5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தொடர் விடுமுறை.. திருப்பதியில் திரண்ட பக்தர்கள்.. கோடிகளில் மிதக்கும் ஏழுமலையான்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி எழுமலையான் கோயில் உலக புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகவும், உலக பணக்கார கடவுள்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இங்கு நாள்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக விஐபி தரிசனம், ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம், இலவச தரிசன என எழுமலையானை பக்தர்கள் தரிசிக்க பலவகையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. அதற்கு ஏற்றாவாறு பக்தர்கள் எழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதாவது, நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஏராளமான மக்கள் திருப்பதிக்கு வருகை தந்துள்ளனர்.

தொடர் விடுமுறை.. திருப்பதியில் திரண்ட பக்தர்கள்.. கோடிகளில் மிதக்கும் ஏழுமலையான்!
திருப்பதி கோயில்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 16 Jun 2024 09:15 AM

திருப்பதியில் திரண்ட பக்தர்கள்: ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி எழுமலையான் கோயில் உலக புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகவும், உலக பணக்கார கடவுள்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இங்கு நாள்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக விஐபி தரிசனம், ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம், இலவச தரிசன என எழுமலையானை பக்தர்கள் தரிசிக்க பலவகையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. அதற்கு ஏற்றாவாறு பக்தர்கள் எழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதாவது, நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஏராளமான மக்கள் திருப்பதிக்கு வருகை தந்துள்ளனர்.

Also Read: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த வழியெல்லாம் முற்றிலும் தடை.. நோட் பண்ணிக்கோங்க!

இதனால், வைகுண்டம் க்யூ காம்ப்ளஸில் உள்ள அனைத்து கம்பார்ட்மென்டுகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். திருமலையில் உள்ள கல்யாண வேதிகா மண்டபம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 66,782 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 36,229 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும், அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.3.71 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டம் நாளை இரவு வரை இருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

விஐபி தரிசனம் ரத்து:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதாவது, விஐபி தரிசனம் கிடையாது என்றும் அதற்கான சிபாரிசு கடிதமும் ஏற்கப்படாது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. விஐபி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது. வரிசையில் உள்ள பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர்மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில்,  தொடர் விடுமுறையையொட்டி திருப்பதில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Also Read: “Wait and See” சட்டமன்ற தேர்தல் குறித்து சஸ்பென்ஸ் வைத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்!

Latest News