5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Festival of India: டிவி9 துர்கா பூஜை திருவிழா.. இன்று இவ்வளவு சிறப்புகளா?

TV9 Festival of India 4th Day: TV9 நெட்வொர்க் நடத்தும் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா இன்று சிறப்பாக கொண்டாடியது. இன்று பூஜையுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. குறிப்பாக, குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பலவகையான உணவுகளுக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Festival of India: டிவி9 துர்கா பூஜை திருவிழா.. இன்று இவ்வளவு சிறப்புகளா?
ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா நான்காவது நாள்
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 12 Oct 2024 20:36 PM

துர்கா பூஜையை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா என்னும் நிகழ்வை TV9 நெட்வொர்க் நான்காவது நாளாக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறது. இந்தத் திருவிழாவில் ஒரு புறம்‌ பக்தியில் மூழ்கி இருக்கிறார்கள். மறுபுறம் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வண்ணமயமான நிகழ்ச்சிகளை கோலாலமாக கொண்டாடி வருகிறார்கள்.

எல்லா இடங்களிலும் மக்களின் மத்தியில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டு உள்ளது. இந்த விழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பு செய்கிறார்கள். இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 13‌ஆம் தேதி வரை‌ நடைபெறும் இந்த நிகழ்ச்சியை TV9 நெட்வொர்க் ஏற்பாடு செய்திருக்கிறது. இவ்விழாவில் இதுவரை பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

இன்றைய நிகழ்ச்சிகள்:

இந்தத் திருவிழா கடந்த மூன்று நாட்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில்‌ ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சியின் நான்காவது நாளான இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். அக்டோபர் 12ஆம் தேதி நவமி பூஜையுடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் பத்து மணிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 11:30 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Also Read: TV9 Festival of India: காபூல் கற்கள் முதல் ஈரானிய குங்குமப்பூ வரை… TV9 திருவிழாவில் இடம் பெற்றுள்ள உலகின் தலை சிறந்த பொருட்கள்!

பின்னர் காலை 11‌ அனைவரின் நன்மைக்காகவும் மணிக்கு ஹவன் (யாகம்) இதைத் தொடர்ந்து காலை 11:30 மணிக்கு பாராயணம் செய்யப்பட்டது. பாராயணம் முடிந்த பிறகு மதியம் 1:30 மணிக்கு பிரசாத விநியோகமும் பெற்றது. இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் நிகழ்வில் திரளான மக்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

  • அக்டோபர் 12ஆம்‌ தேதி‌‌ காலை 11 மணிக்கு ஓவியம் வரைதல், மாறுவேட போட்டி மற்றும் நடன போட்டி போன்றவை குழந்தைகளுக்கு நடைபெறும்
  • அக்டோபர் 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு TV9 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு ‘ஆனந்தமேலா உணவு களியாட்டம்’ என்ற பெயரில் சுவையான உணவுகள் வழங்கப்படும்.
  • அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை அந்தாக்சரி போட்டி நடைபெறும்.
  • அக்டோபர் 12 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9:30 மணி வரை துணுச்சி நடன போட்டி நடைபெறும்.

குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்:

ஃபெஸ்டிவல் ஆப் இந்தியாவின் நான்காவது நாளான இன்று குழந்தைகளுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாளில் குழந்தைகளுக்காக ஓவியம், நடனம், மாறுவேட போட்டி மற்றும் பல விஷயங்கள் குழந்தைகளுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கலாச்சாரம், கங்கா – ஜமுனி கலாச்சாரம் (இஸ்லாமிய கலாச்சார கூறுகளுடன் இந்து கலாச்சாரக் கூறுகளை ஒன்றிணைக்கும் இணைப்பாகும்), மற்றும் பன்முகத்தன்மையில் ஒற்றுமை ஆகியவற்றை சம தளத்தில் பரிமாறும் ஒரு தருணமாகும்.

இந்த கண்காட்சியில் அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் இருந்து ஏதாவது ஒரு சிறப்பு உணவு வகைகளை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அது அவர்களது பார்ட்டியின் ஸ்பெஷல் ரெசிபியாக இருக்கலாம். அல்லது தாயின் கைமணம் மாறாத சுவையான உணவுகளை கொண்டு வந்து சொந்த ஸ்டால் அமைக்கலாம். மொத்தத்தில் இன்று பக்தியில் மூழ்கும் நாளாக இருக்கும் அதே வேளையில் மறுபுறம் சிறு குழந்தைகளின் கொண்டாட்டத்தில் வண்ணங்களால் வர்ணம் பூசப்படும்.

Also Read: TV9 Festival Of India: TV9 நடத்தும் துர்கா பூஜை.. பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்!

உணவு சிறப்பு ஏற்பாடுகள்:

இந்த திருவிழாவில் உணவுக்காக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபி உணவுகள், பீகாரின் லித்தி சோக்கா, லக்னோவின் கபாப்கள், மகாராஷ்டிராவின் பாவ் பாஜி மற்றும் ராஜஸ்தானின் உணவுகள் என பல சுவையான உணவுகளை சுவைக்கலாம். டெல்லியின் கோல் கப்பா, சாட் ஆகியவற்றுடன் சைனீஸ் உணவுகளும் இங்கு கிடைக்கும்.

இவ்விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 250 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக பொருட்களை இங்கு வாங்க முடியும். இந்த விழா அக்டோபர் 13ஆம் தேதி விஜயதசமி அன்று நிறைவடைகிறது. இந்த திருவிழா பெண்கள் விளையாடக் கூடிய சிந்து கேளா மற்றும் தேவி பூஜை உடன் முடிவடையும்.

Latest News