Vinayagar Chaturthi 2024: விநாயகர் சதுர்த்தி நாளில் நல்ல நேரம் எப்போது? – என்ன செய்யலாம்? - Tamil News | Vinayagar Chaturthi 2024 what is the right time to worship Vinayagar on that day | TV9 Tamil

Vinayagar Chaturthi 2024: விநாயகர் சதுர்த்தி நாளில் நல்ல நேரம் எப்போது? – என்ன செய்யலாம்?

Published: 

03 Sep 2024 18:15 PM

Ganesh Chaturthi: நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. பொதுவாக  விநாயகப் பெருமான் நம்முடைய வாழ்க்கையில்  அன்பையும், அறிவையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் அளிப்பவர் என கருதப்படுகிறது. நடப்பாண்டு ஆவணி மாதம் சுக்ல பக்‌ஷத்தின் சதுர்த்தி திதி செப்டம்பர் 6 அன்று பிற்பகல் 03:01 மணிக்கு தொடங்குகிறது.

Vinayagar Chaturthi 2024: விநாயகர் சதுர்த்தி நாளில் நல்ல நேரம் எப்போது? - என்ன செய்யலாம்?

கோப்பு புகைப்படம்

Follow Us On

விநாயகர் சதுர்த்தி: முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான அவதரித்த தினமாக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்படியான நிலையில் நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. பொதுவாக  விநாயகப் பெருமான் நம்முடைய வாழ்க்கையில்  அன்பையும், அறிவையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் அளிப்பவர் என கருதப்படுகிறது. நடப்பாண்டு ஆவணி மாதம் சுக்ல பக்‌ஷத்தின் சதுர்த்தி திதி செப்டம்பர் 6 அன்று பிற்பகல் 03:01 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் சூரிய உதயத்தை கணக்கில் வைத்து கணகிடும்போது விநாயகர் சதுர்த்தியானது செப்டம்பர் 7 அன்று மாலை 05:37 மணிக்கு முடிவடைகிறது.

Also Read: Scam : OLX-ல் QR கோடு மூலம் ரூ.2 லட்சத்தை பணத்தை இழந்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!

பூஜை செய்ய நல்ல நேரம் 

அன்றைய நாளில் எப்போது பூஜை வழிபாடு மேற்கொள்ளலாம் என்ற கேள்வி பலருக்கும் எழும். விநாயகர் சதுர்த்தி நாளில் காலை 11:03 முதல் மதியம் 01:34 வரை நல்ல நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பூஜை செய்து வழிபடலாம். அன்றைய நாளில் அனைவரும் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். பின்பு நன்கு சுத்தமான ஆடை அணிந்து பூஜையறையில் வழிபாடு மேற்கொள்ளலாம்.

Also Read: Actress Charmila: சட்டென பாய்ந்த 8 பேர்.. மல்லுக்கட்டிய நடிகை.. பொள்ளாச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அங்கு விநாயகருக்கு சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மேடை அமைக்க வேண்டும். அதில் விநாயகர் பெருமானின் படம் அல்லது கரைப்பதற்காக வாங்கப்பட்ட விநாயகரை வைக்க வேண்டும். பிறகு விநாயகருக்கு பின்னணியில் குடை அமைக்காமல் வழிபாடு நிறைவு பெறாது.  விநாயகருக்கு முன்பாக வாலை இலை விரித்து அவருக்கு பிடித்த அவல், சுண்டல், அப்பம், பொரி, கொழுக்கட்டை, பழங்கள் மற்றும் பூக்கள் உள்ளிட்டவை வைத்து வழிபட வேண்டும். இந்த நேரத்தில் விநாயகரின் பாடல்கள், பதிகம் உள்ளிட்டவற்றை பாடலாம்.

மேலும் விநாயகர் சதுர்த்தி நாளில் நீங்கள் விரதம் இருந்தால் வாழ்நாளில் எத்தகைய துன்பம் வந்தாலும் அதனை வெல்லலாம். அன்று இருவேளை சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். பின்னர் மாலையில் விநாயகப் பெருமானுக்குரிய பூஜை செய்து விரதத்தை முடிக்கலாம். அதேசமயம் அருகிலுள்ள விநாயகர் சன்னதிக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளுங்கள். முடிந்தவரை பூஜைக்குரிய பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
Exit mobile version