5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒரே நாளில் 6 முருகன் கோயில்.. தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கம்!

விருப்பமுள்ள பயணிகள் டி.என்.எஸ்.டி.சி என்ற இணையதள வாயிலாககவும்,  ஆன்லைன் செயலி மூலமாகவும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். நேரில் டிக்கெட்டுகள் பெற்று பயணிக்கும் முறை இந்த சிறப்பு திட்டத்தில் இல்லை என என இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக இயக்குநர்  பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த சிறப்பு திட்டம் பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஒரே நாளில் 6 முருகன் கோயில்.. தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கம்!
சிறப்பு பேருந்து தொடக்கம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Oct 2024 11:00 AM

சிறப்பு பேருந்து: தமிழகத்தில் புகழ்மிக்க ஆன்மிக தலங்கள் பல இடங்களில் உள்ளது. இத்தகைய ஆன்மிக தலங்கள் சுற்றுலாத்தலமாகவும் விளங்குவதால் அனைத்து மக்களும் வருகை தருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேசமயம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா என்ற பெயரில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட நவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக ஒரே நாளில் பல்வேறு கோயில்களில் தரிசனம் மேற்கொள்ளும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் ஒரே நாளில் ஆறு முருகன் கோயிலுக்கு செல்லும் வகையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை கும்பகோணத்தில் அமைச்சர்கள் சிவசங்கரன் மற்றும் கோவி. செழியன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆறு முருகன் கோயிலை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும்  மாதம்தோறும் வரும் கார்த்திகை நாட்களில் இந்த சிறப்பு சுற்றுலா பேருந்தானது இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Also Read: Fluorescent Waves: ECR கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்.. என்ன காரணம் தெரியுமா?

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி வெளியிட்ட அறிக்கையில்,  “பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் வழிகாட்டுதலின்படி இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சிறப்பு சுற்றுலா பேருந்து கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலன் கோயில், பொரவச்சேரி அருள்மிகு கந்தசாமி ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயில், ஏரகரம் ஆதி சுவாமிநாத கோயில் ஆகிய ஆறு கோயில்களையும் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக  இந்த ஆன்மிக திருத்தலம் சுற்றுலாப் பேருந்து இயக்கப்படுகிறது.

இந்த பேருந்தில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக முக்கிய பண்டிகை மற்றும் விழா நாட்களில் முன்னுரிமை அளித்து தரிசனம் செய்து திரும்பும் வகையில் அறநிலையத்துறை அலுவலர்களுடன் போக்குவரத்து துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து தேவையான வசதிகளை செய்து தருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.  இந்த சிறப்பு சுற்றுலா பேருந்தில் ஒருநாள் பயணிக்க நபர் ஒன்றுக்கு ரூ. 650 கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வாரத்தின் இறுதி  இரண்டு நாட்களும் கும்பகோணம் போக்குவரத்து கழக மண்டலம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Sivakarthikeyan: அஜித் சொன்ன வார்த்தை.. தப்பை உணர்ந்த சிவகார்த்திகேயன்!

விருப்பமுள்ள பயணிகள் டி.என்.எஸ்.டி.சி என்ற இணையதள வாயிலாககவும்,  ஆன்லைன் செயலி மூலமாகவும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். நேரில் டிக்கெட்டுகள் பெற்று பயணிக்கும் முறை இந்த சிறப்பு திட்டத்தில் இல்லை என என இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக இயக்குநர்  பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த சிறப்பு திட்டம் பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே இன்று இந்த சிறப்பு ஆன்மிக சுற்றுலா பேருந்து தொடக்க விழா திருப்பனந்தாள் அருள்மிகு அருண் ஜடேஸ்வர சுவாமி திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், திருப்பனந்தாள் காசி திருமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் .உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இந்த சிறப்பு சுற்றுலா திட்டத்தில் பங்கேற்று ஊக்குவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News