Vastu Tips: வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலவ இப்படி பண்ணலாம்!

Negative Energy: பலர் என்னதான் நல்லது நினைத்தாலும், நல்லது செய்தாலும் அவர்களுக்கு நடப்பதெல்லாம் எதிர்மறையாக தான் இருக்கும். அதற்கு காரணம் கிரகப்பலனாக இருக்கலாம் என ஜோதிடத்தில் சொல்வார்கள். ஆனால் வாஸ்து பலன்களும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கும் என்பதை பல பேர் நினைத்திருக்கக்கூட மாட்டார்கள்.

Vastu Tips: வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலவ இப்படி பண்ணலாம்!

கோப்பு புகைப்படம்

Published: 

07 Aug 2024 16:01 PM

வாஸ்து டிப்ஸ்: நம்மை சுற்றி எப்பவும் பாசிட்டிவான எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறோம். நாம் எதை நினைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம் என சொல்வார்கள். அதாவது நாம் பாசிட்டிவாக நினைத்தால் நடப்பதெல்லாம் பாசிட்டிவாக இருக்கும். இல்லாவிட்டால் நாம் நினைப்பது நெகட்டிவ் தான் என்ற அர்த்தத்தில் புரிந்துக் கொள்வார்கள். ஆனால் பலர் என்னதான் நல்லது நினைத்தாலும், நல்லது செய்தாலும் அவர்களுக்கு நடப்பதெல்லாம் எதிர்மறையாக தான் இருக்கும். அதற்கு காரணம் கிரகப்பலனாக இருக்கலாம் என ஜோதிடத்தில் சொல்வார்கள். ஆனால் வாஸ்து பலன்களும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கும் என்பதை பல பேர் நினைத்திருக்கக்கூட மாட்டார்கள். நாம் சாதாரணமாக வீட்டில் வைக்கும் ஒரு பொருளால் கூட பிரச்னை வரலாம் தெரியுமா?. அப்படி வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நாம் சில செயல்கள் மூலம் விரட்டால் என சாஸ்திரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

Also Read: BSNL Recharge Plan: 18 ரூபாய் இருந்தாலே போதும்… பிஎஸ்என்எல் வழங்கும் சூப்பரான ரீசார்ஜ் பிளான்.. மிஸ் பண்ணாதீங்க!

கலசத்தை வைக்க வேண்டிய திசை

வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்கும் சக்தி கலசத்திற்கு உண்டு. சிலர் பூஜையறையில் கலசம் வைத்து வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால் கலசத்தை வடகிழக்கு மூலையில் வைத்து விநாயகரின் வடிவமாக வைத்து வழிபட வேண்டும். அதன் பிறகு அதிலிருக்கும் நீரை செடிகளுக்கு இறைத்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கி விடும்.

உப்பு

சமையலில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் உப்பு எதிர்மறை ஆற்றலை அகற்ற மிகவும் உதவுகிறது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். உப்பு நீரில் தரையை துடைத்து உங்கள் வீட்டின் மூலைகளில் கொஞ்சம் உப்பு போடுவது வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை அகற்றும் என நம்பப்படுகிறது.

 சுவாமியின் படம் இருக்க வேண்டியது 

பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் படம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை அகற்றவும் உதவுகிறது. ஆனால் அதனை சரியான திசையில் வைக்க வேண்டும். வீட்டின் வாசலில் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமியின் படத்தை வைப்பதால் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் நுழைவது தடுக்கப்படும்.

கற்பூரம்

நாம் ஆன்மிக விஷயங்களில் அதிகம் பயன்படுத்தும் கற்பூரம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும். தினமும் மாலையில் கற்பூரம் ஏற்றி வீட்டின் மூலையில், வீட்டு வாசலில் காட்டுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், எதிர்மறை ஆற்றல் நேர்மறை ஆற்றல் மூலம் மாற்றப்படும். மேலும் கடவுள் வழிபாட்டின்போது தூபம் ஏற்றுவது எதிர்மறை சக்தியையும் நீக்குகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?