5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mahalaya Amavasya: மஹாளய அமாவாசை நாளில் இப்படி வழிபட்டால் புண்ணியம் கிட்டும்!

பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை அதாவது மகாளய அமாவாசை வரை 15 நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம்முடன் இருப்பதாக நம்பப்படுகிறது. நாம் இந்த உலகத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் முன்னோர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த நாளை நாம் கடைபிடிக்க வேண்டும். மேற்சொன்ன 15 நாட்களில் தான் முன்னோர்கள் உயிரிழந்து இருப்பார்கள். அதனால் மற்ற மாதங்களில் உயிரிழந்து இருந்தாலும் புரட்டாசியில் அந்த திதியில் முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்டால் நம் குலம் செழித்து நிற்கும்.

Mahalaya Amavasya: மஹாளய அமாவாசை நாளில் இப்படி வழிபட்டால் புண்ணியம் கிட்டும்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 28 Sep 2024 16:00 PM

மஹாளய அமாவாசை: ஒரு ஆண்டை எடுத்துக் கொண்டால் நமக்கு மாதம்தோறும் அமாவாசை திதி வருகிறது. இந்த நாள் நம் முன்னோர்களை வழிபடக்கூடிய நாள் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னோர்கள் மறைந்த திதி தெரியாதவர்கள், தங்களால் மாதம்தோறும் வரும் அமாவாசையில் வழிபட முடியாது என சொல்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வரும் 3 அமாவாசைகளில் தவறாமல் விரதம் இருந்து முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அது தை, ஆடி மற்றும் புரட்டாசியில் வரும் அமாவாசைகள். இந்த 3 தினங்களும் நாம் ஆண்டு முழுவதும் முன்னோர்களை வழிபடாமல் இருந்ததை நிவர்த்தி செய்யும் நாளாக அமையும் என்பது நம்பிக்கையாகும்.

பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை அதாவது மகாளய அமாவாசை வரை 15 நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம்முடன் இருப்பதாக நம்பப்படுகிறது. நாம் இந்த உலகத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் முன்னோர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த நாளை நாம் கடைபிடிக்க வேண்டும். மேற்சொன்ன 15 நாட்களில் தான் முன்னோர்கள் உயிரிழந்து இருப்பார்கள். அதனால் மற்ற மாதங்களில் உயிரிழந்து இருந்தாலும் புரட்டாசியில் அந்த திதியில் முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்டால் நம் குலம் செழித்து நிற்கும். முன்னோர்கள் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் காவலாக இருப்பார்கள் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

Also Read: புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாடு செய்வது எப்படி? முழு விவரங்கள்!

அப்படி திதி தெரியவில்லை என்றால் இந்த 15 நாட்களும் முன்னோர்களை மனதில் நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடலாம். 14 நாட்களும் செய்யாதவர்கள் கண்டிப்பாக மஹாளய அமாவாசை அன்று செய்ய வேண்டும். எப்போதும் நம்மால் என்ன முடிகிறதோ, அதை வைத்து முன்னோர்களை வழிபட்டால் போதும். நிச்சயம் நாம் அவர்களை குளிர்விக்க கஷ்டப்படுவதை அவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள்.ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயத்திற்கு பின்னர் தொடங்கி மதியம் 12 மணி வரையிலும் இந்த எள்ளும், தண்ணீரும் இறைக்கும் நிகழ்வை நாம் மேற்கொள்ளலாம்.

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முழுவதும் அமாவாசை திதி அமைந்துள்ளது. இந்த நாளில் தர்ப்பணம் செய்ய நினைப்பவர்கள் காலை 6 மணி முதல் 12 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் முன்னோர்கள் புகைப்படம் முன் படையல் போட சரியான நேரம் என்பது காலை 11 மணி முதல் 11.45 மணி வரை ஆகும். இந்த நேரத்தை தவற விடுபவர்கள் மதியம் 1.30 மணி முதல் 2 மணிக்குள் செய்யலாம். இதேபோல் மாலை விளக்கேற்றும் வைபவம் சூரிய மறைவுக்கு பின்னால் அதாவது 6 மணிக்கு மேல் தான் இருக்க வேண்டும்.

அதேசமயம் தர்ப்பணம் கொடுக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக சூரிய உதயத்திற்கு பின்னால் தான் கொடுக்க வேண்டும். காரணம் நீங்கள் முன்னோர் வழிபாடு செய்யும் போது சூரிய பகவான் இருக்க வேண்டும் என சாஸ்திரம் தெரிவிக்கிறது, கோயில்கள், நீர் நிலைகள் என எங்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும் சூரிய பகவானை வணங்க வேண்டும். ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும், புனித நீர் நிலைகளிலும் தர்ப்பணம் செய்யலாம். முடியாதவர்கள் வீட்டில் செய்யலாம்.

Also Read: Tata Motors: இளைஞர்களே ரெடியா.. 5 ஆயிரம் பேருக்கு வேலை… தமிழக அரசின் புதிய துவக்கம்!

அமாவாசை நாளில் நம் முன்னோர்கள் யார் மூலமாவது நம்மை தேடி வருவார்கள் என்பது நம்பிக்கையாகும். எனவே அன்றைய நாளில் ஆடை, உணவு, பணம் போன்றவற்றை தானமாக வழங்கலாம். என்ன முடிகிறதோ அதை தானமாக செய்யலாம். மேலும் பெண்கள் அமாவாசை நாளில் எள்ளும், தண்ணீரும் இறைக்கக்கூடாது. அவர்களுக்கு இலை வழிபாடு, அன்னதானம், பொருட்கள் வழங்குவது போன்றவற்றை செய்யலாம். கணவர் உயிரோடு இருக்கும் வரை பெண்கள் எள்ளும், தண்ணீரும் இறைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முன்னோர்களை நாம் வழிபடுவது நிச்சயம் நமக்கு ஏராளமான பலன்களை பெற்று தரும். சிலர் காலை முதல் மாலை வரை விரதம் இருப்பார்கள். ஆனால் இலை வழிபாடு செய்யும் வரை விரதம் இருந்தால் போதும்.மாலையில் முன்னோர்களை நினைத்து நல்லெண்ணய் தீபம் ஏற்ற வேண்டும். அதனை பூஜையறையிலோ அல்லது முன்னோர்கள் படம் முன்னால் ஏற்றலாம். முடிந்தவர்கள் கோயிலில் சென்று தீபம் ஏற்றலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News