5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rudratcham : யாருக்கு எந்த ருத்ராட்சம் பலன் தரும்? தெரிந்து கொள்ளுங்கள்

Types of Rudratcham : யார் எந்த ருத்ராட்சம் அணியலாம்? பொன்னை விரும்பாமல் ருத்ராட்சத்தை அணிந்திருந்த சிவனின் அருளை நேரடியாக பெற விரும்புபவர்கள் இந்த ருத்ராட்சத்தை அணிந்துகொள்கிறார்கள்.

Rudratcham : யாருக்கு எந்த ருத்ராட்சம் பலன் தரும்? தெரிந்து கொள்ளுங்கள்
மாதிரி படம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 17 May 2024 07:43 AM

ருத்ராட்சம் : ருத்ராட்சம் சிவனின் கண்ணாக பார்க்கப்படுகிறது. அவரின் அருளை நேரடியாகப் பெருவதற்காகவே ருத்ராட்சம் அணியப்படுகிறது. பொன்னை விரும்பாமல் ருத்ராட்சத்தை அணிந்திருந்த சிவனின் அருளை நேரடியாக பெற விரும்புபவர்கள் இந்த ருத்ராட்சத்தை அணிந்துகொள்கிறார்கள். ஒரு ருத்ராட்சம் மட்டும் போடுபவர்களும் இருக்கிறார்கள், மாலையாக போடுபவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் ருத்ராட்சத்தை அணிய பயப்படுகிறார்கள். இதை அணிந்தால் அதிக சோதனைக்கு ஆளாவோம் என்றும், அசைவம் சாப்பிடக்கூடாது என்றும், குடும்பத்தில் இருப்பவர்கள் அணியக்கூடாது என்றும் பல கருத்துகள் உண்டு. ஆனால் உண்மையில் எல்லா கடவுள்களுமே சோதித்துப் பார்க்கத்தான் செய்வார்கள். அதிலும் திருவிளையாடல் நடத்தியவன் சோதிக்காமல் இருப்பானா என்ன.

ருத்ராட்ச முகம்

ருத்ராட்சத்திலுள்ள கோடுகளைத்தாப் முகம் என்கிறோம். 5 கோடுகள் இருந்தால் 5 முகம். 6 இருந்தால் 6 முகம்.

ஒரு முக ருத்ராட்சம்

அரிதாகக் கிடைக்கக்கூடிய இந்த ருத்ராட்சம், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணிய உகந்தது.

இரு முக ருத்ராட்சம்

இருமுகங்களும் சிவன் சக்தி என பார்க்கப்படுவதால், தம்பதியர்கள் அணிந்து ஒரு நிலைத் தன்மையைப் பெறலாம்.

மூன்று முக ருத்ராட்சம்

இந்த ருத்ராட்சத்தை ஆளும் தலைவன் செவ்வாய், தூய்மையான தீயைப்போல, எல்லா தவறுகளும் நீங்கி தூய்மைநிலை அடைய விரும்புபவர்கள் அணியலாம்.

நான்கு முக ருத்ராட்சம்

புதன் ஆளும் தலைவன்.பிரம்ம தேவரை குறிக்கும் ருத்ரமாதலால் இதை அணிபவர்கள் ஆக்க சக்தியைப் பெறுவார்கள். இதை கழுத்தில் கட்டுவதை விட வலது கையில் கட்டுவது இன்னும் சிறப்பு.

ஐந்து முக ருத்ராட்சம்

ஆளும் தலைவன் குரு பகவான். மன அமைதியும் ஆரோக்கியமும் வேண்டுபவர்கள் அணியலாம்.

ஆறு முக ருத்ராட்சம்

ஆளும் தலைவன் சுக்கிரன். அறிவு மேம்படவும், தலைமைப் பண்பை பெற விரும்புபவர்களும் அணியலாம்.

Also read: உங்கள் குழந்தைக்கு இப்பொழுதுதான் உடல்நிலை சரியில்லாமல் போய் சரியானதா? உடனே டூத் பிரஷ்ஷை மாற்றுங்கள்.

ஏழு முக ருத்ராட்சம்

ஆளும் தலைவன் சனி பகவான். நிதி மற்றும் பொருளாதார சிக்கலிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அணியலாம்

எட்டு முக ருத்ராட்சம்

ஆளும் தலைவன் ராகு பகவான். எதிரிகள் தொல்லை நீங்க விரும்புபவர், செல்வ செழிப்பு அதிகரிக்க ஆசைப்படுபவர்கள் அணியலாம்.

ஒன்பது முக ருத்ராட்சம்

ஆளும் தலைவன் கேது பகவான். பில்லி சூனியத்திலிருந்து விடுபட்டு உடல் மற்றும் மன ஆற்றல் பெருக விரும்புபவர்கள் அணியலாம்

பத்து முக ருதருத்ராட்சம்

ஆளும் தலைவன் விஷ்ணு. தலைதலைமுறையாக குடும்பம் செழிக்க விரும்புபவர்கள் மற்றும் கோள்களினால் ஏற்படும் தீவினைகளிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அணியலாம்.

பதினொரு முக ருத்ராட்சம்

அனுமனின் அம்சமான இந்த ருத்ராட்சத்தை அணிபவர்கள் நேர்மையாகவும், துணிவாகவும், தீய சக்திகளை எதிர்த்து வெற்றியை அடைவார்கள்.

Latest News