Aadi Pooram: ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன் தெரியுமா?
Aadi Masam: நடப்பாண்டு ஆடிப்பூரம் விழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஆனால் இதற்கான நட்சத்திரம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை 06.42 மணிக்கு தொடங்குகிறது.7 ஆம் தேதி இரவு 9.03 மணி வரை இந்த நட்சத்திரம் உள்ளதால் அன்றைய நாளில் ஆடிப்பூர வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். இந்நாளில் அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெறும்.
ஆடிப்பூரம்: ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்கள் களைக்கட்டும் ஆன்மீக மாதமாகும். இந்த மாதத்தில் அனைத்து நாட்களும் விசேஷ நாட்களாக கொண்டாடப்படும். பல்வேறு வகையான முறையில் திருவிழாக்களும் கொண்டாடப்படும். அந்த வகையில் ஆடி மாதம் அம்மனுக்கு கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடிப்பூரம். அந்த மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படும். இந்த நாளுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. பன்னிரு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் இந்த நாளில் தான் அவதரித்தார் என சொல்லப்படுகிறது. இதனால் சைவம்,வைணவம் என அத்தனை திருத்தலங்களில் இந்ந நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
Also Read: Papanasanathar Temple: ஜென்ம பாவங்களை போக்கும் பாபநாசம் கோயில்..!
ஆடிப்பூரம் எப்போது?
நடப்பாண்டு ஆடிப்பூரம் விழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஆனால் இதற்கான நட்சத்திரம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை 06.42 மணிக்கு தொடங்குகிறது.7 ஆம் தேதி இரவு 9.03 மணி வரை இந்த நட்சத்திரம் உள்ளதால் அன்றைய நாளில் ஆடிப்பூர வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். இந்நாளில் அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெறும்.இந்நிகழ்ச்சியில் திருமண வரன், குழந்தை பாக்கியம் ஆகியவை வேண்டும் பெண்கள் அம்மனுக்கு வளையல், குங்குமம் வாங்கிக் கொடுத்து வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் வளையலையும் அணிந்து கொள்ளலாம்.
Also Read: Crime: ”அந்த நேரத்துல உங்களுக்கு என்ன வேலை?” புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீசார் கேட்ட கேள்வி!
ஆடிப்பூரம் வரலாறு
முன்னொரு காலத்தில் ஆடி மாதத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருவிழா நடத்தப்பட்டது. விழா முடிண்நு அனைவரும் சென்ற நிலையில் அவ்விடத்தில் இருண்ந கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவளுக்கு உதவி செய்ய யாரும் அங்கு இல்லை என்ற நிலையில், அம்பாள் தனக்கு நேரில் வந்து உதவுவாள் என மனதார நினைத்துக்கொண்டு வேண்டினாள். அதன்படி அம்பாள் மருத்துவச்சி என சொல்லப்படும் பெண்ணாக வந்து அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். வந்தது அம்பாள் தான் என்பதை உணர்ந்த அப்பெண் இந்த நாளை அனைவரும் வளைகாப்பு திருவிழாவாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள் சக்தியாக அவதரித்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.
மேலும் ஆடிப்பூர நாளில் ஆண்டாள் அவதரித்தாள் என நம்பப்படுவதால் இந்த நாளில் ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழா நடைபெறும். 10 ஆம் நாளில் ஆண்டாள்- ஸ்ரீரங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த கல்யாண நிகழ்வை திருமணமாகாதவர்கள் கண்டால் நிச்சயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகமாகும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)