Vastu Tips: வீட்டு வாசலை நோக்கி கால் வைத்து தூங்குவது நல்லதா?

Sleeping Astrology: நம் அனைவருக்கும் தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படியிருக்கும் நிலையில், சிலருக்கு தூக்கம் வருவதே குதிரை கொம்பாக இருக்கும். அவர்கள் வாஸ்து முறையை பின்பற்றாமல் இருப்பதால் அப்படி நடக்கும் என கூறப்படுகிறது. மேலும் நாம் எந்த திசையில் தூங்குகிறோமோ அதற்கு ஏற்றாற்போல தான் வாழ்க்கையும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Vastu Tips: வீட்டு வாசலை நோக்கி கால் வைத்து தூங்குவது நல்லதா?

கோப்பு புகைப்படம்

Published: 

12 Aug 2024 11:09 AM

வாஸ்து டிப்ஸ்: நம்முடைய வாழ்க்கையில் வாஸ்து சாஸ்திரம் என்பது அனைத்து நிகழ்வுகளுக்கும் மிக முக்கிய காரணமாக அமைகிறது. நாம் என்ன செய்ய வேண்டும், என்ன திசையில் என்ன இருக்க வேண்டும், எந்த திசையில் இருந்துக்கொண்டு என்ன செயலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இதில் கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் நம் அனைவருக்கும் தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படியிருக்கும் நிலையில், சிலருக்கு தூக்கம் வருவதே குதிரை கொம்பாக இருக்கும். அவர்கள் வாஸ்து முறையை பின்பற்றாமல் இருப்பதால் அப்படி நடக்கும் என கூறப்படுகிறது. மேலும் நாம் எந்த திசையில் தூங்குகிறோமோ அதற்கு ஏற்றாற்போல தான் வாழ்க்கையும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் நிலையில் நாம் வாசலை நோக்கி கால் வைத்து படுக்கலாமா என்பதற்கு வாஸ்துவில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை காணலாம்.

Also Read: Astrology: வேலை தேடும் 6 ராசியினருக்கு கிடைக்கப்போகும் பொன்னான வாய்ப்பு!

நல்ல செயலல்ல

வீடு எப்படியாக இருந்தாலும் நாம் கதவை நோக்கி கால்களை வைத்து தூங்குவது வாஸ்துபடி அசுபமாக கருதப்படுகிறது. ஏனெனில் இப்படி தூங்குவது எதிர்மறை சக்தியை வீட்டிற்குள் கொண்டுவந்து, ஒரு நபரின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. மத நம்பிக்கைகளின்படி, கடவுள் மற்றும் முன்னோர்களின் சக்தி கதவு வழியாக வீட்டிற்குள் நுழைகிறது. எனவே, கதவை நோக்கி கால்களை வைத்து தூங்குவது நேர்மறை ஆற்றலை சீர்குலைத்து, ஒரு நபரின் செழிப்பு மற்றும் ஆரோக்கியத்தை மோசமாக பாதிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதேபோல்வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாசலை நோக்கி கால்களை வைத்து தூங்குவது அசுபமாக கருதப்படுகிறது. உறங்கும் போது கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது. இது நம் வாழ்வில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. மேலும் ஒரு நபரின் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கிறது. ஆனால் வாசலை நோக்கி கால்களை வைத்து தூங்குவது எதிர்மறை சக்தியை பரப்புகிறது, இது ஒரு நபரின் வாழ்க்கையில் பல தடைகளை உருவாக்குகிறது.

Also Read: Bangladesh Protest : அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்.. ஷேக் ஹசீனா விளக்கம்!

வேறு என்னவெல்லாம் செய்யக்கூடாது?

பொதுவாக நாம் தூங்கும்போது கதவுகள், ஜன்னல்கள் இருக்கும் திசையில் கால்வைத்து தூங்கக்கூடாது. மேலும் குளியலறை, கழிவறை, பூஜையறை, சமையலறை இருக்கும் திசையையும் நோக்கி கால் நீட்டி படுக்க வேண்டாம். மேலும் தூங்கும்போது கைகளை கட்டிக்கொண்டும், முகத்தை போர்வையால் முழுவதும் மூடிக்கொண்டும் தூங்குவது அபசகுனமாக கருதப்படுகிறது. அதேபோல் பூஜையறையில் தலைக்கு மேல் விளக்கு இருக்கும்படி படுக்கக்கூடாது. இவையெல்லாம் இறந்தவர்களை வைக்கும் முறையாகும். பொதுவாக நாம் தூங்கும் அறையில் தெற்கு, மேற்காக தூங்கக்கூடாது. மேற்கு, கிழக்கு, வடமேற்கு,தென்கிழக்கு ஆகிய திசைகளில் படுக்கையைப் போட்டு தூங்கலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?