Vinayagar Chaturthi 2024: விடிய விடிய விநாயகருக்கு தேன் அபிஷேகம் நடக்கும் கோயில் எது தெரியுமா? - Tamil News | Vinayagar Chaturthi 2024 Thiruppurambiyam Sakshinatheswarar Temple Special | TV9 Tamil

Vinayagar Chaturthi 2024: விடிய விடிய விநாயகருக்கு தேன் அபிஷேகம் நடக்கும் கோயில் எது தெரியுமா?

Published: 

02 Sep 2024 19:21 PM

எந்த ஒரு காரியமாக இருந்தாலும், அல்லது எந்த காரியத்தில் தடைகள் இருந்தாலும் விநாயகரை வழிபட்டால் அதில் வெற்றி நிச்சயம் என்பது எழுதப்படாத விதி. அப்படிப்பட்ட விநாயகர் அவதரித்த தினமாக விநாயக சதுர்த்தி கருதப்படுகிறது. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. இதற்கான பத்து நாட்கள் திருவிழா ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் புகழ்பெற்ற விநாயகருக்கு கோயில்கள் பற்றி நாம் பார்த்து வருகிறோம்.

Vinayagar Chaturthi 2024: விடிய விடிய விநாயகருக்கு தேன் அபிஷேகம் நடக்கும் கோயில் எது தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Follow Us On

விநாயகர் சதுர்த்தி: பொதுவாக பல வகையான கடவுள்கள் இருந்தாலும் விநாயகப் பெருமானை மட்டும் தான் முழு முதல் கடவுளாக நாம் சொல்லுவோம். எந்த ஒரு காரியமாக இருந்தாலும், அல்லது எந்த காரியத்தில் தடைகள் இருந்தாலும் விநாயகரை வழிபட்டால் அதில் வெற்றி நிச்சயம் என்பது எழுதப்படாத விதி. அப்படிப்பட்ட விநாயகர் அவதரித்த தினமாக விநாயக சதுர்த்தி கருதப்படுகிறது. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. இதற்கான பத்து நாட்கள் திருவிழா ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் புகழ்பெற்ற விநாயகருக்கு கோயில்கள் பற்றி நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேன் அபிஷேக விநாயகர் பற்றி நாம் இன்று காணலாம்.

Also Read: September Rasipalan: செப்டம்பர் மாதம் எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

அது என்ன தேன் அபிஷேக விநாயகர் என கேள்வி எழலாம். ஆண்டுக்கு ஒரு முறை அதுவும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே இந்த கோயிலில் விநாயகருக்கு இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்கு செல்லும் வழியில் புளியஞ்சேரி என்னும் ஊருக்கு அருகில் உள்ளது. அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் சென்றால் திருப்புறம்பியம் என்ற இடத்தை அடையலாம். அந்த ஊரில் தான் இந்த தேன் அபிஷேக விநாயகர் குடிகொண்டுள்ளார். இந்த கோயிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் சுவாமி தரிசனம் செய்யலாம். விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் கோயில் திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டபோது வெள்ளப்பெருக்கு உண்டானது. அந்த வெள்ளம் ஊருக்குள் வராமல் அதன் எல்லையிலேயே நின்று விட்டது. பிரளயத்துக்கு புறம்பாக நின்றதால் இந்த ஊர் திருப்புறம்பியம் என அழைக்கப்படுகிறது. காவிரி வடகரை தலங்களில் 46வது தலமான இந்த ஸ்ரீ சாட்சிநாதர் கோயில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானது. ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கோயிலுக்கு எதிரில் கீழ வீதியில் தேரடி அருகில் மேற்கு நோக்கி மிகப்பெரிய விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் மகா மண்டபத்தின் தென்கிழக்கு பகுதியில் தான் பிரளயம் காத்த விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இந்த விநாயகர் சிலையானது சந்தன நேரம் பொருந்திய ஒரு கல்லால் ஆனதாக சொல்லப்படுகிறது. அவரின் திருமேனியில் சங்கும் சிற்பியும் காணப்படுகிறது.

Also Read:Dream Theory: உங்கள் கனவில் தேள் கொட்டினால் என்ன அர்த்தம் தெரியுமா?

சிவபெருமான்  பிரளயத்தில் இருந்து இந்த ஆலயத்தை காக்கும் பொருட்டு அதனை விநாயகரிடம் ஒப்படைத்ததாக வரலாறு தெரிவிக்கிறது. சிவனின் ஆணையை ஏற்ற விநாயகர் ஓங்காரத்தை பிரயோகம் செய்து கடலின் ஆக்ரோஷத்தை ஒரு கிணற்றுக்குள் அடக்கியதாக புராணங்கள் தெரிவிக்கிறது. இந்த பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி அன்று தேனால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஊற்றப்படும் அனைத்து தேனும் விநாயகரால் உறிஞ்சப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த தேன் அபிஷேகத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசித்தால் ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கும். மேலும் தொடர்ந்து ஒன்பது சங்கடஹர சதுர்த்தி அன்று இந்த விநாயகரை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது ஐதீகமாகும். சரியாக விநாயகர் சதுர்த்தி அன்று என்று மாலை 6 மணி முதல் மறுநாள் விடியற்காலை 4 மணி வரை இடைவிடாது இந்த விநாயகருக்கு தேன் அபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் அவருக்கு வெள்ளி கவசம் அணிவித்து மகாதீபாரதனையும் சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.

இந்தக் கோயிலில் ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி கந்த சஷ்டி விழா, கார்த்திகை சோமவாரம், தமிழ் வருடப்பிறப்பு, வைகாசியில் சிவனின் 64வது திருவிளையாடல் ஐதீக நிகழ்ச்சியான வணிகர் நாடகம், பங்குனி உத்திரம், பிரதோஷம், பௌர்ணமி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கும்பகோணம் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நவக்கிரக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த கோயில்களில் உள்ள விநாயகரை வந்து வணங்கினால் கிடைக்கும் நற்பலன்கள் இரட்டிப்பாகும் என்பதை நம்பிக்கையாகும்.

ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
Exit mobile version