5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ganesh Chaturthi: விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பது ஏன் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் அந்த நேரத்தில் என்னென்ன ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அதற்கு ஏற்ப விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஜெயிலர் விநாயகர், ஜிகர்தண்டா விநாயகர் என விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விநாயகர் சிலைகளை நாம் வீடுகளிலும் வைத்து வழிபடலாம். அதற்கான வழிபாடு முறைகளை சரியாக பின்பற்றி நீர்நிலைகளில் கரைக்கலாம்.

Ganesh Chaturthi: விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பது ஏன் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 07 Sep 2024 12:03 PM

விநாயகர் சதுர்த்தி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனைமுகன், முழு முதற்கடவுள் விநாயகர் அவதரித்த தினமாக ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் கருதப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஒவ்வொரு வீதிக்கும் இருக்கும் விநாயகர் சிலைகளும், அவரது வழிபாட்டின் போது படைக்கப்படும் கொழுக்கட்டை, பொரி போன்ற நைவேத்தியங்களும் தான். சிறியது முதல் பெரியது வரை விநாயகர் சிலைகள் வாங்கப்பட்டு ஒவ்வொரு வீதியிலும் இந்த நாள் பிரதிஷ்டை செய்யப்படும். இதிலிருந்து 3ஆம் நாள், 5 ஆம்நாள், 7 ஆம் நாள் ஆகிய ஒற்றைப்படை தினங்களில் அருகில் உள்ள ஆறுகள். குளங்கள், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம்.

Also Read: Hokato Hotozhe Sema: கண்ணிவெடியில் கால் போச்சு.. பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்திய ஹகோடா செமா!

ஒவ்வொரு ஆண்டும் அந்த நேரத்தில் என்னென்ன ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அதற்கு ஏற்ப விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஜெயிலர் விநாயகர், ஜிகர்தண்டா விநாயகர் என விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விநாயகர் சிலைகளை நாம் வீடுகளிலும் வைத்து வழிபடலாம். அதற்கான வழிபாடு முறைகளை சரியாக பின்பற்றி நீர்நிலைகளில் கரைக்கலாம். நம்மில் பலருக்கும் ஏன் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதற்கு பின்னால் அறிவியல் ரீதியாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

Also Read: Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி.. பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி?

அதாவது பொதுவாக  ஆவணி மாதத்தில் தான் விநாயகர் சதுர்த்தி வரும். அதற்கு முந்தைய மாதமான ஆடியில் ஆடிப்பெருக்கின் போது வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை எல்லாம் கரைத்துக் கொண்டு போய்விடும். அதனால் அங்கே நீர் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் எந்த இடத்தில் களிமண் வளம் அதிகமாக உள்ளதோ அதில் உள்ள நீர் பூமிக்கடியில் இறங்கும். அப்படியான தத்துவத்தின் அடிப்படையில் தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை ஆற்றில் கரைக்க செய்கிறார்கள். ஈரமாக இருக்கும் களிமண் நீரின் வேகத்தோடு கரைந்து சென்று விடும் ஆனால் நன்கு காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் நீரானது பூமியின் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இதற்காகத்தான் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பழக்கம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News