Vastu Tips: சமையலறையில் இந்த பொருட்களை கொட்டினால் குடும்பத்திற்கு ஆபத்து!

Astrology: ஜோதிட பலன்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மையப்படுத்தி கணிக்கப்படுவதோடு, நாம் இருக்கும் இடங்களை மையப்படுத்தியதாக வாஸ்து பலன்கள் உள்ளது. ஒவ்வொரு இடத்துக்கும் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பது உண்டு. அதனை மாற்றி செய்யும்போது வாஸ்து தோஷம் ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகும்.

Vastu Tips: சமையலறையில் இந்த பொருட்களை கொட்டினால் குடும்பத்திற்கு ஆபத்து!

கோப்பு புகைப்படம்

Published: 

01 Aug 2024 11:00 AM

வாஸ்து பலன்கள்: ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வாஸ்து சாஸ்திரத்தையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். எப்படி ஜோதிட பலன்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மையப்படுத்தி கணிக்கப்படுவதோடு, நாம் இருக்கும் இடங்களை மையப்படுத்தியதாக வாஸ்து பலன்கள் உள்ளது. ஒவ்வொரு இடத்துக்கும் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பது உண்டு. அதனை மாற்றி செய்யும்போது வாஸ்து தோஷம் ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகும். அந்த வகையில் வீட்டில் உள்ள சமையலறை என்பது உணவு தயாரிக்கும் இடம் மட்டுமாக பார்க்கக்கூடாது. அது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் நாம் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி காணலாம்.

பால் கொட்டக்கூடாது

பல சமயங்களில் பாலை கொதிக்க விட்டு விட்டு நம் கவனம் வேறு எங்கேயாவது இருக்கும். இதனால் பால் பொங்கி கீழே சிந்தி விடும் . ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில், இந்த நிகழ்வு மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் பால் சந்திரனுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. எனவே, உங்கள் சமையலறையில் பால் மீண்டும் மீண்டும் பொங்கி கீழே வழிந்தாலோ, கொட்டினாலோ அது ஜாதகத்தில் சந்திர கிரகத்தின் பலவீனத்தைக் குறிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பால் கொட்டுவது குடும்பத்தில் பிரச்னை மற்றும் நிதி சிக்கல்களின் அறிகுறியாகும்.அதுமட்டுமல்லாமல் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குடும்பத் தகராறுகளுக்கு வழிவகுக்கும்.

Also Read: Vastu Tips : வீட்டில் மணி பிளான்ட் வளர்க்குறீங்களா? எந்த திசையில் எப்படி வளர்க்கணும் தெரியுமா? வாஸ்து டிப்ஸ் இதுதான்!

உப்பால் உண்டாகும் பிரச்னை

உப்பு கீழே கொட்டுவது வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. ஜோதிடத்தில் சந்திரன் மற்றும் வெள்ளி கிரகத்தின் பிரதிநிதித்துவமாக உப்பு கருதப்படுகிறது, எனவே உப்பை கீழே கொட்டுவது நிதி நெருக்கடி, குடும்ப அழுத்தம் மற்றும் மன அமைதியின்மை ஆகியவற்றின் அறிகுறியாகும். இது வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பாதித்து சண்டை சச்சரவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, உப்பை எப்போதும் பாதுகாப்பான இடத்தில் வைத்து, சமையலறையில் முறையாகப் பயன்படுத்துங்கள்.

Also Read: Vastu Tips: வீட்டுல இந்த செடிகளை மட்டும் வச்சிராதீங்க.. அப்புறம் அவ்வளவுதான்!

எண்ணெயை கொட்டாதீர்கள்

சமையலறையில் எண்ணெய் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். இது சனி பகவானுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. குறிப்பாக கடுகு எண்ணெயை அடிக்கடி கீழே சிந்துவது சனி தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கடுகு எண்ணெயைக் கொட்டுவதால் பொருளாதாரப் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள் மற்றும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். எனவே, கடுகு எண்ணெயை கவனமாகப் பயன்படுத்துங்கள் மற்றும் கொட்டுவதை தவிர்க்கவும். இது வீட்டில் நேர்மறை ஆற்றலையும் செழிப்பையும் வைத்திருக்கும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?