5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Astrology: கடவுள் வழிபாட்டில் இப்படியெல்லாம் வேண்டாதீங்க.. அப்புறம் அவ்வளவு தான்!

இறைவன் நமக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க தயாராக இருக்கிறான். நம்முடைய வேண்டுதலை வைப்பதில் தவறு எதுவும் கிடையாது. சிலர் குறிப்பிட்ட சில விஷயங்கள் வேண்டும் என நினைப்பார்கள். இன்னும் சிலர் எதுவானாலும் நீயாக பார்த்து கொடுத்தால் போதும் என நினைப்பார்கள். ஆனால் வேண்டுவதிலும் சில நியதிகளை முன்னோர்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். கடவுளிடம் நான் நல்லா இருக்க வேண்டும் என வேண்டலாம். அதே

Astrology: கடவுள் வழிபாட்டில் இப்படியெல்லாம் வேண்டாதீங்க.. அப்புறம் அவ்வளவு தான்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 09 Sep 2024 21:00 PM

கடவுள் வழிபாடு: கடவுளிடம் நாம் எப்படி வேண்ட வேண்டும், வேண்டக்கூடாது என்பதைப் பற்றி காணலாம். இறைவன் நமக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க தயாராக இருக்கிறான். நம்முடைய வேண்டுதலை வைப்பதில் தவறு எதுவும் கிடையாது. சிலர் குறிப்பிட்ட சில விஷயங்கள் வேண்டும் என நினைப்பார்கள். இன்னும் சிலர் எதுவானாலும் நீயாக பார்த்து கொடுத்தால் போதும் என நினைப்பார்கள். ஆனால் வேண்டுவதிலும் சில நியதிகளை முன்னோர்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். கடவுளிடம் நான் நல்லா இருக்க வேண்டும் என வேண்டலாம். அதேசமயம் என்னுடைய எதிரி நல்லா இருக்கக்கூடாது என வேண்டக்கூடாது. நீங்கள் வேண்டுவதில் எது நல்லது என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். மற்றவர்களை பற்றி இப்படி பேசினால் கடவுள் நம் மீது எத்தகைய எண்ணத்தை வைப்பான் என நினைத்திருக்கிறீர்களா?.

Also Read: Astrology: உங்கள் வீட்டில் குருவி கூடு கட்டினால் என்ன நடக்கும் தெரியுமா?

வேண்டும்போது நன்றாக இருக்கணும் என்ற ரீதியில் மட்டுமே வேண்ட வேண்டும். சிலர் எனக்கு ஒரு விஷயம் கிடைக்க மாதிரி நீ செய்தால் நான் உனக்கு செய்ய வேண்டியதை செய்வேன் என கடவுளிடம் சொல்வார்கள். அது ஆணவமிக்க பேச்சு தான். கடவுளிடம் நீ எனக்கு செஞ்சு தான் ஆக வேண்டும். உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை என வேண்டுவது தவறில்லை. நீ எனக்கு செய்தால் நான் உனக்கு செய்வேன் என பேரம் பேசுவது போல வேண்டினால் நாம் நினைப்பது நடக்குமா? என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

எப்பவும் கடவுளிடம் வேண்டினால் அதில் அன்பு, பக்தி, அடக்கத்தோடு வேண்டுங்கள். கடவுளிடம் சரணாகதியாகும்போது கண்டிப்பாக கடவுள் அனுக்கிரகம் செய்வார். சிலரிடம் நம்மை யாராவது ஏமாற்றி விட்டால் கோயிலில் சென்று அவரை தண்டிக்கும்படி காசு வெட்டி போடும் பழக்கம் இருக்கிறது. செய்வினை வைப்பார்கள். இது மிகவும் தவறு. இது நிச்சயம் செய்பவர்களையும் பாதிக்கும். அதனால் தான் தனக்கு தானே செய்கிற வினை செய்வினை என சொல்லப்படுகிறது. நல்லது, கெட்டது என என்ன செய்தாலும் அது உங்களையே வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Also Read: Jayam Ravi Divorce: காத்திருந்து திருமணம் செய்தும் என்ன பலன்?.. ஜெயம் ரவி விவகாரத்தால் குமுறும் ரசிகர்கள்!

உணர்ச்சிவசப்பட்டு எதையாவது கடவுள் வழிபாட்டில் செய்யாதீர்கள். கண்ணீர் விட்டு கடவுளிடம் முறையீடு செய்வதை தவிர பெரிய ஆயுதம் எதுவுமில்லை. அதேபோல் உங்களால் முடிந்த வேண்டுதலை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அந்த வேண்டுதலை செய்யாமல் விட்டு விட்டோமே என நம் மனம் மிகவும் குற்ற உணர்வுக்கு செல்லும்.

மேலும் தப்பு செய்யும்போது கடவுளை துணைக்கு அழைக்கும் பழக்கம் எல்லாரிடத்திலும் உள்ளது. அதில் மாட்டிக்கொண்டால் கடவுள் கைவிட்டு விட்டார் என சொல்வார்கள். ஆகவே எந்தவொரு விஷயமும் தவறாக உணர்ந்தால் அதனை செய்யும்போது கடவுளை கூப்பிடக்கூடாது. எந்த விஷயம் கடவுளை கூப்பிடாமல் நாம் செய்கிறோமோ அந்த விஷயமே தப்பு தான் என்பதை உணருங்கள். இதனை நாம் உணர்ந்து நல்லொழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது எல்லாரும் நன்றாக இருந்தால் நாமும், நம்மை சுற்றிய எல்லாமே நன்றாக இருக்கும் என்பதை உணருங்கள். கடவுள் வழிபாட்டில் சுயநலம் மட்டுமின்றி பொதுநலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். அப்படித்தான் இறைவனிடம் இருந்து நல்லுள்ளத்தோடு பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News