5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today Panchangam October 14 2024: நல்ல காரியம் செய்ய சிறந்த நேரம்.. இன்றைய நாளின் பஞ்சாங்கம் இதோ!

ஒரு செயல் எப்படி செய்ய வேண்டும், எந்த நாளில், எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. எந்தவொரு விஷயங்கள் செய்தாலும் அதனை ஜோதிட சாஸ்திரத்தின் பஞ்சாங்க கணிப்பின்படி செய்வதால் நன்மை விளையும் என நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் அக்டோபர் 14ஆம் தேதியான இன்று நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம்.

Today Panchangam October 14 2024: நல்ல காரியம் செய்ய சிறந்த நேரம்.. இன்றைய நாளின் பஞ்சாங்கம் இதோ!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 14 Oct 2024 06:20 AM

இன்றைய பஞ்சாங்கம்: நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு செயலும் பஞ்சாங்க காலத்தின் படி கணிக்கப்பட்டுள்ளது. ஒரு செயல் எப்படி செய்ய வேண்டும், எந்த நாளில், எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. எந்தவொரு விஷயங்கள் செய்தாலும் அதனை ஜோதிட சாஸ்திரத்தின் பஞ்சாங்க கணிப்பின்படி செய்வதால் நன்மை விளையும் என நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் அக்டோபர் 14ஆம் தேதியான இன்று நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம். இன்று நல்ல நேரம் காலை 9.15 – 10.15 வரையும், மாலை 4.45 – 5.45 வரையும் உள்ளது. எனவே இந்த நேரத்தில் நல்ல காரியங்களை தொடங்கலாம். அதேபோல் இன்று எமகண்டம் காலை 10.30 – 12.00 வரையும், ராகு காலை 07.30 – 9.00 மணி வரையும் இருப்பதால் சுப காரியங்களை இந்த நேரங்களில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது.

  1. அக்டோபர் 11 – 2024 | 28 – புரட்டாசி – குரோதி ஆண்டு– திங்கட்கிழமை
  2. நல்ல நேரம் – காலை 9.15 – 10.15 வரை; மாலை – 4.45 – 5.45
  3. கௌரி நல்ல நேரம் – மதியம் 01:45 – 02.45– மாலை 07:30 – 08:30
  4. ராகு காலம் – காலை 07.30 – 09.00
  5. எமகண்டம் – காலை 10.30 – 12.00
  6. குளிகை – மதியம் 01.30 – 03.00
  7. சூலம் – கிழக்கு
  8. பரிகாரம் – தயிர்
  9. சந்திராஷ்டமம் – புனர்பூசம் | பூசம்
  10. நாள் – மேல் நோக்கு நாள்
  11. லக்னம் – கன்னி லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 39
  12. சூரிய உதயம் – காலை 06:02
  13. ஸ்ரார்த திதி – துவாதசி
  14. திதி – இன்று அதிகாலை 02:44 AM வரை ஏகாதசி பின்பு துவாதசி
  15. நட்சத்திரம் – இன்று இரவு 10:26 PM வரை சதயம் பின்பு பூரட்டாதி
  16. சுபகாரியம் – நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். செலவுகள் வெகுவாக குறையும். கூடுதல் வருமானம் தரும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்

எடுத்த காரியத்தில் சாதகத்தன்மை வீட்டிலும் வெளியிலும் அதிகரிக்கிறது. எடுத்த காரியங்கள் சற்று சிரமத்துடன் முடிவடையும். நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. பயணங்களால் அதிக பலன் கிடைக்காது. தொழில், வியாபாரத்தில் ஓரிரு அவசர முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

சிறிது முயற்சி செய்தால் இன்றைய நாளின் நிதிச் சிக்கல்களைச் சமாளித்துவிடலாம். எடுத்த காரியம் மெதுவாக நடக்கும். முக்கிய விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

கடகம்

இன்றைய நாளின் அனைத்து முக்கியமான காரியங்களும் மிகுந்த முயற்சியுடன் முடிவடையும். சமூகத்தில் மரியாதை கூடும். செல்வாக்கு மிக்கவர்களுடனான தொடர்பு அதிகரிக்கும். வீட்டிற்கு அன்பான உறவினர்களின் வருகை இருக்கும்.

சிம்மம்

இன்றைய நாளில் உங்களுக்கு பொருளாதார சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். குழந்தை பருவ நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய தொடர்புகள் உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு.

கன்னி

குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கிடைக்காமல் சில சிரமங்கள் ஏற்படும். எடுக்கப்பட்ட பணிகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிவடையும். தொழில், வியாபாரம் லாபகரமாக இருக்கும். வேலையில்லாதவர்களின் முயற்சிகள் ஊக்கமளிக்கும்.

துலாம்

வீட்டிலும், வெளியிலும் உங்களுக்கான சாதகமான நாளக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். திருமண முயற்சிகள் தொடர்பாக உறவினர்கள் மூலம் முக்கியத் தகவல்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும்.

விருச்சிகம்

நீண்ட நாட்களாக மன உளைச்சலை ஏற்படுத்தி வந்த ஓரிரு தனிப்பட்ட பிரச்சனைகள் விலகும். திருமண முயற்சிகள் தொடர்பாக அன்பானவர்களிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மிக பயணம் செல்வீர்கள்.

தனுசு

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப விஷயங்களில் கவனம் அதிகரிக்கும் நேரமாக அமையும். மனைவியுடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கூடும். எடுத்த காரியங்களும் குறித்த நேரத்தில் சுமூகமாக முடிவடையும்.

மகரம்

நிதி நிலைமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். உங்களுக்கு பிடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவீடுவீர்கள் எடுத்த காரியங்களில் நன்மை கிடைக்கும்.

கும்பம்

புதிய வருமான முயற்சிகள் பலன் தரும். தனிப்பட்ட காரணங்களால் திடீர் பயணங்களை ரத்து செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் அழுத்தங்கள் அதிகமாகும். நண்பர்களுடன் ஆன்மிக தலங்களுக்குச் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

இன்றைய நாளில் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.வருமான முயற்சிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொத்து தகராறு தீரும் வாய்ப்பு உள்ளது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

 

Latest News