5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ruthratcham: பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? – என்னென்ன விதிமுறைகள் தெரியுமா?

பக்தி மார்க்கமாகவும், ஞான மார்க்கமாகவும் ஆன்மிக ரீதியாக நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்வதில் முதன்மையானதாக திகழ்வது ருத்திராட்ச மாலை தான். இந்த ருத்ராட்சம் பற்றி பலருக்கும் பல்வேறு விதமான கேள்விகள் மக்களுக்குள் எழுந்துக்கொண்டே இருக்கிறது. இதனை யாரெல்லாம் அணியலாம், அப்படி அணிந்தால் என்ன செய்யலாம், செய்யக்கூடாது?, ருத்ராட்சம் எப்படி தோன்றியது? ஆகியவை பற்றி நாம் காணலாம்.

Ruthratcham: பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? – என்னென்ன விதிமுறைகள் தெரியுமா?
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 25 Sep 2024 20:07 PM

ருத்ராட்சம் மாலை: பக்தி மார்க்கமாகவும், ஞான மார்க்கமாகவும் ஆன்மிக ரீதியாக நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்வதில் முதன்மையானதாக திகழ்வது ருத்திராட்ச மாலை தான். இந்த ருத்ராட்சம் பற்றி பலருக்கும் பல்வேறு விதமான கேள்விகள் மக்களுக்குள் எழுந்துக்கொண்டே இருக்கிறது. இதனை யாரெல்லாம் அணியலாம், அப்படி அணிந்தால் என்ன செய்யலாம், செய்யக்கூடாது?, ருத்ராட்சம் எப்படி தோன்றியது?, ருத்ராட்ச முகங்களின் சிறப்பு பற்றிய கேள்விகள் நம் மனதில் எழலாம். அதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.சைவ சமயத்தின் அடையாளங்களில் திருநீறுக்கு அடுத்தப்படியாக திகழ்வது ருத்ராட்சம் தான். ருத்ரன் என்றால் சிவபெருமான். அட்சம் என்பது கண்களை உடையவர் என்பது பொருள். சிவபெருமான் கண்ணீர் துளிகளில் இருந்து இந்த உலகத்துக்கு கிடைத்த அபூர்வமான பொருள் என்றால் அது ருத்ராட்சம் தான்.

Also Read: J&K Election: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.. வெற்றிக்கனி யாருக்கு?

இதனை யாரெல்லாம் அணிந்து இருக்கிறார்களோ, அவர்களை சிவபெருமான் தன் கண்ணைப் போல காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாகும். ருத்ராட்சம் ஒரு மரத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய பொருளாகும். கண்டிகை என்ற பெயர் கூட இதற்கு உண்டு. ஆனால் அனைவராலும் ருத்ராட்சம் என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த ருத்ராட்சம் மரம் அபூர்வமாக தமிழ்நாட்டில் சில புனித தலங்களில் அமைந்துள்ளது. நேபாளத்தில் தான் அதிகமாக மரங்கள் உள்ளது. மேலும் இமாச்சல பிரதேசம், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட இடங்களிலும் ருத்ராட்சம் மரங்கள் உள்ளது. ஆண், பெண் பேதம் இல்லாமல் அனைவரும் ருத்ராட்சம் அணியலாம். வயது வரம்பு என்பது கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக அணியலாம். குறிப்பாக பெண்கள் பூப்பெய்திய பிறகு இதனை மாதவிடாய் காலங்களில் கழற்றி வைக்க வேண்டுமா என்ற கேள்வி எழும்.

Also Read: Tamilnadu Weather Alert:உஷார் மக்களே..! கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை கொடுத்த எச்சரிக்கை..

இயற்கையாக உடலில் நடைபெறும் மாற்றங்களின்போதும் அந்த ருத்ராட்சம் நம்முடன் எப்போதும் இருக்கலாம். அதில் எந்த தவறுமில்லை என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. திதி, மாதவிடாய், தாம்பத்யம் ஆகிய காலக்கட்டத்தில் ருத்ராட்சம் அணிந்துக் கொள்ளலாம். ருத்ராட்சத்துக்கு தீட்டு என்பதே கிடையாது. ருத்ராட்சம் அணிந்தவர்கள் மது, மாமிசம், புகைப்பிடித்தல் போன்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடக்கூடாது. அதிகமாக பொய் சொல்லக்கூடாது. தொழில்,வியாபார ரீதியாக இருக்கும்போது நாம் பொய் சொல்வது மிகச்சாதாரணமாக இருக்கும். இதனைத் தவிர்த்து காரணமில்லாமல் பொய் சொல்லாதீர்கள். நீங்கள் ருத்ராட்சம் போட்டிருந்தாலும் அசைவம் உணவு சாப்பிடும் நாளில் அதனை கழற்றி வைத்து விட வேண்டும். பின்னர் நாள் முழுவதும் அணியாமல் மறுநாள் காலையில் குளித்து விட்டு அணிந்து கொள்ளலாம்.

Also Read: Navaratri 2024: நவராத்திரி பண்டிகை.. கொலு வழிபாடு மேற்கொள்வது எப்படி?

ருத்ராட்சம் அணிந்து கொள்ள வேண்டும்?

ருத்ராட்சம் உடல் பலம், மன பலம், ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியது. இதனை ஒரு சமயத்தின் ஆன்மீக அடையாளமாக மட்டுமே சுருக்கி விட முடியாது. ருத்ராட்சம் அணிந்து குளிக்கும் போது அதன் மீது பட்ட தண்ணீர் நம் மீது படும்போது கங்கையில் குளித்த பாக்கியம் நமக்கு கிடைக்கிறது. அறிவியல் ரீதியாக ருத்ராட்சம் சில மாற்றங்களை உண்டாக்குகிறது. ருத்ராட்சம் உடலோடு எப்போது ஒட்டிக் கொண்டிருப்பதால் உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்க்கிருமிகள் அழிவதாக நம்பப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் ஏற்படும் பாதிப்புகளை ருத்ராட்சம் கட்டுப்படுத்துகிறது. நம்முடைய மனதில் ஏற்படும் எதிர்மறை சிந்தனைகள் தான் உடலில் நோய்கள் வருவதற்கு முதல் காரணமாக அமைகிறது. அப்படி இருக்கும் போது எதிர்மறை எண்ணங்களை குறைத்து மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள ருத்ராட்சம் மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது. ருத்ராட்சத்தை அணிந்திருப்பவர்கள் எந்த ஒரு விஷயங்களின் போது உள் உணர்வுகள் சொல்லும் முடிவுகள் மிகச் சரியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News