பண வரவு அதிகரிக்கணுமா? லட்சுமியின் அருள் பெருக இதை செய்யுங்கள்!

Goddess Lakshmi: லட்சுமி தேவியை வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. லட்சுமி தேவியை வழிபடுபவர்களுக்கு செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் வாழ்க்கையில் பணம் நெருக்கடியை நீக்க விரும்பினால் வெள்ளிக்கிழமை அன்று மூன்று எளிய பரிகாரங்களை செய்யலாம். அப்படி செய்தால்‌ செல்வங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்

பண வரவு அதிகரிக்கணுமா? லட்சுமியின் அருள் பெருக இதை செய்யுங்கள்!

லட்சுமி தேவி (Photo Credit: Freepik)

Published: 

23 Sep 2024 08:40 AM

ஒவ்வொரு நாளும் இறைவனை வழிபடுவது சிறப்பு. ஆனால் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு உகந்த நாள் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடுபவர்கள் சிறப்பு பெறுகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி மனதார தேவியை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். பொருளாதார பலன் இல்லாதவர்களும், நீண்ட நாட்களாக நிதி நெருக்கடியில் இருப்பவர்களும் வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியை வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமிதேவியை வழிபடும்போது நீங்கள் பின்பற்றக்கூடிய மூன்று எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். இது உங்களின் பண நெருக்கடியை குறைக்க உதவும்.

உங்களை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருங்கள்

உங்களையும் உங்கள் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் இந்த சூழல் உங்களுக்கு நேர்மறையை எண்ணங்களை கொடுக்கிறது. வெள்ளிக்கிழமை வீட்டின் தூய்மையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். லட்சுமி தேவி அழுக்கான இடத்தில் வசிப்பது இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டுப் பொருட்களை நேர்த்தியாகவும் வைத்திருங்கள். குளித்துவிட்டு லட்சுமி தேவியை வணங்குங்கள்.

முன் வாசலில் நெய் தீபம் ஏற்றவும்

வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் பிரதான வாசலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். இது லட்சுமிதேவியை மகிழ்விக்கும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு மா பழங்கள் மற்றும் இனிப்புகளை வழங்க வேண்டும்.

வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள்

வெள்ளிக்கிழமைக்கு வெள்ளை நிறம் உகந்தது. எனவே இந்த நாளில் நீங்கள் வெள்ளை ஆடைகள் அல்லது வெள்ளை பாத்திரங்களை தானம் செய்யலாம். இந்த நாளில் பசும் பாலுடன் சர்க்கரையும் கலந்து சாப்பிடலாம். இந்த சிறிய வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

Also Read: Today Panchangam September 21 2024: புரட்டாசி சனிக்கிழமை.. இன்றைய நல்ல நேரம், ராகு கால விவரம்..

வேறு என்ன செய்யலாம்?

வெள்ளிக்கிழமை மாலையில் குளித்து லட்சுமி தேவியை வழிபடுவது நன்மை தரும். இந்த நாளில் உங்கள் சக்திக்கு ஏற்ப ஏழைகளுக்கு உதவுங்கள். இந்த நாளில் தயிர் சாப்பிடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.இந்த நாளில் நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் தயிர் சாப்பிடலாம். இந்த நாளில் உப்பு தானம் செய்வதும் புண்ணியம் ஆகும். வெள்ளிக்கிழமை அன்று ‘ஓம் ஷூட் சுக்ரை நமஹ’ என்று உச்சரிப்பதும் மங்களகரமானது. பூஜையறையில் லட்சுமிதேவியின் உருவப்படத்தையோ அல்லது சிலையையோ வைத்து, அதற்கு தினமும் தேங்காய் வைத்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டால் லட்சுமி தேவி உடனடியாக வீட்டிற்கு வருகிறார்.

லட்சுமி தேவிக்கு பிடித்தது தாமரை மலர். தாமரை மலரின் விதையில் மாலை செய்து போட்டால் லட்சுமி தேவியை அழைப்பது போன்றாகும். லட்சுமி தேவியின் பிறப்பிடம் கடல் என்பதால், வீடுகளில் சோழிகள் வைத்திருப்பது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.லட்சுமியுடன் விநாயகரை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும். அந்த சிலைகள் வெள்ளியில் இருந்தால் கூடுதல் சிறப்பு.

துளசி என்பது புனிதமாகவும் லட்சுமி தேவி வசிக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. எனவே துளசி முன்பு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். லட்சுமி தேவியின் கணவர் பெருமாளுக்கு பிடித்த சங்கை தெற்கு புறமாக வைத்து அதில் நீர் நிறைந்திருக்கும் படி செய்வது லட்சுமி தேவியை வீட்டுக்கு அழைக்கும் செயலாகும். புல்லாங்குழலை பட்டு நூலில் கட்டி லட்சுமி சிலைக்கு அருகில் வைத்து வழிபட்டால் வீட்டில் ஒற்றுமை நிலவும்.

லட்சுமி தேவி எங்கெல்லாம் குடி இருக்கிறார்?

வீட்டில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்க வேண்டும். சண்டை சச்சரவு போன்ற களகங்கள் இல்லாத வீட்டில் லட்சுமி குடியிருக்கிறார். தனக்கு போக நிறைய தானம் தர்மங்கள் செய்யக்கூடிய வீடுகளில் லட்சுமி தேவி தங்குகிறார். அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடாதவர்கள் மேலும் சாப்பிடுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதவர்கள் இல்லங்களில் லட்சுமி தேவி குடியிருப்பார்.

பெண்கள் செய்ய வேண்டியவை:

கை நிறைய ஜொலிக்கும் வளையல் அணிந்து கொள்வது, மாங்கல்யம், வெற்றி, தலை ஆகிய இடங்களில் மோதிர விரலால் குங்குமம் இட்டுக் கொள்வது, இடது கையால் செல்வத்தை கொடுப்பது அல்லது பெறுவது போன்றவற்றை தவிர்ப்பது,  ஒற்றைக்காலில் நிற்காமல் இருப்பது, அழுக்கான உடைகளை தவிர்ப்பது, கோவில்களில் அமர்ந்து தாலி மாற்றிக் கொள்வது போன்ற செயல்கள் செல்வ வளத்தை அதிகப்படுத்தும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Also Read: Purattaasi 2024: வந்தது புரட்டாசி சனிக்கிழமை.. தென்னிந்தியாவில் உள்ள இந்த 5 விஷ்ணு கோயிலுக்கு மறக்காமல் செல்லுங்க!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!