5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vastu Tips : மகிழ்ச்சி நிலைக்க வாஸ்து டிப்ஸ்.. வீடுகளில் கவனிக்க வேண்டிய முறைகள்!

Home Vastu tips in tamil : வாஸ்து வீட்டில் வசிப்பவர்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். வீட்டில் இருக்கும் சில வாஸ்து தோஷங்களால் மன அமைதி கிடைக்காது என்பது ஐதீகம். மன ஆரோக்கியத்தை கெடுக்கும் வாஸ்து குறைபாடுகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

Vastu Tips : மகிழ்ச்சி நிலைக்க வாஸ்து டிப்ஸ்.. வீடுகளில் கவனிக்க வேண்டிய முறைகள்!
வாஸ்து
c-murugadoss
CMDoss | Updated On: 13 Jun 2024 13:01 PM

வாஸ்து முறைகள் : ஆன்மிக நம்பிக்கை உடையவர்கள் கண்டிப்பாக வாஸ்துவையும் பின்பற்றுவார்கள். ஆன்மீக நம்பிக்கையும் வாஸ்துவையும் தனித்தனியாக பார்க்க முடியாது. வாஸ்து பலரால் கண்டிப்பாக பின்பற்றப்படுகிறது. நிலம் வாங்குவது முதல் வீடு கட்டுவது வரை அனைத்தும் வாஸ்து படி கண்டிப்பாக இருக்க வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் வாஸ்து பண்டிதர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். வாஸ்து வீட்டில் வசிப்பவர்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். வீட்டில் இருக்கும் சில வாஸ்து தோஷங்களால் மன அமைதி கிடைக்காது என்பது ஐதீகம். மன ஆரோக்கியத்தை கெடுக்கும் வாஸ்து குறைபாடுகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

  1. வீட்டின் கிழக்கு திசை மிகவும் முக்கியமானது. பிரதான நுழைவாயிலாகப் பயன்படுத்தப்படும் கிழக்கு திசையில் குப்பைகள் கொட்டாமல் இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
  2. எந்த சூழ்நிலையிலும் வீட்டின் கிழக்கு திசையில் கனமான பொருட்களை வைக்கக் கூடாது என்கிறது வாஸ்து
  3. மேலும் வீட்டை விட உயரமான மரத்தை கிழக்கு திசையில் வளர்க்கக் கூடாது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் சட்ட சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.
  4. வீட்டின் வடகிழக்கு திசை காலியாக இருக்க வேண்டும், இந்த திசையில் பொருட்களை வைக்க கூடாது. மேலும், வீட்டின் மொத்த பரப்பளவை விட வடகிழக்கு திசையில் அதிக இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  5. மற்ற திசைகளுடன் ஒப்பிடும்போது வீட்டின் தென்கிழக்கு திசை உயரமாக இருக்கக்கூடாது. இப்படி இருந்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் தவிர்க்க முடியாதவை என்கிறது வாஸ்து
  6. எந்த விஷயத்திலும் வீட்டில் சமையலறை தென்மேற்கு திசையில் இருக்கக்கூடாது. சமையலறை தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும் என்பது சரியானது.
  7. மேலும், வீட்டின் பிரதான கதவு தென்மேற்கு திசையில் இருப்பதால், வீட்டில் வசிப்பவர்களுக்கு மனநலக் கோளாறுகள் தவிர்க்க முடியாதவை என்று கூறப்படுகிறது.
  8. எல்லாவற்றிற்கும் மேலாக, வீட்டிற்குள் காற்று மற்றும் வெளிச்சம் அதிகமாக இருக்கும் வகையில் காற்றோட்டம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று வாஸ்து சொல்கிறது இதனால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

(இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News