Tirumala Tirupati: திருப்பதி பக்தர்களே உஷார்.. அதிர வைத்த பகீர் மோசடி.. போலீசார் அதிரடி! - Tamil News | | TV9 Tamil

Tirumala Tirupati: திருப்பதி பக்தர்களே உஷார்.. அதிர வைத்த பகீர் மோசடி.. போலீசார் அதிரடி!

சட்ட விரோதமாக அறைகளை எடுத்து பக்தர்களுக்கு அதிக விலைக்கு வாடகைக்கு விடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். கைதானவர்கள் அடிக்கடி அறை எடுத்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி அறைகளை புக் செய்தது தெரியவந்தது. கடந்த இரண்டு மாதத்தில் 45 அறைகளை முன்பதிவு செய்திருக்கின்றனர்

Tirumala Tirupati: திருப்பதி பக்தர்களே உஷார்.. அதிர வைத்த பகீர் மோசடி.. போலீசார் அதிரடி!

திருப்பதி

Updated On: 

10 Jul 2024 21:15 PM

இடைத்தரகர்கள்: உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பகர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக விஐபி தரிசனம், ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம், இலவச தரிசன என எழுமலையானை பக்தர்கள் தரிசிக்க பலவகையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. அதற்கு ஏற்றாவாறு பக்தர்கள் எழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், சட்ட விரோதமாக அறைகளை எடுத்து பக்தர்களுக்கு அதிக விலைக்கு வாடகைக்கு விடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். கைதானவர்கள் அடிக்கடி அறை எடுத்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி அறைகளை புக் செய்தது தெரியவந்தது.

Also Read: இந்த ராசியினருக்கு மகிழ்ச்சியிலும், மன அமைதியிலும் குறைவே இருக்காது.. எந்த எந்த ராசிகள் தெரியுமா?

கடந்த இரண்டு மாதத்தில் 45 அறைகளை முன்பதிவு செய்திருக்கின்றனர். பக்தர்களின் ஆதார் அட்டையை பெற்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) அறை முன்பதிவு செய்து பக்தர்களுக்கு அதிக வாடகைக்கு விடுவதாக போலீசார் தெரிவித்தனர். கைதானவர்கள் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாக பிரம்மச்சாரி மற்றும் வாரங்கலைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆதார் கட்டாயம்:

முன்னதாக, இதில் ரூ.300 கட்டண தரிசனத்திற்கான டிக்கெட் இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. திருப்பதி திருமலையில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தப்படும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜூலை 16ஆம் தேதி விஜய தரிசனம் ரத்து செய்யப்படுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: காலை கண் விழித்ததும் பார்க்கக் கூடாது விஷயங்கள்.. வாஸ்து சாஸ்திர விவரங்கள்!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!