5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vinayagar Chaturthi: ஒரே இடத்தில் 67 விநாயகரை காண வேண்டுமா?.. இந்த கோயில் போங்க!

Uchchhishta Ganapathy Temple: வித்யாசூரன் அங்கு கோபத்தோடு வந்து நிற்க விநாயக பெருமான் தன் மனைவி நீல சரஸ்வதி தேவி இடது பக்கத்தில் தாங்கி காட்சி கொடுத்தார். அப்போது ஒரு கோடி சூரியன் இணைந்து ஒன்றாக காட்சி கொடுத்தால் எலும் ஒளிப்போல் பிரம்மாண்டமான விநாயகர் காட்சியளிக்க அந்த ஒளிக்கதிர்வீச்சு தாங்காமல் வித்தியாசூரன் மாண்டு போனான்.

Vinayagar Chaturthi: ஒரே இடத்தில் 67 விநாயகரை காண வேண்டுமா?.. இந்த கோயில் போங்க!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 01 Sep 2024 12:16 PM

நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. எந்த கோயில் எடுத்தாலும் அதில் விநாயகருக்கு என்று தனி சன்னதி இருப்பதை காணலாம். அதேபோல் விநாயகருக்கு என தனி கோயில்கள் இருப்பதையும் பார்த்திருப்போம். விதவிதமான பெயர்களில், உருவங்களில் இருக்கும் விநாயகர் என்றைக்கும் முழுமுதற்கடவுளாக கொண்டாடப்படுகிறார். அப்படிப்பட்ட ஒரு விநாயகர் கோவிலில் 67 விநாயகர்களை தரிசிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?. இந்த விநாயகரை வணங்கி வழிபட்டால் திருமண தடை நீங்கும், மகப்பேறு பாக்கியம் உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்குவதோடு கடன் பிரச்சினை விலகும். மேலும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். நினைத்த காரியம் நடைபெறும் என்பதை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

 

இந்த கோயில் எங்கே உள்ளது?

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் என்ற ஊரில் தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவர் உச்சிஷ்ட விநாயகர் என அழைக்கப்படுகிறார். அவரை சுற்றி 16 விநாயகரும், கன்னிமூல கணபதி ஒன்றும், கோபுரத்தின் கீழே ஒன்றும், ஐந்து நிலை ராஜகோபுரத்தின் முன் பின் பக்கங்களில் 32 விநாயகரும், பெரிய வாசலின் இரண்டு மரக்கதவுகளில் 16 விநாயகர் ஆக மொத்தம் 67 விநாயகர் சிலைகள் இந்த கோயிலில் உள்ளது . இந்த கோவில் திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் தாமிரபரணி ஆற்றுப்பாலம் முடிவில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் காலை ஏழு மணி முதல் தகவல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமிதாசனம் செய்யலாம்.

கோயில் வரலாறு

தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் ஒரு காலத்தில் பல முனிவர்கள் தியாகங்கள் செய்து இறைவனை வழிபட்டு வந்தனர். அப்போதே வித்தியாசூரன் என்ற அசுரன் முனிவர்களின் யாகத்தை அழித்து அங்கிருந்து விரட்டி அடித்தான். அந்த வித்யாசூரன் பல ஆண்டுகளாக பிரம்மாவை நினைத்து தவமிருந்து ஒரு வரம் ஒன்றை வாங்கினான். அதாவது தன்னுடன் போர் செய்ய வருபவர்கள் மனிதனாகவும், மிருகமாகவும், அகோரமானவனாகவும், இருக்கக் கூடாது. என்னுடைய போர் தேவ, அசுர சபைகளின் முன்புதான் நடக்க வேண்டும். அந்த சமயம் போர் செய்பவர் தன் துணைவியாருடன் இணைந்த கோலத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் என்னை கொல்ல முடியும் என வரம் வாங்கினான்.

இப்படியான நிலையில்தான் வித்தியாசூரன் துன்பத்தை முனிவர்கள் தாமிரபரணி ஆற்றில் 21 நாட்கள் தினசரி 21 முறை மூழ்கி எழுந்து தாமிரபரணி தாயை வணங்கி முறையிட்டனர். இதனை விநாயகப் பெருமானிடம் சொல்லுமாறு தாமிரபரணி தாய் அறிவுறுத்தினாள். விநாயகப் பெருமான் நீங்கள் பதங்கமாமுனிவரிடம் சொல்லுங்கள். அவரும் நானும் இணைந்து அசுரனை வெல்வோம் என உறுதி பட தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பதங்கமாமுனிவர் மிகப்பெரிய யாகம் செய்தார். அந்த யாகத்தில் பிரம்மாவின் மகளான நீல சரஸ்வதி தேவி தோன்ற, யாகத்துக்கு காவல் நின்ற மும்மூர்த்திகள் அவளை விநாயகருக்கு திருமணம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து மும்மூர்த்திகள் இந்திரனிடம் உன்னுடைய சபைக்கு வித்தியாசூரனை வரவழைத்து அவனிடம் போர் செய்ய ஒருவன் வந்திருக்கிறான் என கூற செய்தனர்.

வித்யாசூரன் அங்கு கோபத்தோடு வந்து நிற்க விநாயக பெருமான் தன் மனைவி நீல சரஸ்வதி தேவி இடது பக்கத்தில் தாங்கி காட்சி கொடுத்தார். அப்போது ஒரு கோடி சூரியன் இணைந்து ஒன்றாக காட்சி கொடுத்தால் எலும் ஒளிப்போல் பிரம்மாண்டமான விநாயகர் காட்சியளிக்க அந்த ஒளிக்கதிர்வீச்சு தாங்காமல் வித்தியாசூரன் மாண்டு போனான். இதனை தொடர்ந்து விநாயகரை வணங்கிய முனிவர்கள் இதே வடிவத்தில் தாங்கள் யாகம் செய்த தாமிரபரணி ஆற்றங்கரையில் அருள்பாலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அவரும் வேண்டுகோளுக்கு இணங்க நான் நீல சரஸ்வதி தேவியுடன் தாமிரபரணி நதிக்கரையில் வீற்றிருப்பேன். என்னை நாடி வருவோருக்கு எல்லாவிதமான நற்பலன்களையும் தருவேன். முனிவர்களாகிய நீங்கள் நீராடிய இடம் ரிஷி தீர்த்தம் என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தில் ஒருமுறை நீராடி யாகம் செய்தால் 108 கோடி முறை யாகம் செய்து கிடைத்த புண்ணியம் பலன்களை பெறுவார்கள் என விநாயகர் தெரிவித்தார். அந்த இடமே இப்போது மணிமூர்த்தீஸ்வரம் என அழைக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்கள், உயர்ந்த கொடிமரம் என விநாயகர் தனக்கன தனிக்கோயிலில் சிறப்புற அமர்ந்துள்ளார். இந்த கோயிலில் வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும். அதுமட்டுமல்லாமல் சங்கடஹர சதுர்த்தி, மகா சிவராத்திரி, மார்கழி தனுர் மாத பூஜை ஆகிய விமர்சையாக நடைபெறும்.

Latest News