Spiritual: பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தால் இவ்வளவு நன்மைகளா?
பசுவில் அனைத்து விதமான தெய்வங்களும் இருப்பதாக நம்பப்படுவதால் அதன் அருகில் அமர்ந்து மந்திரம் கூறுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.அகத்திக்கீரை வாங்கி அதனை ஒரு நாள் முழுக்க வீட்டில் வைத்து பின்னர் சனிக்கிழமை தினத்தில் பசுவுக்கு கொடுத்து வணங்க வேண்டும். பின்னர் அதன் கோமியத்தை மஞ்சள் நீருடன் கலந்து வீட்டில் தெளித்தால் பில்லி சூனியங்கள் விலகும் என நம்பப்படுகிறது.
பசுவை வணங்குதல்: இந்து சமயத்தைப் பொறுத்தவரை பலவிதமான கடவுள்களின் பூமியாக திகழ்கிறது. எலி தொடங்கி யானை வரையிலான ஊர்வன, பறப்பன என அனைத்து வகையான உயிரினங்களும் கடவுளின் வாகனமாகவும், அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் நாம் எந்த விலங்களையும் கொல்லாமல் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தவே நினைக்கிறோம். அப்படியான பார்த்தோமேயானால், பசு கடவுளின் அடையாளமாக கருதப்படுகிறது. சாலையில் எங்கு சென்றாலும் பசுவை தொட்டு வணங்கும் வழக்கம் நம்மிடையே உள்ளது. அதேபோல் மாடுகள் வீடுகள் இருக்கும் பகுதிக்கு வரும்போது அவற்றிற்கு உணவளிக்கும் பழக்கமும் உள்ளது. ஒவ்வொரு கோயிலிலும் கோசாலை தனியாக பராமரிக்கப்படும். கோசாலையில் வளர்க்கப்படும் பசுக்களுக்கு நாம் தானமாக அகத்திக்கீரை, பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்குவோம். அவ்வாறு செய்தால் நம்முடைய பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேலும் பசுவில் மும்மூர்த்திகளான பிரம்மா மகாவிஷ்ணு சிவபெருமான் ஆகியோர் இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் பசுவை வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பசுவிற்கு அப்பத்தை கீரை அல்லது பழங்கள் உணவாக கொடுத்துவிட்டு அதன் பின்பக்கம் தொட்டு வணங்கி மூன்று முறை வலம் வந்து தெற்கு திசை தவிர்த்து மற்ற திசைகளில் இருந்து விழுந்து வணங்க வேண்டும்.
Also Read: Diwali Sweet: தீபாவளிக்கு சூப்பர் ஸ்வீட் செய்ய ஆசையா..? முந்திரி கேக், லட்டு செய்து அசத்துங்க..!
இவ்வாறு பசுவை வணங்குவதால் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் பிரம்மகத்தி முதலிய தோஷங்களும் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கையாகும். மேலும் நீண்ட காலமாக முன்னோர்களுக்கு திதி செய்யாமல் இருப்பதால் ஏற்படும் வினைகளும், நம்மை பிடித்துள்ள கர்ம வினைகளும் பசுவிற்கு 16 அகத்திக்கட்டு கீரை கொடுப்பதால் நீங்கும் என சொல்லப்படுகிறது. அதனால் முன்னோர் வழிபாடு மேற்கொள்ளும் அமாவாசை தினத்தில் பசுவிற்கு அகத்திக்கீரை தானமாக வழங்கப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் பசுவின் தலை மற்றும் வாலில் பொட்டு வைத்து சந்தான லட்சுமியின் துதியை 16 முறை கூறியபடியே சுற்றி வந்து வணங்கினால் நன்மை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் பசுவில் அனைத்து விதமான தெய்வங்களும் இருப்பதாக நம்பப்படுவதால் அதன் அருகில் அமர்ந்து மந்திரம் கூறுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.அகத்திக்கீரை வாங்கி அதனை ஒரு நாள் முழுக்க வீட்டில் வைத்து பின்னர் சனிக்கிழமை தினத்தில் பசுவுக்கு கொடுத்து வணங்க வேண்டும். பின்னர் அதன் கோமியத்தை மஞ்சள் நீருடன் கலந்து வீட்டில் தெளித்தால் பில்லி சூனியங்கள் விலகும் என நம்பப்படுகிறது. அதேபோல் திருமணம் ஆகாத பெண்கள் அரச மரத்தின் கீழ் பசுவை நிற்க வைத்து அதற்கு அருகம்புல் மற்றும் அகத்திக்கீரை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் காமேஸ்வரி மந்திர மூலத்தை பாராயணம் செய்வதால் எந்த வயது ஆனாலும் திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும் என நம்பப்படுகிறது.
Also Read: Karthigai Viratham: பலன்களை அள்ளித்தரும் ஐப்பசி கார்த்திகை விரதம் மேற்கொள்வது எப்படி?
சில வீடுகளில் பசுவிற்கு பழைய உணவுகளை தானமாக வைத்து புண்ணியம் சேர்ப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் இது பாவத்தையே சேர்க்கும் என சொல்லப்படுகிறது. பசுவைக் கண்டால் மகாலட்சுமி கண்டதாக பொருள் படும் என்பதால் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவில் வாழைப்பழம் அல்லது கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதேபோல் பசுவிற்கு செரிமான பிரச்சனை ஏற்படும் வகையிலான உணவுகளை கொடுத்தால் அதுவும் நமக்கு பின்னடைவை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் நீங்கள் எங்கேயும் பசுவை கண்டு தொட்டு வணங்கும்போது, “ஹர்துவ காமதுகே தேவி சர்வ தீர்த்தா பிஷேசிநீ பாவநீ சுரபிஸ்ரேஷ்ட தேவி துப்யம் நமோஸ்துதே” என்ற மந்திரத்தை துதிபாட வேண்டும். வீட்டில் உள்ள பசுவாக இருந்தால் அதனை வெள்ளிகிழமை தோறும் குளிப்பாட்டி அதன் உடலில் 32 இடங்களில் மஞ்சள் குங்குமம் அமைத்து கொம்புகளில் பூச்சூடி வெள்ளம் கலந்த அரிசி மற்றும் அகத்திக்கீரை கொடுத்து வணங்கினால் பலன்கள் கிடைக்கும் என கருதப்படுகிறது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)