Tindivanam: வேண்டிய வரங்கள் அருளும் வாசவி ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன்!
Sri Vasavi Kanyaka Parameswari Temple: வடக்கு நோக்கிய இக்கோயிலின் கோபுரத்தில் வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி நின்றகோலத்தில் இருக்க அவருக்கு அருகில் கைலாய மலையில் இருக்கும் சிவன், பார்வதி, மூத்த மகனான விநாயகர் மற்றும் நாரதர் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பெருமாள், பிரம்மன், ஸ்ரீமன் நாராயணனின் திருமணக்கோலம் ஆகியவையும் கோபுரத்தில் சிற்பங்களாக இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பேருந்து நிலையத்தில் இருந்து சரியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெருமாள் கோவில் தெருவில் தான் வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம். திண்டிவனம் நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்தாலும் எந்தவித சத்தமும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலம் பெனுகொண்டாவை மையமாகக் கொண்டு இந்த வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் உருவானதாக கூறப்படுகிறது. வைசிய குலத்தைச் சார்ந்த வாசவாம்பா என்ற பெண் தான் சார்ந்த சமூகத்தில் ஏற்பட்ட பிளவை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து உயிரை விட தீர்மானித்துள்ளாள். அந்த சமூகத்தை சார்ந்த சிலர் தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு வாசவாம்பாம்புடன் அக்னி பிரவேசம் செய்தனர். இதனையடுத்து அக்னி குண்டத்தில் இருந்து வாசவாம்பா பார்வதி தேவியின் வடிவாக தோன்றி அனைவருக்கும் அறிவுரைகளை உபதேசித்து விட்டு மறைந்ததாக புராணங்கள் சொல்லப்படுகிறது.
அன்றிலிருந்து இந்த பார்வதி தேவி வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி என அழைக்கப்படுகிறார். இந்த அம்மன் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாக வணங்கப்படுகிறார். திண்டிவனத்தில் இருக்கும் இந்த கோயில் அக்னி பிரவேசம் செய்தவர்களின் வாரிசுகளால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Temple Special: ரக்ஷாபந்தன் அன்று மட்டுமே திறக்கப்படும் கோயில்.. ஏன் தெரியுமா?
கோயிலின் சிறப்புகள்
வடக்கு நோக்கிய இக்கோயிலின் கோபுரத்தில் வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி நின்றகோலத்தில் இருக்க அவருக்கு அருகில் கைலாய மலையில் இருக்கும் சிவன், பார்வதி, மூத்த மகனான விநாயகர் மற்றும் நாரதர் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பெருமாள், பிரம்மன், ஸ்ரீமன் நாராயணனின் திருமணக்கோலம் ஆகியவையும் கோபுரத்தில் சிற்பங்களாக இடம்பெற்றுள்ளது. கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் மிகப்பெரிய மண்டபம் அமைந்துள்ளது அங்கு கிழக்கு நோக்கி இருக்கும் விநாயக பெருமானை தரிசித்து விட்டு அடுத்ததாக மண்டபத்தின் நடுப்பகுதியில் நின்று கோலத்தில் இருக்கும் வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் வட்டமான மூக்குத்தியை அணிந்தபடி சாந்த சொரூபினியாக பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.
ஒரு கையில் கிளி வைத்திருக்கும் அவள் யார் வந்து வேண்டினாலும் அந்த கோரிக்கையை நிறைவேற்ற தவறுவதில்லை என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் நூற்றாண்டை கடந்த இந்த கோயிலில் அஷ்டலட்சுமிகளும் திருப்பதி வெங்கடாஜலபதி சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Astrology: இந்த 4 ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தெரியுமா?
முக்கிய நிகழ்வுகள்
சித்திரை மாதத்தில் சீதா கல்யாண உற்சவம் இக்கோயிலில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் வைகாசி மாத வளர்பிறை தசமியில் வாசவி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. சிவன் கோயிலில் நடக்கும் ஆனித் திருமஞ்சனம் இங்கு நடப்பது மிக சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் ராதை கல்யாணமும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை துவாதசி திதியில் நெல்லி மரத்தை விஷ்ணுவாகவும், துளசிச் செடியை மகாலட்சுமியாகவும் கருதி திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திருமண நிகழ்வால் திருமண தடை நீங்குவதோடு குழந்தை பாக்கியம் கிட்டுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்