TV9 Festival of India: காபூல் கற்கள் முதல் ஈரானிய குங்குமப்பூ வரை… TV9 திருவிழாவில் இடம் பெற்றுள்ள உலகின் தலை சிறந்த பொருட்கள்! - Tamil News | TV9 festival of India 2024 in in delhi major dhyan chand stadium kabul Stone to Iran saffron details in Tamil | TV9 Tamil

TV9 Festival of India: காபூல் கற்கள் முதல் ஈரானிய குங்குமப்பூ வரை… TV9 திருவிழாவில் இடம் பெற்றுள்ள உலகின் தலை சிறந்த பொருட்கள்!

TV9 Festival of India: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட TV9 நெட்வொர்க் நடத்தும் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா 2024 மக்களின் பேராதரவோடு மிகக் கோலாகலமாக தொடங்கியது. இந்த துர்கா பூஜையின் பாரம்பரியமிக்க உணர்வுகளை இந்தத் திருவிழா முழுவதுமாக வெளிப்படுத்தியது. தலைநகர் டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

TV9 Festival of India: காபூல் கற்கள் முதல் ஈரானிய குங்குமப்பூ வரை... TV9 திருவிழாவில் இடம் பெற்றுள்ள உலகின் தலை சிறந்த பொருட்கள்!

TV9 ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா

Published: 

11 Oct 2024 17:25 PM

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட TV9 நெட்வொர்க் நடத்தும் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா 2024 மக்களின் பேராதரவோடு மிகக் கோலாகலமாக தொடங்கியது. இந்த துர்கா பூஜையின் பாரம்பரியமிக்க உணர்வுகளை இந்தத் திருவிழா முழுவதுமாக வெளிப்படுத்தியது. தலைநகர் டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஐந்து நாள் ‌ கொண்டாட்டம் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13 ஆம்‌ தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவில் உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்களை உள்ளடக்கிய 250க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. இது பார்வையாளர்களுக்கு உலகளாவிய வர்த்தகம் மற்றும் இந்திய கலாச்சார விழாக்களின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

அதிக கவனம் பெற்ற ஸ்டால்கள்:

TV9 நடத்தும் இந்த ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா திருவிழா, பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் தங்கள் சிறந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கு ஒரு சர்வதேச‌ தளமாக விளங்குகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் இந்திய ஸ்டால்கள் அதிகளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புகழ்பெற்ற காபூல் கற்களில் வடிவமைக்கப்பட்ட வீட்டு அலங்கார பொருட்களை ஆப்கானிஸ்தான் வர்த்தகர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த அரிய கைவினைப் பொருள்களை வீட்டிற்கு வாங்கிச் செல்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைகிறது.

ஈரானிய குங்குமப்பூ ஸ்டால் மற்றொரு முக்கிய ஈர்ப்பாக இருக்கிறது. இந்த ஸ்டால்களின் ஈரானிய பிரீமியம் குங்குமப்பூவை விற்பனை செய்வதோடு இந்தியாவின் மதிப்புமிக்க காஷ்மீரி குங்குமப்பூவும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் மிக உயர் தரமான குங்குமப்பூவை பார்வையாளர்கள் வாங்கி செல்வதற்கு இந்த திருவிழா ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்டால்களின் சிறப்பம்சம்:

TV9 ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா 2024, ஆப்கானிஸ்தான் உடனான இந்தியாவின் கலாச்சார உறவுகளை பலப்படுத்துகிறது.‌ இதன் மூலம் ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களுக்கு அவர்களின் உயர்தர உலர் பழங்களை விற்க‌ ‌ இந்த ‌திருவிழா ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் இந்த உலர் பழங்களுக்கான தேவை அதிகம் உள்ளது.

Also Read: TV9 Festival Of India: TV9 நடத்தும் துர்கா பூஜை.. பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்!

மேலும், ராணுவ வீரர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காக அவர்களின் உணவில் தினையை சேர்க்க இந்திய ராணுவம் சமீபத்தில் முடிவெடுத்திருந்தது. அந்த முடிவுக்கு ஏற்ப தினை சிற்றுண்டிகளுக்கான பிரத்தியேக ஸ்டால்கள் இந்த திருவிழாவில் இடம் பெற்றுள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பார்வையாளர்களுக்கு இந்தியாவின் சிறந்த ருசிகரமான உணவுப் புரட்சியை வழங்குகிறது.

துர்கா பூஜை மற்றும் இரவு நேர கொண்டாட்டம்:

துர்கா பூஜை கொண்டாட்டங்கள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் துர்கா தேவியை வணங்குவதற்காக அழகான பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. திருவிழாவில் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் இரவு நேரத்தில் தாண்டியா மற்றும் கர்பா போன்ற உற்சாகமிக்க கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது.

  • அக்டோபர் 11ஆம்‌ தேதி மாலை 6:30 மணிக்கு தாண்டியா மற்றும் கர்பா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • அக்டோபர் 11‌ஆம்‌ தேதி இரவு 8 மணி முதல் 9:30 மணி வரை டாக் மற்றும் துனுச்சி நடன போட்டி நடைபெறும்.
  • அக்டோபர் 12ஆம்‌ தேதி‌‌ காலை 11 மணிக்கு ஓவியம் வரைதல், மாறுவேட போட்டி மற்றும் நடன போட்டி போன்றவை குழந்தைகளுக்கு நடைபெறும்
  • அக்டோபர் 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு TV9 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு ‘ஆனந்தமேலா உணவு களியாட்டம்’ என்ற பெயரில் சுவையான உணவுகள் வழங்கப்படும்.
  • அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை அந்தாக்சரி போட்டி நடைபெறும்.
  • அக்டோபர் 12 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9:30 மணி வரை துணுச்சி நடன போட்டி நடைபெறும்.
  • இறுதி நாளான அக்டோபர் 13 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு துர்கா பூஜையின் இறுதி நாளில் விளையாடப்படும் சிந்தூர் கேளா எனப்படும் பெண்களுக்கான விளையாட்டு நடைபெறும்.

Also Read: TV9 Festivals Of India: நவராத்திரி பண்டிகை.. கோலாகலமாக தொடங்கிய TV9 இந்தியாவின் திருவிழா!

ஒற்றுமைக்கான கொண்டாட்டம்:

TV9 ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா 2024 என்பது ஒரு நிகழ்வு மட்டும் அல்ல. இது கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் உலகளாவிய ஒற்றுமையின் கொண்டாட்டமாகும். இந்தத் திருவிழா, இந்திய பாரம்பரியங்களில் வேரூன்றி இருக்கும் ஆப்கானிஸ்தான் உலர் பழங்கள் முதல் ஈரானிய குங்குமப்பூ வரை, உலகின் தலைசிறந்த பொருட்களை ஒற்றை கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளது. சர்வதேச பொருள்களின் வசீகரம் மற்றும் உற்சாகமான துர்கா பூஜை கொண்டாட்டங்களால் பார்வையாளர்கள் நிச்சயம் ஈர்க்கப்படுவார்கள்.

 

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version