5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vastu Tips : வாஸ்து சாஸ்திரம் சொல்வது இதுதான்.. துடைப்பம் முதல் துளசி செடி வரை லிஸ்ட்!

Vastu shastra : வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில வகையான வாஸ்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் செல்வம் பெருகும், குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படியானால் அந்த சிறிய வாஸ்து குறிப்புகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

Vastu Tips : வாஸ்து சாஸ்திரம் சொல்வது இதுதான்.. துடைப்பம் முதல் துளசி செடி வரை லிஸ்ட்!
வாஸ்து
Follow Us
intern
Tamil TV9 | Published: 31 May 2024 15:08 PM

வாஸ்து சாஸ்திரம் : ஆன்மீக நம்பிக்கை இருப்பவர்கள் வாஸ்து சாஸ்திரத்திலும் நம்பிக்கை வைத்துள்ளனர். வீடு, அலுவகம் தாண்டி வீட்டின் எல்லா விஷயத்திலும் வாஸ்து பார்க்கின்றனர். வீட்டின் அஸ்திவாரம் முதல் வீட்டின் சுவர்களில் பூசப்படும் வண்ணங்கள் வரை அனைத்தும் வாஸ்து விதிப்படி உள்ளதா என்று பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் வீடு கட்டுவதில் வாஸ்துவை பின்பற்றுபவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை சற்று கவனக்குறைவாகவே செய்கிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில வகையான வாஸ்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் செல்வம் பெருகும், குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படியானால் அந்த சிறிய வாஸ்து குறிப்புகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

Also Read : 7 ராசிகளுக்கு மகா யோகம்.. ரிஷபம் ராசியில் முக்கிய கிரகங்கள்!

  1. வாஸ்து சாஸ்திரத்தில் துடைப்பத்துக்கு தனி இடம் உண்டு என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஆனால் நம்மில் பெரும்பாலோர் வீட்டை துடைத்த பிறகு துடைப்பத்தை கதவுக்கு அருகில் வைத்திருப்போம். ஆனால் வாஸ்து படி இதை செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. துடைப்பம் வீட்டின் எதாவது கண் பார்வையில் சிக்காத மூலையில் இருக்க வேண்டும்.
  2. வீட்டில் உள்ள மத புத்தகங்களை தவறான திசையில் வைப்பதால் பிரச்சனைகள் வரலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம். அதனால் புத்தகங்கள் மற்றும் வேதங்களை எப்போதும் வீட்டின் மேற்கு திசையில் வைக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மத புத்தகங்களை படுக்கையறையில் வைக்க கூடாது.
  3. பசு நெய்யில் தீபம் ஏற்றுவது மட்டுமின்றி வீட்டில் பூஜை அறையில் மணியும் அடிக்க வேண்டும் என்பது ஐதீகம். தற்போது தம்பதிகள் இருவரும் வேலை காரணமாக பிஸியாகி விட்டதால் சிலர் பூஜை செய்வதை நிறுத்திவிட்டுகின்றனர். ஆன்மீகம் என்பது மனதுக்கு பாசிட்டிவிட்டி தரும் விஷயம். அதனால் தீபம், பூஜை என்பதை கண்டிப்பாக தொடர வேண்டும்
  4. வீட்டின் சுவர்களில் பொருத்தப்படும் படங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். குறிப்பாக சுவரொட்டிகளில் மரங்கள், ஆறுகள் என மனதுக்கு இதமான விஷயங்கள் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி காட்டு மிருகங்கள், போர் போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும்.
  5. தூங்கும் திசையிலும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கண்டிப்பாக தெற்கு நோக்கி தலை வைத்து தூங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
  6. வீட்டில் கண்டிப்பாக துளசி செடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக துளசி செடியை நடும்போது தினமும் வடகிழக்கு திசையில் தண்ணீர் சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்கி அமைதி கிடைக்கும்.

(இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News