Vastu Tips: பூஜையறையில் தவறியும் கூட இதெல்லாம் செய்யாதீங்க!
Astrology: பொதுவாக பூஜையறை சரியான இடத்தில் அமையாவிட்டாலோ அல்லது பூஜையறையில் நாம் சில தவறுகள் செய்தாலோ வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவிவிடும் என நம்பப்படுகிறது. பொதுவாக வீடு எப்படி கட்டியிருந்தாலும் பூஜையறை வாஸ்து திசை பார்த்து அமைக்கப்படும். அப்படியில்லையென்றால் திசையை கணக்கிட்டு நாம் பூஜை வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் ஆன்மிக வழிபாட்டில் நாம் பல விஷயங்களை கவனிக்க வேண்டும்
பூஜையறையில் கவனிக்க வேண்டியவை: ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இறைவன் அருள் முழுவதுமாக நிறைந்திருக்க வேண்டும் என விருப்பப்படுகிறோம். பொதுவாக பூஜையறை சரியான இடத்தில் அமையாவிட்டாலோ அல்லது பூஜையறையில் நாம் சில தவறுகள் செய்தாலோ வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவிவிடும் என நம்பப்படுகிறது. பொதுவாக வீடு எப்படி கட்டியிருந்தாலும் பூஜையறை வாஸ்து திசை பார்த்து அமைக்கப்படும். அப்படியில்லையென்றால் திசையை கணக்கிட்டு நாம் பூஜை வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் ஆன்மிக வழிபாட்டில் நாம் பல விஷயங்களை கவனிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
Also Read: Born Month Personality: நீங்கள் இப்படிப்பட்டவரா? – பிறந்த மாதம் சொல்லும் பலன்கள்!
வீட்டின் பூஜையறையில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
பூஜையறை எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறையாவது விளக்குகள், புகைப்படங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். பொதுவாக பூஜை செய்யும் இடங்கள் காற்றோட்டமாக இருக்க வேண்டும். இதனால் வடகிழக்கில் பூஜையறை வைத்து அதன் அருகில் ஜன்னல்கள் இருக்கும்படி முன்னோர்கள் கட்டினார்கள். எனவே பூஜையறையோ அது இருக்கும் அறையையோ எப்போதும் பூட்டி வைக்கக்கூடாது.
மேலும் பூஜை அறையில் எக்காரணம் கொண்டும் தேவையில்லாத பொருட்களை அடைத்து வைக்கக்கூடாது. இதனால் இறையாற்றல் மற்றும் நேர்மறையான ஆற்றல் எல்லாம் குறைந்துவிட வாய்ப்புள்ளது. அதேபோல் உடைந்த பொருட்களையும் அங்கு வைக்கக்கூடாது. எல்லா விதமான சாமிகளும் வீட்டில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வேண்டும் என நினைக்கும் புகைப்படங்களை வைக்கலாம். குறிப்பாக குலதெய்வம், விநாயகர், லட்சுமி, முருகன் என சில கடவுள் புகைப்படங்கள் வைத்தும் வணங்கலாம்.
பூஜையறையில் பொதுவாக இறந்தவர்களின் புகைப்படங்கள் வைக்கக்கூடாது. தனியாக வேறு இடங்களில் வைக்க வேண்டும். அப்படி பூஜையறையில் வைப்பதாக இருந்தால் கடவுளின் புகைப்படத்துக்கு கீழே வைக்கலாம். அதைவிட ஹாலில் வைப்பது நல்லது.
Also Read: கடவுளுக்கு பிரசாதம் தயாரிக்கும்போது இந்த தவறை செய்யாதீங்க!
ஆன்மிக ரீதியாக கவனிக்க வேண்டியவை
பூஜையறையில் மட்டுமல்ல வீட்டிலும் நாம் ஆன்மீக ரீதியாக கடைபிடிக்க வேண்டிய பல விதிகள் உள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம். அதாவது குளிக்காமல் பூஜை அறைக்குள் செல்லக்கூடாது. நீராடிவிட்டு தான் அந்த அறைக்குள் செல்ல வேண்டும். வீட்டில் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் நெற்றியில் திலகமிட்டு தான் வழிபாடு நடத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் தலைவாரி, நெற்றியில் திலகமிட்டு தான் வழிபாடு செய்ய வேண்டும். பெண்கள் பூஜை செய்யும்போது பூசணிக்காய் உடைக்கக்கூடாது. இருகைகளால் தலையை சொரிந்துக்கொண்டே இருக்கக்கூடாது. விளக்கேற்றியப் பின் தலைவாரக்கூடாது. முடிகள் வீட்டில் சிதறவிடக்கூடாது. தலைவாரி முடிந்ததும் அதனை உடனடியாக வெளியே போட வேண்டும். கர்ப்பிணி பெண்களாக இருந்தால் தேங்காய் உடைக்கக்கூடாது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)