Shiva Temple: திங்கட்கிழமையில் சிவனை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா? - Tamil News | what is the benefits for worship god shivan on monday | TV9 Tamil

Shiva Temple: திங்கட்கிழமையில் சிவனை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா?

Updated On: 

11 Aug 2024 13:48 PM

God Worship: பிறப்பு முதல் இறப்பு வரையில் பாதுகாத்து அழகான வாழ்வை அளிப்பதில் கடவுளின் அருளும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மதங்களும் அதன் பிரிவுகளும் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுள் நம்பிக்கை ஒன்றே. அதனால் ஒவ்வொரு நாளும் இந்த கடவுளுக்கானது என பிரித்து வைத்துள்ளார்கள். இப்படியான நிலையில் திங்கட்கிழமையில் நாம் சிவபெருமானை வணங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

Shiva Temple: திங்கட்கிழமையில் சிவனை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா?

கோப்பு புகைப்படம்

Follow Us On

கடவுள் வழிபாடு: வாழ்க்கையில் கடவுள் வழிபாடு என்பது மிக முக்கியம். நம்மை பிறப்பு முதல் இறப்பு வரையில் பாதுகாத்து அழகான வாழ்வை அளிப்பதில் கடவுளின் அருளும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மதங்களும் அதன் பிரிவுகளும் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுள் நம்பிக்கை ஒன்றே. அதனால் ஒவ்வொரு நாளும் இந்த கடவுளுக்கானது என பிரித்து வைத்துள்ளார்கள். இப்படியான நிலையில் திங்கட்கிழமையில் நாம் சிவபெருமானை வணங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அந்தநாள் சிவனுக்கு  மிகவும் உகந்த நாளாகும். இந்த நாளில் விரதமிருப்பதால் சிவபெருமான் மட்டுமின்றி பார்வதி தேவியின் அருளையும் சேர்த்து பெறலாம் என்பது தான். மேலும் திங்கட்கிழமை வரும் பிரதோஷ நாளில் சிவபெருமானின் 3 தோற்றத்தை நினைத்து வழிபட்டால் நிச்சயம் நிறைய பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: Neem Water Bath: சருமத்திற்கு பல நன்மைகளை தரும் வேப்ப இலை குளியல்.. இப்படி குளிச்சு பாருங்க!

நீலகண்டன்

 

அசுரர்களும் தேவர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க முயற்சிக்கும்போது பாம்பினை கயிறாக கொண்டிருந்தனர். அப்போது பாம்பின் விஷம் கடலில் கலந்திருக்கலாம் என குழப்பம் ஏற்பட்டது. அப்போது தேவர்களும், அசுரர்களுன் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் உலகைக் காப்பாற்ற விஷத்தை அருந்தினார். இதனால் அவரது தொண்டை நீல நிறமாக மாறியது. அன்றிலிருந்து சிவபெருமான் நீலகண்டன் என்று அழைக்கப்படுகிறார். நீலகண்டேஸ்வரரை திங்கட்கிழமையன்று முறையான பூஜைகளுடன் வழிபடுவதன் மூலம் எதிரிகளிடம் கொண்டிருந்த பயம், எடுக்கும் காரியங்களில் தடைகள் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

இந்நாளில் சிவலிங்கத்திற்கு கரும்புச்சாற்றால் அபிஷேகம் செய்து, ஓம் நமோ நீலகண்டாய நம என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தொடர்பான தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் அமைதியும் வளமும் உண்டாகும். மேலும் மன அமைதி கிடைப்பதோடு எதிர்மறை ஆற்றலும் நீங்கும்.

இதையும் படிங்க: Astrology: வேலை தேடும் 6 ராசியினருக்கு கிடைக்கப்போகும் பொன்னான வாய்ப்பு!

நடராஜன்

சிவபெருமான் ஆனந்த தாண்டவத்தில் இருக்கும் நிலையானது நடராஜராக வழிபடப்படுகிறது. அவரை திங்கட்கிழமையில் வழிபட்டால் படைப்பாற்றல், கலைத் துறையில் வெற்றி கிடைக்கும். மேலும் முக்கிய விஷயங்களில் ஏற்படும் தடைகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீக்கும்.  நடராஜரின் வழிபாடு அறிவு மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இதன்மூலம், வாழ்வில் வலிமையும், சமநிலையும், அமைதியும் கிடைக்கும். இது சிவபெருமானின் மிகவும் சக்திவாய்ந்த, எழுச்சியூட்டும் வடிவத்தைக் குறிக்கிறது. கலை வாழ்க்கையில் சாதிக்க விரும்புபவர்கள் நடராஜரை வணங்கினால் நிச்சயம் நினைத்த காரியம் நடக்கும்.

மஹா மிருத்யுஞ்சயன்

மிருத்யுஞ்சய வடிவத்தில் சிவபெருமானை வழிபடுவது நீண்ட ஆயுளையும் ஆன்மீக முன்னேற்றத்தையும் தரும். மேலும் தீராத நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். மனதில் ஏற்படும் பயம் குறைவதோடு வாழ்வில் அமைதி ஏற்படும் . சிவபெருமானின் மஹாமிருத்யுஞ்சய வடிவத்தை வழிபடுவது அபரிமிதமான பலத்தை தருகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
Exit mobile version