Vastu Tips: வாழ்க்கை முன்னேறாமல் இருக்கீங்களா? – இதை கொஞ்சம் படிங்க! - Tamil News | Vastu Tips, Motivation Goals, | TV9 Tamil

Vastu Tips: வாழ்க்கை முன்னேறாமல் இருக்கீங்களா? – இதை கொஞ்சம் படிங்க!

Motivation Goals: நாம் செய்யும் நன்மை, தீமை போன்றவையும் வாழ்க்கையில் விதியை தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அதேசமயம் தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட நம்முடைய முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய நிகழ்வாக மாறிவிடும். அப்படியாக ஜோதிட அல்லது வாஸ்து சாஸ்திரத்தில் நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

Vastu Tips: வாழ்க்கை முன்னேறாமல் இருக்கீங்களா? - இதை கொஞ்சம் படிங்க!

கோப்பு புகைப்படம்

Updated On: 

26 Jul 2024 12:52 PM

 வாஸ்து டிப்ஸ்: நம் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடாவிட்டாலும், ஓரளவு மகிழ்ச்சியாவது நிலையானதாக இருக்க வேண்டும் என்று நம்மில் பலரும் நினைப்போம். நாம் ஜாதக பலன்கள், கிரகங்களின் பெயர்ச்சி உள்ளிட்டவை வாழ்க்கையில் நம்முடைய நிலைக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது. அதேபோல் நாம் செய்யும் நன்மை, தீமை போன்றவையும் வாழ்க்கையில் விதியை தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அதேசமயம் தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட நம்முடைய முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய நிகழ்வாக மாறிவிடும். அப்படியாக ஜோதிட அல்லது வாஸ்து சாஸ்திரத்தில் நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

  1. பொதுவாக ஒரு வீட்டில் குளியலறை எப்போதும் அழுக்காக இருந்தால் இந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் ராகு-கேதுவின் பாதிப்புகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு அழுக்கு குளியலறை என்பது ஒரு நபர் தனது வாழ்க்கையில் திடீர் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  2. இரவில் வெகுநேரம் தூங்கி, காலையில் தாமதமாக எழும் பழக்கம் பலருக்கு உண்டு. இந்த பழக்கம் உள்ளவர்கள் உடனடியாக அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதை செய்பவர்கள் சந்திர கிரகம் தொடர்பான தோஷத்தை சந்திக்க வேண்டி வரும். அடிக்கடி மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உடலிலும் மனதிலும் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க, இரவில் சரியான நேரத்தில் தூங்கவும், காலையில் சரியான நேரத்திற்கு எழுந்திருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.
  3. சிலருக்கு வீட்டிலோ, வெளியிலோ எச்சில் துப்புவது போன்ற பழக்கம் இருந்தால், இந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்தப் பழக்கத்தால் சமூகத்தில் நற்பெயருக்கும் மரியாதைக்கும் ஆபத்து ஏற்படும். ஜோதிடத்தின் படி, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எச்சில் துப்புவது ஒரு நபரின் ஜாதகத்தில் உள்ள புதன் கிரகத்தை பாதிக்கும். புத தோஷத்தால் ஒருவரின் நற்பெயர் பாதிக்கப்படும்.
  4.  இரவு உணவுக்குப் பிறகு பாத்திரங்களை ஒருபோதும் சின்ங்கில் விடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதைச் செய்வது நிதி நிலையை பாதிக்கும் பெரிய தவறு என்று கருதப்படுகிறது. செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவியின் பார்வை இரவில் காலி பாத்திரங்களை சிங்க்கில் வைப்பவர்களுக்கு கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
  5. வாஸ்து சாஸ்திரத்தின் படி, சாப்பிட்ட பிறகு பாத்திரங்களை சாப்பாட்டுப் பகுதியில் விட்டுச் செல்பவர்கள் சந்திரன் மற்றும் சனி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சாப்பிட்டவுடன் தட்டை கழுவாமல் இருந்தால் வாழ்க்கையில் எல்லாவிதமான மன மற்றும் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
  6. வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் செடிகள் காய்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் செடிகளுக்கு உரம் மற்றும் தண்ணீர் இட வேண்டும். ஆனால் வீட்டில் உலர்ந்த செடிகள் இருந்தால், புதன் அதை எதிர்கொள்ளும். ஒரு உலர்ந்த செடி வீட்டில் எதிர்மறை சக்தியை உருவாக்குகிறது, உடனடியாக அதை வீட்டிலிருந்து அகற்றி, அதன் இடத்தில் ஒரு பசுமையான செடியை நடவும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!