Vastu Tips: வீட்டு பிரச்னைகள் சரியாக தயவுசெய்து இந்த தப்பை பண்ணாதீங்க..!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, மனிதர்களிடம் இருக்கும் சில கெட்ட வழக்கங்களும் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. எவன் ஒருவன் தன் வாழ்வில் உள்ள அனைத்து விதிகளையும் புறக்கணித்து விட்டு, நவீனத்துவம் என்ற பெயரில் வாழ்க்கிறானோ நிச்சயம் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் எதிர்கொள்வான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஸ்து டிப்ஸ்: நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நேரமும் என்ன நடக்க வேண்டும் என்பதை ஜோதிட கணிப்புகளும், வாஸ்து சாஸ்திரங்களும் நிர்ணயிப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியாக பார்த்தால் ஜோதிட சாஸ்திரத்தின்படி, மனிதர்களிடம் இருக்கும் சில கெட்ட வழக்கங்களும் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. எவன் ஒருவன் தன் வாழ்வில் உள்ள அனைத்து விதிகளையும் புறக்கணித்து விட்டு, நவீனத்துவம் என்ற பெயரில் வாழ்க்கிறானோ நிச்சயம் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் எதிர்கொள்வான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையை எத்தனை முறை முயன்றாலும் தடுக்க முடியாது. அதற்கு காரணமான பழக்க வழக்கங்களை முதலில் நிறுத்த வேண்டும். அதனைப் பற்றி நாம் காணலாம்.
Also Read:Did You Know: ஆளுமையை சொல்லும் வார்த்தை விளையாட்டு.. இதை கொஞ்சம் படிங்க!
தூங்கும் பழக்கம்
இப்போதெல்லாம் பலர் இரவில் வெகுநேரம் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் காலையில் தாமதமாக எழும் பழக்கம் இருக்கிறது. அப்படியானவர்களாக நீங்கள் இருந்தால் அதனை உடனே அதை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இப்படி இருப்பவர்கள் சந்திர கிரகத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் அடிக்கடி மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். எனவே இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்க இரவில் சரியான நேரத்தில் தூங்க வேண்டும். அதேபோல் காலையில் சரியான நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும்.
வீட்டில் செடிகள் உலர விடாதீர்கள்
ஜோதிட சாஸ்திரப்படி வீட்டில் வைக்கப்படும் செடிகள் காய்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் செடிகளுக்கு உரம் மற்றும் தண்ணீர் கண்டிப்பாக இருக்குமாறு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டால் புதனின் தோஷத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு உலர்ந்த செடி வீட்டில் எதிர்மறை சக்தியை உருவாக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில் உடனடியாக அந்த செடியை வீட்டிலிருந்து அகற்றுவதோடு அதன் இடத்தில் புதிய செடியை நட வேண்டும்.
குளியலறை சுத்தம்
வீட்டில் இருக்கும் குளியலறை எப்பொழுதும் அழுக்காக இருந்தால் அதனை சுத்தம் செய்ய வேண்டும். குளியலறை சுத்தமாக இல்லாவிட்டால் ராகு-கேதுவின் பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, குடும்ப உறுப்பினர்கள் அசுத்தமான குளியலறையால் திடீர் பிரச்சனைகள் மற்றும் நோய்களை சந்திக்க நேரிடும்.
Also Read: Instagram: இன்ஸ்டாகிராமில் சூப்பர் அப்டேட்.. இனி இன்னும் களைகட்டப்போகுது!
கழுவாத காலி பாத்திரங்கள்
பலரும் இரவு உணவுக்குப் பிறகு காலி பாத்திரங்களை சிங்கில் போட்டுவிட்டு காலையில் பார்த்துக் கொள்ளலாம் என சென்று விடுகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி இது நிதி நிலைமையை பாதிக்கும் என கருதப்படுகிறது. எனவே இரவில் பாத்திரங்களை பாத்திரத்தை கழுவாமல் காயப் போடுகிறவர்கள் வாழ்க்கையில் எப்போதும் பணத் தட்டுப்பாடு இருக்கும் என சொல்லப்படுகிறது.
சாப்பிட்ட தட்டால் பிரச்னை
சிலர் உணவு உண்டபின் அதே இடத்தில் சாப்பிட்ட பாத்திரங்களை வைத்து விட்டு வேறு வேலையை பார்க்க சென்று விடுவார்கள். அப்படி செய்பவர்கள் சந்திரன் மற்றும் சனி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜோதிட சாஸ்திரப்படி சாப்பிட்ட பின் தட்டை அதில் கைகளை கழுவி இருந்தால் வாழ்க்கையில் பல்வேறு மன மற்றும் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
காலணிகள்
சிலர் வீட்டில் எங்கு பார்த்தாலும் செருப்புகளை கழற்றும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த கெட்ட பழக்கத்தால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் காலணிகள் இந்த கெட்ட பழக்கம் காரணமாக ஒருவர் சனி தொடர்பான தோஷங்களை சந்திக்க நேரிடும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)