Today Panchangam October 30 2024: நல்ல காரியம் செய்ய உகந்த நேரம் என்ன? இன்றைய பஞ்சாங்க விவரங்கள் இதோ!
Tamil Panchangam: ஒவ்வொரு தினத்துக்கும் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. கிரகங்களின் போக்கின் அடிப்படையில் இந்த நேரம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. திங்கள் முதல் ஞாயிறு வரை இந்த நேரகாலம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தின் நல்ல நேரம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரம் பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம்: ஒரு செயல் எப்படி செய்ய வேண்டும், எந்த நாளில், எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என பஞ்சாங்க காலத்தின் படி கணிக்கப்பட்டுள்ளது. நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு செயலும் அதனை ஜோதிட சாஸ்திரத்தின் பஞ்சாங்க கணிப்பின்படி செய்வதால் நன்மை விளையும் என நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் அக்டோபர் 30ஆம் தேதியான இன்று நல்ல நேரம், ராகு உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்களை பார்க்கலாம். இன்று நல்ல நேரம் காலை 9.15 – 10.15 வரையும் உள்ளது. எனவே இந்த நேரத்தில் நல்ல காரியங்களை தொடங்கலாம். அதேபோல் இன்று எமகண்டம் 07.30 – 09.00 வரையும், ராகு காலை 12.00 – 01.30 மணி வரையும் இருப்பதால் சுப காரியங்களை இந்த நேரங்களில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது.
அக்டோபர் 30 – 2024 | 13 – ஐப்பசி – குரோதி – புதன்கிழமை
- நல்ல நேரம் – காலை 9.15 – 10.15 வரை
- கௌரி நல்ல நேரம் – காலை 10:45 – 11:45 – மாலை 06:30 – 07:30
- ராகு காலம் – 12.00 – 01.30
- எமகண்டம் – 07.30 – 09.00
- குளிகை – 10.30 – 12.00
- சூலம் – வடக்கு
- பரிகாரம் – பால்
- சந்திராஷ்டமம் – அவிட்டம் சதயம்
- நாள் – ச நோக்கு நாள்
- லக்னம் – துலா லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 56
- சூரிய உதயம் – காலை 06:03
- ஸ்ரார்த திதி – அதிதி
- திதி – இன்று பகல் 02:21 PM வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
- நட்சத்திரம் – இன்று இரவு 11:22 PM வரை அஸ்தம் பின்பு சித்திரை
- சுபகாரியம் – கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்
இன்றைய நாளின் ராசிபலன்
மேஷம்
தொழில், வியாபாரம் மிகவும் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு மற்ற நிறுவனங்களில் இருந்து சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
தொழில் மற்றும் வேலைகளில் உங்கள் திறமைகள் பிரகாசமாக இருக்கும். அதிகாரிகள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி உண்டாகும்.
Also Read : வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் விலக உதவும் முருகன் கோயில்!
மிதுனம்
வேலையில் உங்கள் செயல்திறனால் அனைவரையும் கவர்வீர்கள். சிலர் நெருங்கிய நண்பர்களின் உதவியால் ஓரிரு தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் சொந்த முடிவுகளை செயல்படுத்தி ஆதாயமடைவீர்கள்.
கடகம்
தொழில், வியாபாரம் உற்சாகமாக முன்னேறும். வேலையில் பொறுப்பு அதிகரிக்கும். திருமணம் மற்றும் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுப முன்னேற்றங்கள் ஏற்படும்.
சிம்மம்
வருமானம் சற்று விரிவடையும் வாய்ப்பு உள்ளது. சில உறவினர்களிடம் பேசுவது சிரமமாக இருக்கும். வருமானம் நன்றாக வளரும் ஆனால் செலவுகள் பற்றி ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களால் பண நெருக்கடி ஏற்படும்.
கன்னி
திட்டமிட்ட பணிகள் திட்டமிட்டபடி முடிவடையும். சமூகத்தில் மரியாதையும் பண்பாடும் வெகுவாகப் பெருகும். திடீர் நிதி ஆதாயம். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்
துலாம்
வேலை விஷயங்கள் சாதகமாக நடக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
விருச்சிகம்
வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் சில முக்கிய காரியங்கள் முடிவடையும். தொழில், வியாபாரம் லாபத்தை நோக்கி செல்லும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளும் திறமையாக நிறைவேற்றப்படும்.
தனுசு
ரியல் எஸ்டேட் தகராறு மற்றும் சகோதரர்களுடன் இருந்த பிற பிரச்சனைகள் பெரிய அளவில் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக நம்பிக்கையான சூழ்நிலை இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
மகரம்
முக்கியமான பணிகள் மற்றும் விவகாரங்களில் சிரமமின்றி தயார்நிலை இருக்கும். கூடுதல் வருமான முயற்சிகள் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு பலன்களை தரும். வாகன யோகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
வேலையில்லாதவர்களின் கனவுகள் நனவாகும். சிலருக்கு உறவினர்களிடம் இருந்து சுப அழைப்புகள் வரும். சொத்து விவகாரம் நல்லபடியாக நடக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு லாபம் பெறுவார்கள்.
Also Read : தீபாவளி நாளில் லாபம் பெறும் 5 ராசிக்காரர்கள்.. யார் தெரியுமா?
மீனம்
பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உங்களின் செயல்பாடுகளால் திருப்தி அடைவார்கள். முக்கியமான காரியங்கள் குறித்த நேரத்தில் முடிவடைந்து நிம்மதி கிடைக்கும்.