Mahalaya Amavasya: மஹாளய அமாவாசை.. உணவில் சேர்க்க வேண்டிய, கூடாத காய்கறிகள்! - Tamil News | What are the vegetables add and avoid during Mahalaya Amavasi worship? | TV9 Tamil

Mahalaya Amavasya: மஹாளய அமாவாசை.. உணவில் சேர்க்க வேண்டிய, கூடாத காய்கறிகள்!

Published: 

30 Sep 2024 19:29 PM

மகாளய அமாவாசை என்பது நம்முடைய முன்னோர்கள் பித்ரு உலகத்தில் இருந்து புறப்பட்டு பூமியில் தங்கியிருக்கும் காலமாகும். இது தான் மிகப்பெரிய அமாவாசையாக கணக்கிடப்படுகிறது. கிட்டதட்ட 15 நாட்கள் பித்ருபக்‌ஷ நாட்களாக கருதப்பட்டு விரதம் கடைபிடிக்கப்படும். பிரதமை முதல் அமாவாசை வரையிலான திதியில் நம்முடைய முன்னோர்கள் உயிரிழந்த திதியை கணக்கிட்டு அன்றைய நாளில் குடும்பத்தினர் விரதம் மேற்கொள்ளலாம்.

1 / 6முன்னோர்

முன்னோர் வழிபாடு என்பது மிக முக்கியமானது. மாதம்தோறும் அமாவாசை திதியில் வழிபட முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையில் கண்டிப்பாக முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

2 / 6

அதன்படி மஹாளய அமாவாசை நடப்பாண்டு அக்டோபர் 2 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் காலை 6 முதல் 12 மணிக்குள் நீர்நிலைகள் பெற்றோர்களை இழந்த ஆண்கள் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

3 / 6

இந்த அமாவாசை தினத்தில் விரத வழிபாடு மேற்கொள்வது அவசியமாகும். இந்த நாளில் நாம் சில காய்கறிகளை சேர்க்க வேண்டும். அதேசமயம் சில காய்கறிகளை எக்காரணம் கொண்டும் சேர்க்கக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

4 / 6

நாம் அமாவசை விரத சமையலின்போதும், வழிபாட்டின்போது சரி முட்டைகோஸ், முருங்கைக்காய், கோவக்காய், பீட்ருட், பச்சைமிளகாய், முள்ளங்கி, கீரை (அகத்திகீரை தவிர), பீன்ஸ், உருளைகிழங்கு, கேரட் கத்தரிக்காய், வெண்டைக்காய், காலிஃபிளவர், வெங்காயம், தக்காளி, பூண்டு, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் சேர்க்க வேண்டாம்.

5 / 6

அதேசமயம் அவரைக்காய், புடலங்காய், பாகற்காய், வாழைக்காய், இஞ்சி, மாங்காய், பிரண்டை, வெல்லம், மஞ்சள் பூசணி, வெள்ளை பூசணி ஆகிய காய்கறிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இந்த விரதம் இருப்பதன் மூலம் நம் முன்னோர்களை மகிழ்விக்க முடியும் என நம்பப்படுகிறது.

6 / 6

அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபடுவது நம்முடைய எதிர்கால தலைமுறையினர் நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான். எக்காரணம் கொண்டும் அதில் குறைபாடோ அல்லது விரதம் முறைகளை மேற்கொள்ளாமலோ இருக்க வேண்டாம் என சொல்லப்பட்டுள்ளது.

Follow Us On
கருப்பு திராட்சை Vs பச்சை திராட்சை : எது பெஸ்ட்?
எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
காபி குடிப்பதால் உடலில் இவ்வளவு பிரச்னைகள் ஏற்படுமா?
வெறும் வயிற்றில் ஜூஸ் குடித்தால் இத்தனை பிரச்சனைகள் வருமா?
Exit mobile version