Vastu Tips: இந்த நேரத்தில் பணம் செலவழித்தால் அரசனும் ஆண்டி தான்..!
பொருளாதார விஷயங்கள் என்பது அனைவரது வாழ்க்கையில் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. தொழிலதிபர்கள் தொடங்கி கடைசி குடிமகன் வரை அனைவரும் பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பதை பார்க்கிறோம். அதிலும் செலவு என்று வரும்போது கவனமாகச் செலவு செய்வார்கள். ஆனால் சிலர் பணத்தை தங்கள் இஷ்டம் போல் செலவு செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பணத்திற்கு மதிப்பு இல்லை என நினைப்பார்கள்.
வாஸ்து டிப்ஸ்: நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் வாஸ்து சாஸ்திரங்கள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பது இருக்கும். அந்த வகையில் பொருளாதார விஷயங்கள் என்பது அனைவரது வாழ்க்கையில் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. தொழிலதிபர்கள் தொடங்கி கடைசி குடிமகன் வரை அனைவரும் பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பதை பார்க்கிறோம். அதிலும் செலவு என்று வரும்போது கவனமாகச் செலவு செய்வார்கள். ஆனால் சிலர் பணத்தை தங்கள் இஷ்டம் போல் செலவு செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பணத்திற்கு மதிப்பு இல்லை என நினைப்பார்கள்.
இதன் காரணமாக, ஒரு கட்டத்தில் இவர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் சூழல் ஏற்படுகிறது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றினால் பொருளாதார ரீதியாக பலம் பெறலாம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்றால் வீடு கட்டுவதில் மட்டுமல்ல.. நாம் அன்றாடம் செய்யும் சில முக்கிய பணிகளிலும் சில விதிகளை கடைபிடித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிவிப்பதாகும்.
அந்த வகையில் பணத்தை செலவு செய்வதில் என்ன விதிகளை கடைபிடிக்க வேண்டும். பணத்தை எப்போது செலவிட வேண்டும்? எப்போது செலவு செய்யக்கூடாது? என்பதை இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படி இல்லையென்றால் உங்களுக்கு என்ன செய்தாலும் லாபம் இருக்காது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அதனைப் பற்றி இந்த தொகுப்பைக் காணலாம்.
எப்போது பணம் செலவிடக்கூடாது
பெரும்பாலான மக்கள் தங்களால் முடிந்தவரை சுயமாக சம்பாதித்தும்,கடன் வாங்கியும் பணத்தை செலவிடுகிறார்கள். அது எப்படி, எப்போது நடந்தாலும் பணம் செலவழிக்க ஒரு நேரம் காலம் உண்டு என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தின் போது பலரும் அறியாமல் பணம் செலவழிக்கிறார்கள். அதைச் செய்யவே கூடாது. பிரம்ம முகூர்த்தம் என்றால் சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முந்தைய காலக்கட்டமாகும். மேலும் சூரிய உதயத்தின் போது பணத்தை வீணாக்க செலவழிக்கக்கூடாது. அவசிய தேவைக்கு மட்டும் யோசித்து செலவு செய்ய வேண்டும் என கூறுகிறது.
அதேபோல் சூரிய அஸ்தமனத்தில் அதிக பணம் செலவழிக்கக் கூடாது என்கிறது. ஏனெனில் இந்த நேரத்தில் செலவு அதிகமாக பண்ணுவதால் உங்களிடம் இருக்கும் செல்வ வளம் குறைகிறது. இதன் காரணமாக, நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த மூன்று நேரங்களிலும் பணத்தைச் செலவு செய்யும் போது யோசிக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.