Saraswati puja 2024: சரஸ்வதி பூஜை வழிபாடு.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி? - Tamil News | these procedure will be followed in saraswati puja worship | TV9 Tamil

Saraswati puja 2024: சரஸ்வதி பூஜை வழிபாடு.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி?

Published: 

05 Oct 2024 18:00 PM

கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி நவராத்திரி பண்டிகை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தான் நவராத்திரி பண்டிகை தொடங்கும். இப்பண்டிகையின் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மனுக்காகவும், நடுவில் உள்ள 3 நாட்கள் லட்சுமி தேவிக்காகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதிக்காகவும் கொண்டாடப்படுகிறது. மலை மகள், அலை மகள், கலை மகள் ஆகிய 3 பேரும் ஒன்று சேர்ந்து மகிஷாசூரனை கொல்ல தவம் மேற்கொண்ட காலம் தான் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

Saraswati puja 2024: சரஸ்வதி பூஜை வழிபாடு.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி?

கோப்பு புகைப்படம்

Follow Us On

புரட்டாசி மாதம் வந்தாலே நவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்கள் வரும். இதில் நவராத்திரி பண்டிகை 9 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும். அம்பிகைக்குரிய விஷேச தினமாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகைக்குப் பின் மிகப்பெரிய வரலாறு என்பது உள்ளது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி நவராத்திரி பண்டிகை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தான் நவராத்திரி பண்டிகை தொடங்கும். இப்பண்டிகையின் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மனுக்காகவும், நடுவில் உள்ள 3 நாட்கள் லட்சுமி தேவிக்காகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதிக்காகவும் கொண்டாடப்படுகிறது. மலை மகள், அலை மகள், கலை மகள் ஆகிய 3 பேரும் ஒன்று சேர்ந்து மகிஷாசூரனை கொல்ல தவம் மேற்கொண்ட காலம் தான் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதனால் மைசூர், குலசேகரப்பட்டினம் ஆகிய இடங்களில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடத்தப்படுகிறது. இவையெல்லாம் முடிந்து அம்பிகை தனது ஆய்தத்துக்கு ஓய்வு கொடுக்கும் நாள் தான் ஆயுதபூஜையாக கொண்டாடப்படுகிறது.

நவம் என்பது புதுமை, 9 என இரண்டு வகையான பொருள்படும். 9 நாட்களும் புதுமையான முறையில் அம்மனை வழிபடுவது தான் இந்த நவராத்திரியின் முக்கிய நோக்கமாகும். இதில் சரஸ்வதி தேவியை சிறப்பிக்கும் விதமாக நவராத்திரி பண்டிகையின் 9வது நாள் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. கல்வி மற்றும் கலைகளின் அதிபதியாக திகழும் சரஸ்வதி தேவி சிவபெருமானிடம் இருந்து வெளிப்பட்ட ஞானப்பெண் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அதனால் சிவனைப் போல ஜடாமகுடம் சூடி அதில் பிறை சந்திரனை இடம்பெற செய்துள்ளதோடு, கையில் கலசத்தையும் ஏந்தி காட்சி தருவதாக சொல்லப்படுகிறது.  அதேபோல் பிரம்மனின் நாவில் சரஸ்வதி தேவி குடியிருக்கிறாள் எனவும் நம்பப்படுகிறது.

பொதுவாக சரஸ்வதியின் வாகனம் அன்னப்பறவை தான். ஆனால் சில மாநிலங்களில் சரஸ்வதி மயில் மீதும், சிங்கத்தின் மீதும், ஆட்டின் மீதும் அமர்த்தி பக்தர்கள் வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கிறது. நவராத்திரியில் வரும் மஹா நவமி தினத்தில் தான் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும். நடப்பாண்டு சரஸ்வதி பூஜை வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வழிபாட்டை எப்படி மேற்கொள்ளலாம் என பார்க்கலாம்.

வீட்டில் வழிபடுவது எப்படி?

சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி தேவியை சரியான முறையில் வழிபட்டால் கல்வி மற்றும் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நாளில் கலசம் வைத்து சரஸ்வதி பூஜையை கொண்டாடுபவர்களும் உண்டு. சரஸ்வதி பூஜைக்கு முந்தைய நாள் வீடு மற்றும் பூஜையறையை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அப்படியே பூஜையறையில் கோலம் போட்டு விடுவதும் நல்லது. முதல் நாள் முடியாதவர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதற்கு முன்பாவது அதனை செய்ய வேண்டும்.

தொடர்ந்து பூஜையறையில் குழந்தைகளின் பாட புத்தகங்கள், வீட்டின் கணக்கு வழக்குகள் அடங்கிய நோட்டுகள், வங்கிப் புத்தகம், வாகனங்களின் ஆர்சி புக் உள்ளிட்டவற்றை வைத்து வழிபடலாம். ஒரு பலகை மீது இதனை எல்லாம் வைத்து அதற்கு மேல் வெண் பட்டு அல்லது வெள்ளை ஆடை விரித்து அலங்கரிக்க வேண்டும். இதன் நடுவே சரஸ்வதி தேவியின் படம் அல்லது சிலையை வைத்து வழிபடலாம்.

சரஸ்வதி தேவியின் படத்துக்கு அல்லது சிலைக்கு சந்தனம், குங்குமம் வைத்து மலர்கள் சூடி அலங்கரிக்கலாம். வழிபாடு தொடங்குவதற்கு முன் குழந்தைகளை சிறிது நேரம் தங்கள் பாட புத்தகத்தை சரஸ்வதி தேவி முன்பு படிக்கச் செய்யலாம். சரஸ்வதி தேவி புகைப்படம் அல்லது சிலைக்கு முன்பாக கலசம் வைத்து அதில் மாவிலை சுற்றி இருக்க நடுவில் தேங்காய் வைத்து வணங்கி பூஜையை தொடங்க வேண்டும்.

சரஸ்வதி தேவியை வணங்கும் போது மனதில் எந்தவித சஞ்சனமும் இல்லாமல் அவளுக்குரிய துதி பாடல்களை பாடி வழிபட வேண்டும். பின்னர் தூபம் மற்றும் தீப ஆராதனைகளை காட்டி நைவேத்தியம் படித்து வழிபடலாம். இந்த நைவேத்தியத்தை சாமி கும்பிட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு எடுத்து மற்றவர்களுக்கு வழங்கி தானும் உண்டு மகிழ வேண்டும். சரஸ்வதி பூஜை அன்று வைக்கப்படும் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மறுநாள் விஜயதசமி தினத்தில் உரிய நேரத்தில் சரஸ்வதி தேவிக்கு கற்கண்டு பால் கலந்த நைவேத்தியம் செய்து ஏடு பிரிக்க வேண்டும்.

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version