Kandha Sasti 2024: கந்த சஷ்டி தினத்தில் இந்த தானியத்தை கொண்டு வழிபடுங்கள்! நினைத்த காரியம் நடக்கும்…!

Worship with Millet on Kandha Sasti days: நவம்பர் 2ஆம் தேதியில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆறு நாட்களும் குறிப்பிடப்படும் இந்த தானியங்களை கையில் வைத்துக்கொண்டு என்ன வேண்டுகிறோமோ அது அப்படியே நடக்கும்என்பது நம்பிக்கை.

Kandha Sasti 2024: கந்த சஷ்டி தினத்தில் இந்த தானியத்தை கொண்டு வழிபடுங்கள்! நினைத்த காரியம் நடக்கும்...!

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Published: 

03 Nov 2024 15:47 PM

ஐப்பசி மாதம் அமாவாசை‌ முடிந்ததற்கு பிறகு கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. இது தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இருக்க வேண்டிய விரதம். முருகப்பெருமானின் முக்கியமான விரதங்களில் ஒன்று இந்த கந்த சஷ்டி விரதம். சூரசம்காரனை வதம் செய்வதற்காக கடைப்பிடிக்கப்பட்டது தான் இந்த கந்த சஷ்டி விரதம். எப்படி சூரசம்காரனை முருகன் வதம் செய்தாரோ அதுபோல இந்த கந்த சஷ்டி விரதம் கடைப்பிடித்தால் நமது வாழ்க்கையில் வரும் துன்பங்களுக்கு எதிராக முருகன் வதம் செய்வார். இத்தகைய சிறப்புமிக்க இந்த நாளில் இந்த தானியங்களை வைத்துக் கொண்டு வேண்டினால் சில பயன்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த விரதத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் பின்பற்றுவார்கள். தன் உடல் நிலைக்கு ஏற்றவாறு உண்ணாமல் இருந்து விரதம் இருப்பார்கள். சிலர் பாலும் பழமும் மட்டும் அருந்தி விரதம் இருப்பார்கள். சிலர் மிளகும் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு விரதம் இருப்பார்கள். சிலர் ஏழாவது நாளான சூரசம்ஹார தினத்தில் மட்டும் விரதம் இருப்பார்கள். விரதம் இருந்தாலும் சரி விரதம் இல்லாவிட்டாலும் சரி இந்த தானியத்தை கையில் வைத்துக் கொண்டு முருகனிடம் வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தினை, தினை மாவு:

இந்த ஆறு நாட்களும் தினை அல்லது தினை மாவினை முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். தினை மாவாக இருந்தால் தேனுடன் கலந்து உருண்டையாக பிடித்து தினமும் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். இதை ஆறு நாளும் கட்டாயம் செய்ய வேண்டும். ஆறு நாட்களும் செய்ய முடியாதவர்கள் கடைசி நாளான சூரசம்ஹார தினத்தில் இதை செய்தால் முருகனின் அருள் நமக்கு கிடைக்கும். தினையை அப்படியே படைத்தால் அதை மறுநாள் பறவைகளுக்கு உணவாக அளிக்க வேண்டும்.

Also Read: Kandha Sasti 2024: கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்க முடியவில்லையா? ஆறு நாட்களும் இந்த முறையில் தீபம் ஏற்றுங்கள்…

மாலையில் கைப்பிடி அளவு தினையை வைத்து வழிபாடு செய்துவிட்டால் மறுநாள் காலையில் அந்த திணையை பறவைகளுக்கு  உணவாக அளித்து விட வேண்டும். மீண்டும் மாலையில் கைப்பிடி அளவு திணையை வைத்து வழிபட வேண்டும். இதே போல் ஆறு நாட்களும் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாள் தினையை வைத்து வழிபடும்போது ஒவ்வொரு வேண்டுதல்களை முருகப்பெருமானிடம் முன் வைக்கலாம்.

தினை மாவாக நெய்வேத்தியம் செய்பவர்கள் அதில் கொஞ்சம் ஏலக்காய், தேன் மற்றும் நெய் கலந்து உருண்டையாக பிடித்து படைக்கலாம். படைத்த அந்த தினை மாவு உருண்டையை நாம் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் இதை பயன்படுத்தி ஆறு நாட்களும் முருகப்பெருமானுக்கு மாவிளக்கு ஏற்றி வரலாம்.

இந்த தானிய வழிபாடு செய்வதற்கு முன்பாக முருகப்பெருமானின் படம் இருந்தால் அதை துடைத்து சுத்தம் செய்து பூஜை அறையில் சிறப்பாக மனப்பலகையில் அமர வைத்து மஞ்சள் குங்குமம் வைத்து முருகனுக்கு பிடித்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். முருகரின் சிலை இருந்தால் பால், பஞ்சாமிருதம், விபூதி, பன்னீர், தேன் போன்ற பொருள்களை பயன்படுத்தி அபிஷேகம் செய்யலாம்.

Also Read: Kandha Sasti: கந்த சஷ்டி விரதத்தின் போது எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்???

இந்த ஆறு நாட்களும் முருகனுக்கு பிடித்த ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை செய்து படைக்க வேண்டும். முருகப்பெருமான் ஒரு இனிப்பு பிரியர். எனவே அவருக்கு இனிப்பில் ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை செய்து வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கேசரி, சர்க்கரை பொங்கல், கற்கண்டு பால் நாளைக்கு மூன்றில் ஏதாவது ஒன்றை படைத்து விடுங்கள்.

இந்த ஆறு நாட்களும் அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். வீட்டில் மாவிளக்கு போட்டாலும் கூட முருகர் கோயிலுக்கு சென்றும் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற இனிப்புகளை வாங்கி கொடுங்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?