பக்தர்களே! திருப்பதியில் நாளை அனைத்து தரிசனங்களும் ரத்து.. ஏன் தெரியுமா?
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கே உரிய மாதம். பெருமாள் கோயிலகளில் புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் திருப்பதியில் வழக்கத்தை விட அதிக கூட்டம் இருக்கும். அந்த வகையில் நாளை மறுநாள் திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. அதாவது அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் உற்சவர் 10 அவதாரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
நாளை நான்கு மணி நேரம் திருப்பதி கோயிலில் விஐபி உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருமலை திருப்பதி கோயிலாகும். உலகின் பணக்கார கடவுளாகவும் திருப்பதி கோயில் கருத்தப்படுகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு லடசக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் மேற்கொள்வர்கள். சர்வ தரிசனம், கல்யாண உத்சவம், 300 ரூபாய் டிக்கெட் தரிசனம், ஊஞ்சல் சேவை, விஐபி தரிசனம் என பிரித்து மக்கள் சுவாமியை தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் தரிசனம் செய்ய தேவஸ்தானம் தரப்பில் பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கே உரிய மாதம். பெருமாள் கோயிலகளில் புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் திருப்பதியில் வழக்கத்தை விட அதிக கூட்டம் இருக்கும். அந்த வகையில் நாளை மறுநாள் திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. அதாவது அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் உற்சவர் 10 அவதாரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
The Srivari Brahmotsavams at Tirumala Tirupati Devasthanams is a grand festival of Lord Venkateswara. Each day features vibrant processions with the deity on ornate vahanas like the Garuda Vahanam and Golden Chariot. pic.twitter.com/WBXCi1daSp
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) September 30, 2024
திருப்பதியில் எந்த ஒரு விஷேச நாளாக இருந்தாலும் அதற்கு முன் அங்கு இருக்கும் சுவாமிகள் புனித நீரால் தூய்மைபடுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். அப்படி நாளை மறுநாள் பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதால், நாளை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு ஆழ்வார் திருமஞ்சனம் என பெயர். ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதியில் மட்டுமல்லாமல் எல்லா பெருமாள் கோயில்களிலும் நடைபெறும். இந்த திருமஞ்சனத்தின் போது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Also Read: நவராத்திரி முதல் தீபாவளி வரை.. அக்டோபரின் முக்கிய விசேஷ தினங்கள்!
இதன் காரணமாக நாளை திருப்பதியில் 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமஞ்சனத்தின் போது சுவாமிகள், சிலைகள், சிற்பங்கள், பூஜைப் பொருடகள் என அனைத்தும் புனித நீரால் சுத்தம் செய்யப்படும். அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் சுவாமியை தரிசனம் செய்யக்கூடாது என்பதற்காக பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
Also Read: ”சுயமாக போராடி இங்கு வந்துள்ளேன்” – தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மிதுன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி..
விஐபி தரிசனம், சர்வ தரிசனம், தீப அலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நாளை நான்கு மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசன நேரத்தை இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டுக்கொள்ளும்படி தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவம் நடைபெறும் காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் கலைஞர்கள் பாட்டு நடனம் என 10 நாட்களும் கலை நிகழ்ச்சியை நடத்துவார்கள். 10 நாட்களும் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஒரு சிலர் 10 நாடகளுமே திருப்பதியில் தங்கி இருந்து இந்த நிகழ்ச்சியை கண்டு களிப்பார்கள். இதனை தவிர, மாட வீதியில் கலை நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக கோலகலமாக நடைபெறும். திருப்பதியே வண்ண விளக்குகளாலும், கலை நிகழ்ச்சிகளாலும் ஜொலிக்கும்.