Vastu Tips: அதிகாலையில் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்க என்ன செய்யலாம்?

Astrology: கடவுளை வழிபாடு செய்ய காலை நேரம் சிறந்ததாக கருதப்படுகிறது. எழுந்தவுடன், எப்போதும் காலையில் சிறிது நேரம் கடவுள் பக்திக்காக ஒதுக்குங்கள். பிரார்த்தனையின் போது உங்கள் வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அதேசமயம் பசுக்கள் இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பலர் இதை கடவுளாக கருதி வழிபடுகின்றனர்.

Vastu Tips: அதிகாலையில் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்க என்ன செய்யலாம்?

கோப்பு புகைப்படம்

Published: 

04 Aug 2024 11:36 AM

லட்சுமி கடாட்சம்: ஒவ்வொருவரும் அவர்களது வீடுகளில் அஷ்ட லட்சுமிகளின் வாசம் இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதற்காக பல்வேறு வழிபாடுகள் செய்தும் சில நேரங்களில் பலன்கள் கிட்டாமல் இருக்கும். வீட்டில் லட்சுமி தேவியின் கடாட்சம் இருந்தால் செல்வ வளம் பெருகும். அதோடு மட்டுமல்லாது பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று வளமோடு வாழலாம் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நாம் செய்யும் சில விஷயங்களாலும் லட்சுமியின் அருளை முழுதாக பெறலாம் என வாஸ்து சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. அதற்கான அத்தனை முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். அதனைப் பற்றி நாம் காணலாம்.

பிரம்ம முஹர்தத்தில் எழுந்தருளுவது நல்லது என்பது வாஸ்து சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சூரியன் உதிக்கும் நேரத்தில் எழுந்திருப்பது உங்கள் நிதி நிலையை மேம்படுத்த உதவும். மேலும் வாழ்க்கையில் வெற்றியை அடையவும், உச்சத்தை அடையவும் தேவையான மன வலிமையை பிரம்ம முஹர்தத்தில் எழுவதால் கிடைக்கும் பலன் தருகிறது. அதிகாலையில் எழுந்து சில முக்கியமான வேலைகளைச் செய்யுங்கள். லட்சுமி தேவியின் அருள் இந்த வேலைகளின் அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் உள்ளது.

தினமும் காலையில் குளித்த பின் வீட்டின் பூஜை அறையில் பசு நெய்யில் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவனின் அருள் முழுவதுமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இரவில் செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் துளசி இலைகளைப் போடவும். பிறகு அந்த துளசி நீரை காலையில் வீடு முழுவதும் தெளிக்கவும். இப்படி தினமும் செய்து வந்தால் தனலட்சுமியின் அருள் எப்போதும் பெருகும்.

தினமும் காலையில் நீராடி விட்டு, சூரியபகவானை வழிபாடு செய்தால், நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி குங்குமப்பூ மற்றும் செம்பருத்திப் பூக்களை சேர்த்து சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்யவும். இதைச் செய்வது ஆரோக்கியமானது மட்டுமல்ல, எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் கடவுளை வழிபாடு செய்ய காலை நேரம் சிறந்ததாக கருதப்படுகிறது. எழுந்தவுடன், எப்போதும் காலையில் சிறிது நேரம் கடவுள் பக்திக்காக ஒதுக்குங்கள். பிரார்த்தனையின் போது உங்கள் வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அதேசமயம் பசுக்கள் இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பலர் இதை கடவுளாக கருதி வழிபடுகின்றனர். பசுவின் உடலில் அனைத்து கடவுள்களும் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே தினமும் காலையில் குளித்த பின் பசுவை வணங்குங்கள். அவர்கள் மீது லட்சுமி தேவி அருள் பார்வை விரைவில் விழுந்து மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?