிகம் பரவி விட்ட நிலையில் அனைத்து வயதினரும் வெவ்வேறு விதமான ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள். ஆடை சுதந்திரம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றாலும் நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப ஆடைகள் அணிய வேண்டும் என பெரியவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பொதுவாக ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உடை என சந்தையில் விற்கப்படுகிறது. சிலர் இரவு நேரத்தில் உடுத்தும் உடையை சௌகரியமாக இருக்கிறது என்பதற்காக பகலிலும் அணிந்து கொள்வார்கள். ஆனால் நம்முடைய உடைக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது என்பதே உண்மை. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பாரம்பரிய உடை இருக்கும்பொழுது, நாம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் சரியான ஆடைகளை அணிய பழக வேண்டும்.

விளக்கேற்றுதல்

வீட்டில் அன்றாடம் காலையில் நீராடி விட்டு விளக்கேற்றி கடவுளை வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. சூரியன் உதயத்திற்கு பிறகு மற்றும் சூரியன் மறைவுக்குப் பிறகு ஏற்றப்படும் விளக்குகள் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருப்பதை காட்டும்.

Also Read: Chakrapani Swami Temple: திருமண தடையால் அவதியா? – தீர்வு வழங்கும் சக்கரபாணி பெருமாள்!

மங்களகரமான சொற்களை பேசுதல்

ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் எப்போதும் மங்களகரமான சொற்களை மட்டுமே பேச வேண்டும். காரணம் நாம் சொல்லும் சொற்களுக்கும் பேச்சுகளுக்கும் மிகப்பெரிய சக்தி உண்டு என்பதை அனைவரும் அறிவர். அதனால்தான் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சக குடும்ப உறுப்பினர்கள் கோபப்படுவதையும், அழுவதையும் யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. பிரபஞ்சமே குடும்பத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிலையில் நாம் பேசும் சொற்கள் சரியாக இருக்க வேண்டும். மேலும் நாம் பேசும் பேச்சின் மூலம் எதிராளிக்கும் தீர்வு சொல்ல வேண்டும். சற்று சிந்தித்துப் பார்த்தால் நம்முடைய குடும்பங்களில் நிகழும் பிரச்சினைகளுக்கு தீர்வு நிச்சயம் ஒரு குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவே கிடைக்கும். காரணம் அந்த அளவுக்கு அவர்களின் சொற்களுக்கு மதிப்புள்ளது.

சிரித்த முகத்துடன் இருப்பது

எப்போதும் குடும்ப உறுப்பினர்கள் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். வீட்டிற்கு வருபவர்களை சிரித்த முகத்துடன் உபசரிக்கும் போது தான் அவர்கள் நம்முடைய வீட்டில் இருக்கவும், அடிக்கடி வரவும் விரும்புவார்கள். அதேபோல் வெளியில் சென்று விட்டு வரும் குடும்ப உறுப்பினர்கள் யாவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்கும் போது அவர்கள் முகத்தில் இருக்கும் களைப்புகள் அனைத்தும் மறந்து மகிழ்ச்சியாக உணர்வை வெளிப்படுத்துவார்கள். எக்காரணம் கொண்டும் சிரிப்பு நம்மை மட்டுப்படுத்தாது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.

சுத்தமாக இருப்பது

நம்முடைய மனம், இருக்க கூடிய இடம், பூஜை அறை உள்ளிட்ட இடங்கள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். எந்த வீடு சுத்தமாக இருக்கிறதோ அந்த வீட்டின் குடும்பத்தினர் மிகவும் சரியாக நடந்து கொள்கிறார் என்பது அர்த்தமாகும். அதனால்தான் நாம் ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது முதலில் அந்த வீடு எப்படி இருக்கிறது என்பதை மனதில் கணக்கு போட்டு விடுவோம். மேலே குறிப்பிட்ட ஆறு விஷயங்களை கண்டிப்பாக குடும்ப உறுப்பினர்கள் கடைபிடிக்கும்போது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!