5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு அன்று இந்த கோயிலுக்கு சென்றால் வரம் கிடைக்கும்!

Sri Padmavati Ammavaari Temple: வரலட்சுமி நோன்பு அன்று திருமணமான ஒவ்வொரு பெண்ணும் தங்களுடைய கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். அதேசமயம் தாங்களும் நீண்ட காலம் மஞ்சள் குங்குமத்துடன் நீடுடி வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் விரதம் இருப்பார்கள். நடப்பாண்டு வரலட்சுமி நோன்பு  ஆடி மாதம் கடைசி நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. 

Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு அன்று இந்த கோயிலுக்கு சென்றால் வரம் கிடைக்கும்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 14 Aug 2024 11:24 AM

வரலட்சுமி நோன்பு: ஆடி மாதத்தில் வரும் மிக முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்று வரலட்சுமி நோன்பு. திருமணமான ஒவ்வொரு பெண்ணும் தங்களுடைய கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். அதேசமயம் தாங்களும் நீண்ட காலம் மஞ்சள் குங்குமத்துடன் நீடுடி வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தினத்தில் விரதம் இருப்பார்கள். நடப்பாண்டு வரலட்சுமி நோன்பு  ஆடி மாதம் கடைசி நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.  இது ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியாகும். அதனால் இந்த தினம் மிகுந்த சிறப்பான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு சென்றால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி நோன்பு மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்படுவது வழக்கம். இந்த கோயில் ஆந்திரப்பிரதேசம் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக பத்மாவதி தாயார் எனப்படும் அலர்மேல் மங்கை பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருப்பதி வரும் பக்தர்கள் அலர்மேல் மங்கையை காணாமல் வீடு திரும்பக்கூடாது என்பது ஐதீகமாகும். இக்கோயிலில் தீர்த்த பிரம்மோற்சவம் மற்றும் வரலட்சுமி நோன்பு ஆகிய நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறும்.

இதையும் படிங்க: மார்பு பகுதியில் முருகன் டாட்டூ.. பெண்ணுக்கு எழுந்த கண்டனங்களும்.. ஆதரவுகளும்!

அன்றைய விரத நாளில் பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி, புதுத்துணி அணிந்து கோயிலுக்கு செல்ல வேண்டும்.  கோயிலில் அமைத்துள்ள மைய மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வரலட்சுமி தேவிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதனை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த வரலட்சுமி நோன்பில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மேலாடை துணி, பிளவுஸ் துணி, மஞ்சள், குங்குமம், லட்டு,வடை ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும்.

இதையும் படிங்க: Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு அன்று வீட்டில் வழிபடுவது எப்படி?

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அலர்மேல் மங்கை கோயிலில் சிறப்பு அபிஷேகம், லட்சுமி பூஜை, கல்யாணோத்ஸவம், குங்குமார்ச்சனை, வேதாசிர்சாச்சனம், சஹஸ்ர தீப அலங்கார சேவை போன்ற ஆர்ஜித சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.இந்த வழிபாட்டில் பங்கேற்கும் வாழ்க்கையில் செல்வ செழிப்பு, உடல்நலத்தில் ஆரோக்கியம் , குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சி ஆகியவை பெருகும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

வரலட்சுமி நோன்பையொட்டி, அன்று அலர்மேல்மங்கை அம்மன் மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு வீதிகளிலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News