Weekly Horoscope: துலாம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? – ராசிபலன்கள் இதோ!

Weekly Rasipalan: நவம்பர் 10 முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்கள் பற்றி காணலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன யோகம் ஏற்படும். தனுசு ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேறும். தொழில்கள் நன்றாக நடக்கும். துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு என்ன நடக்கும் என்பதை காணலாம்.

Weekly Horoscope: துலாம் முதல் மீனம் வரை.. இந்த வாரம் எப்படி இருக்கும்? - ராசிபலன்கள் இதோ!

கோப்பு புகைப்படம்

Published: 

10 Nov 2024 19:45 PM

துலாம்: இந்த ராசிக்கு எதிர்பாராத தன யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. வருமானம் குறிப்பாக திருப்திகரமாக இருக்கும். வருமானம் வரும் வழிகள் விரிவடையும். வீட்டுச் செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. விருப்பமான உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். மனைவியுடன் தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பலம் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் மூலம் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுவார்கள். உடல்நலத்தில் அக்கறை தேவை. வேலையில்லாதவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிகார யோகம் கிடைக்கும்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக உங்களைத் தொந்தரவு செய்து வந்த ஒன்றிரண்டு தனிப்பட்ட பிரச்சனைகள் தீரும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். சிறு சிறு நோய்களால் தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் மற்றும் வேலைகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நல்ல தொடர்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக சேவைகளில் ஈடுபடுவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிக்கப்படும். வியாபாரத்தில் நிதி பிரச்சனைகள் தீரும். தூரத்து உறவினர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் சிறிய முயற்சியால் சிறந்து விளங்குவார்கள்.

Also Read: Weekly HoroScope: மேஷம் முதல் கன்னி வரை.. இந்த வார ராசிபலன்கள் இதோ!

தனுசு: திட்டமிட்ட பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேறும். எந்த முயற்சியும் வெற்றியடைய வாய்ப்புள்ளது. வருமானம் நன்றாக வளரும். கூடுதல் வருமான முயற்சிகள் கூடி வரும். வியாபாரத்தில் இருந்த நிதி பிரச்சனைகள் குறையும். தொழில் வாழ்க்கை சிறப்பாகவும் நேர்மறையாகவும் இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருக்கும் உத்தியோகஸ்தர்கள் உங்களின் ஆலோசனைகளால் ஆதாயமடைவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தனிப்பட்ட பிரச்சனை தீரும். சொத்து தகராறில் சமரசம் ஏற்படும். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். காதல் விவகாரங்களில் அவசரப்பட வேண்டாம். முன்கோபம் உள்ளவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்: நிதி விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வருமானத்தைப் பெருக்க அதிக உழைப்பு தேவை. தொழில், வியாபாரம் சீராக நடக்கும். முக்கியமான பணிகள் மற்றும் காரியங்கள் திருப்திகரமாக முடிவடையும். வேலையில்லாதவர்களுக்கு சொந்த ஊரில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பணியில் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் தவறான புரிதல்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.

Also Read: Sabarimala: சபரிமலை போகும் பக்தர்களுக்கு சிக்கல்.. இந்த தப்பை பண்ணாதீங்க!

கும்பம் : தனி நபர் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சொத்து தகராறு தீரும். நிதி விவகாரங்கள் சாதகமாக இருக்கும். முக்கியமான பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையும். பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமான நல்ல செய்திகள் கேட்பீர்கள். வாழ்க்கை துணையுடன் சேர்ந்து ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். வேலைவாய்ப்பில் ஓரிரு நல்ல செய்திகள் கேட்கபீர்கள். வரவேண்டிய பணம் உரிய நேரத்தில் வந்து சேரும். மாணவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

மீனம்: பங்குகள், முதலீடுகள் லாபகரமாக இருக்கும். சொத்து மதிப்பு உயரும். பல வழிகளில் வருமானம் கூடும். நிதி விவகாரங்கள் சாதகமாக இருக்கும். அனைத்து பணிகளும் உறுதியுடன் முடிக்கப்படும். குழந்தை பருவ நண்பர்களுக்கு உதவுவீர்கள். நல்ல உறவுகள் உருவாகும்.உத்தியோகத்தில் பொறுப்புகளும் இலக்குகளும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் லாபத்தில் சீராக முன்னேறும். உத்யோகத்தில் எடுத்த முயற்சிகள் பலன் தரும், எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு சிறிய முயற்சி தேவைப்படலாம். காதல் விவகாரங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!