Diwali 2024: தீபாவளி நாளில் லட்சுமி கடாட்சம் பொங்க இப்படி வழிபடுங்க! - Tamil News | These worship procedures will be followed on Diwali day to gain benefits from Goddess Lakshmi | TV9 Tamil

Diwali 2024: தீபாவளி நாளில் லட்சுமி கடாட்சம் பொங்க இப்படி வழிபடுங்க!

Published: 

14 Oct 2024 14:16 PM

தீபாவளி பண்டிகை என்றால் நம் அனைவருக்கும் புத்தாடை, பட்டாசுகள், இனிப்புகள் என அன்று ஒருநாள் கொண்டாட்டமாக இருப்பது தான் நினைவுக்கு வரும். இப்பண்டிகை உருவாவதற்கு பின்னால் மிகப்பெரிய புராணம் காரணம் உள்ளது. இப்படியான நிலையில் தீபாவளி தினத்தில் வழிபாடு நடத்துவதில் பலவிதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்க பின்வரும் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

1 / 6தீபாவளி

தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் இந்துக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மதத்தினரும் கொண்டாடும் பண்டிகையாகும். தீபங்களின் ஒளியே தீபாவளியாக சொல்லப்படுகிறது. நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததை கொண்டும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது.

2 / 6

இந்நாள் நடப்பாண்டு அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளில் பெண்கள் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராடிவிட்டு வீடு மற்றும் பூஜையறையை முழுவதும் சுத்தம் செய்வார்கள். பின் புதிய ஆடை அணிந்து மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

3 / 6

திருமகளான லட்சுமிதேவி அவதரித்த தினமாக தீபாவளி பண்டிகை சொல்லப்படுகிறது. அன்றைய நாளில் மகாலட்சுமி படத்தை பூஜையறையில் வைத்து அதனை மொலங்க அலங்கரிக்க வேண்டும். பின்னர் சர்க்கரை புண்களை நெய் வைத்தியமாக படைத்து தீப மற்றும் தூபங்களால் ஆராதனை செய்து வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும்.

4 / 6

செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமி திகழ்ந்தாலும் அவற்றை பிரித்து வழங்கும் நிதிகள் குபேரன் வசம் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கிறது. எனவே தீபாவளி தினத்தன்று குபேரன் படத்தையும் வீட்டில் வைத்து இரண்டு பக்கமும் குத்துவிளக்கேற்றி வழங்கி இனிப்பு பலகாரங்கள் வைத்து வழிபட்டால் செல்வ வளம் தேடி வரும்.

5 / 6

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது. அவன் தன் தாய் பூமாதேவியால் தான் மரணிப்பார் என வரம் அளிக்கப்பட்டிருந்தது. பூமாதேவி கிருஷ்ணர் அவதாரத்தின் போது கிருஷ்ணருடன் சேர்ந்து சத்யபாமாவாக தோன்றி நரகாசுரனை அழித்தார். எனவே தீபாவளி நாளில் சத்தியபாமாவை வீர லட்சுமியாக பாவித்து பூஜை செய்து வணங்க வேண்டும் .

6 / 6

தீபாவளி அமாவாசை தினத்தில் வரும் என்பதால் இந்த நாளில் முன்னோர் வழிபாடும், குலதெய்வ வழிபாடும் தாராளமாக மேற்கொள்ளலாம். தீபாவளி மட்டுமல்ல எந்த பண்டிகையாக இருந்தாலும் வீட்டில் குல தெய்வத்தின் படத்தை வைத்து முதலில் வணங்க வேண்டும்

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?