தாலிக்கயிறு மாற்றப் போறீங்களா? – இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க! - Tamil News | what is the procedure to be followed during change thali string | TV9 Tamil

தாலிக்கயிறு மாற்றப் போறீங்களா? – இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!

Published: 

25 Sep 2024 15:00 PM

தாலிக்கயிறு நிறம் மாறினாலோ அல்லது அறுந்து போகும் நிலை ஏற்பட்டாலோ உடனடியாக அதனை மாற்ற வேண்டும். இந்த தாலி கயிறு மாற்ற திங்கள்,செவ்வாய், வியாழக்கிழமை உகந்த நாளாக இருக்கும். உங்களுடைய தாலிக்கயிறு அல்லது சரடை மாற்றும்போது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். இதனை மாற்றும்போது உங்களுடைய கணவர் அல்லது சுமங்கலியாக இருக்கும் வீட்டின் பெரியவர்கள் உடன் இருக்க வேண்டும்.

தாலிக்கயிறு மாற்றப் போறீங்களா? - இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!

கோப்பு புகைப்படம்

Follow Us On

தாலிக்கயிறு: திருமணம் என்பது ஒவ்வொரு ஆண், பெண் இருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணத்தின் போது தாலி அணிந்து கொள்வது இந்து மதத்தில் மிக முக்கியமான அடையாளமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு வடிவத்தில் தாலி சரடு அமைந்திருக்கும். இந்த தாலியை மஞ்சள் கயிறில் கோர்த்து தான் திருமண வைபவம் நடைபெறும். சிலர் திருமணம் முடிந்த கையோடு இந்த தாலி சரடை தங்கச் செயினில் மாற்றி விடுவார்கள். தாலிச் செயின் செய்ய வசதி இல்லாதவர்கள், அல்லது கழுத்தில் மஞ்சள் கயிறுடன் தாலி இருப்பதை பாக்கியமாக நினைப்பவர்கள் அப்படியே அணிந்திருப்பார்கள். ஆனால் பருவ நிலைகள், உடலின் நிகழ்வுகள் ஆகியவை காலப்போக்கில் அந்த தாலி கயிற்றின் நிறத்தை மாற்றி விடும். நம் இந்த தொகுப்பில் தாலிக் கயிறை மாற்றும்போது செய்ய வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பது பற்றி காணலாம்.

இதையும் படிங்க: Etteluthu Perumal Temple: குழந்தை வரம் அருளும் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயில்!

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தாலி கயிறுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால் இதனை வருடத்திற்கு இரண்டு முறை மாற்றுவார்கள். இந்த தாலி கயிறை மாற்றும்போது நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது நாள், கிழமை ஆகியவை பார்த்து தான் தாலி கயிறு மாற்ற வேண்டும். இதில் சுபமுகூர்த்த நாள், சந்திர தரிசனம், மேல் நோக்கி நாள்,  அமிர்த யோகம், சித்தயோகம் என எல்லாம் அமையக்கூடிய நாளாக அந்த நாள் இருக்க வேண்டும்.

தாலி கயிறு நிறம் மாறினாலோ அல்லது அறுந்து போகும் நிலை ஏற்பட்டாலோ உடனடியாக அதனை மாற்ற வேண்டும். இந்த தாலி கயிறு மாற்ற திங்கள்,செவ்வாய், வியாழக்கிழமை உகந்த நாளாக இருக்கும். உங்களுடைய தாலிக்கயிறு அல்லது சரடை மாற்றும்போது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். இதனை மாற்றும்போது உங்களுடைய கணவர் அல்லது சுமங்கலியாக இருக்கும் வீட்டின் பெரியவர்கள் உடன் இருக்க வேண்டும். தாலி கயிறு இருக்க மாற்ற ஒருமுறை உட்கார்ந்து விட்டால் முடியும் வரை எழுந்திருக்கக்கூடாது. எனவே முன்கூட்டியே அதற்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: School Leave: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..

ஒரு தட்டில் திருமாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், பூ இவைகள் எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அணிந்திருந்த தாலி கயிறை பிரித்து அதனை புதிதாக மாற்ற வைத்துள்ள கயிறு முனையோடு இணைக்க வேண்டும். திருமாங்கல்யத்தை பழைய தாலி கயிறுல இருந்து கழற்றாமல் அப்படியாக அகற்றி புது கயிறோடு கோர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்த நல்ல நாளில் அதிகாலை பிரம்மா முகூர்த்த நேரத்தில் குளித்துவிட்டு திருமங்கலத்தை மாற்றலாம். நீங்கள் ஏற்கனவே அணிந்த பழைய கயிறை செடி கொடிகள் இருந்தால் அதில் கட்டி விட வேண்டும் அப்படி என்றால் குப்பையில் தூக்கி போடாமல் அருகில் உள்ள நீர் நிலைகளில் விட வேண்டும்.

பொதுவாக சித்திரை மாதத்தில் மீனாட்சி திருக்கல்யாணம், வைகாசி, ஆடிப்பெருக்கு, ஆவணி ஐப்பசி கார்த்திகை மாசி மாதங்களில் உள்ள முகூர்த்த நாள், பௌர்ணமி வளர்பிறை பஞ்சமி, தசமி ஆகிய நாட்களில் தாலி கயிறு கண்டிப்பாக மாற்றலாம். தாலி கயிறு மாற்றும் முன்பு குளித்துவிட்டு சாமியை வழிபட்டு விளக்கேற்றி விட்டு தான் மாற்ற வேண்டும். அதேசமயம் தாலி கயிறு மாற்றிய பின்னர் முடிந்த அளவு அருகில் உள்ள சுமங்கலி பெண்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள், பூ, மஞ்சள் கயிறு ஆகிய ஐந்து பொருட்கள் கொடுக்க வேண்டும்.கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் எக்காரணம் கொண்டும் தாலிக்கயிறு மாற்றக்கூடாது. இதேபோல் வெள்ளிக்கிழமையிலும் தாலிக்கயிறு மாற்ற வேண்டாம் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version